என் மலர்
இந்தியா
- கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டாட்டூவை வைத்து அடையாளம் காணப்பட்டார்.
- தனது மனைவி, தாய், சகோதரன் மற்றும் சகோதரியின் உதவியுடன் வீசியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நிஷத்புரா பகுதியில் கமல் நகர் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை, இங்குள்ள ஒரு செப்டிக் டேங்கிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
செப்டிக் டேங்கிற்குள் சோதனை செய்தபோது, ஒரு இரும்புப் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
பெண்ணின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டாட்டூவை வைத்து அவர் மகாராஷ்டிர மாநிலம் கோண்டியாவைச் சேர்ந்த அஷ்ரபி என்று அடையாளம் காணப்பட்டார்.
போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

மத்தியப் பிரதேசத்தை சமீர் கான் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும், அஷ்ரபிக்கும் ஓராண்டிற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அஷ்ரபி போபாலில் சமீருடன் வசித்து வந்துள்ளார்.
ஏற்கனவே திருமணமான சமீரைத் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அஷ்ரபி வற்புறுத்தியதாகவும், பணம் தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சமீர், கடந்த பிப்ரவரி 7 இல் அஷ்ரபியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு, தனது மனைவி, தாய், சகோதரன் மற்றும் சகோதரியின் உதவியுடன் சடலத்தை ஒரு இரும்புப் பெட்டிக்குள் திணித்து, வீட்டின் அருகே இருந்த செப்டிக் டேங்கிற்குள் சமீர் வீசியுள்ளார்.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி சமீர் கான் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 160 கி.மீ வேகத்தில் சொகுசு கார் சென்றது.
- உங்கள் மகன்களின் உடல்களை அடையாளம் காட்ட வாருங்கள்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஹோஸ்கோட் பகுதியின் கம்பளிபுரா கேட் சேட்டிலைட் ரிங் ரோட்டில் நடந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
நேற்று அதிகாலை 5:15 மணியளவில் 160 கி.மீ வேகத்தில் வந்த வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ககன் (26) என்பவர் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் ககன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பைக் மீது மோதிய வேகத்தில், கார் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியது. சாலையோர தடுப்புச் சுவரில் மோதிய கார், சுமார் 150 மீட்டர் தூரத்திற்குத் தேய்த்துக் கொண்டே சென்று நின்றது. இதில் கார் அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்தது.
காரில் பயணம் செய்த 16 வயதுடைய அஹ்ரம் ஷெரீப் , 17 வயது அயன் அலி, பாரத், அஸ்வின் நாயர், ஈதன் ஜார்ஜ் , முகமது ஷேக் ஆகிய 6 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த சிறுவர்களின் வீட்டுக்கு தகவல் தர போலீசார் போன் செய்தபோது பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தேர்வு நெருங்குவதால் தங்கள் மகன்கள் வீட்டின் அறையில் படித்துவிட்டு, உறங்குகிறார்கள் என்று நினைத்திருந்த பெற்றோர், "உங்கள் மகன்களின் உடல்களை அடையாளம் காட்ட வாருங்கள்" என்று போலீசார் கூறியபோது அதிர்ச்சி அடைந்தனர்.
பெற்றோர் மகன்களின் அறைக்கு சென்று பார்த்தபோது படுக்கைகள் காலியாக இருந்துள்ளன. அப்போதுதான் தங்கள் மகன்கள் தங்களுக்கு தெரியாமல் வெளியே சென்றதை அவர்கள் உணர்த்தனர்.
உயிரிழந்த சிறுவர்களில் ஒருவனான அயன் அலி தனது தந்தையின் காரில் ஐவரையும் அழைத்துச் சென்றுள்ளது தெரியவந்தது. 6 மாதத்திற்கு பின்புதான் அந்த காரை தந்தை வாங்கியிருந்த நிலையில் அயன் அதை வெளியே எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறான்.
மருத்துவமனையில் உடல்களை அடையாளம் காண வந்த பெற்றோரில் ஒருவர் கூறுகையில், வெளியே செல்லக் கூடாது என்று கண்டிப்புடன் கூறி நள்ளிரவிலும் அறைக்குச் சென்று கண்காணித்துக் கொண்டேதான் இருந்தோம்.
ஆனால், அதிகாலையில் எழுந்து பார்த்தால் மகனைக் காணவில்லை. வந்துவிடுவான் என்றுதான் எண்ணியிருந்தோம். ஆனால் போலீசிடம் இருந்து தகவல் தான்வந்தது என்றார்.
- ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேரு எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
- சுப்ரீம் கோர்ட் நீதிபதி விவியன் போசுக்கு நேரு எழுதிய மன்னிப்புக் கடிதத்தைப் பகிர்ந்தார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் பொது செயலாளரான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நிர்வாகத்துறை, நீதித்துறை இடையிலான உறவுகள் அதிகம் பேசப்படுகிறது. 1959, ஜூன் 26 அன்று அப்போதைய பிரதமர் நேரு சுப்ரீம் கோர்ட் நீதிபதி விவியன் போசுக்கு எழுதிய ஒரு அசாதாரண மன்னிப்புக் கடிதத்தைப் பகிர்ந்துள்ள அவர், நேரு சிறந்த நிறுவன கட்டமைப்பாளர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் நேரு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், கடந்த பல நாட்களாக நான் தொடர்ந்து பயணத்தில் இருக்கிறேன். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நான் தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பாக உங்களுக்கு எழுதுவது எனது நோக்கமாக இருந்தது. ஆனால் எனது பயணம் காரணமாக, என்னால் அதை செய்ய முடியவில்லை. கல்கத்தா வழக்கறிஞர் சங்க செயலாளரிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது.
அதில் உங்களைப் பற்றி நான் தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து வழக்கறிஞர் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அனுப்பியிருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் நான் தெரிவித்த கருத்துகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் கருத்துக்கள் முறையற்றவை என்பதை நான் உணர்கிறேன். என்னிடம் கேள்வி கேட்கப்பட்ட நேரத்தில் வேறு பல விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். நான் செய்த இந்தச் செயலுக்கு நீங்கள் என் மன்னிப்பை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என எழுதியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.
- ரசாயனத் திரவத்தை அவர்கள் அருந்தியதாகக் கூறப்படுகிறது.
- குடித்த சிறிது நேரத்திலேயே 4 பேரின் உடல்நிலை மோசமடைந்தது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஆலோலி கிராமத்தில் திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவில் பாத்திரம் சுத்தம் செய்யும் ஒப்பந்த வேலையை ரத்தன், சுஷிலா தேவி, ஜம்னி தேவி மற்றும் பதாமி தேவி ஆகிய 4 பேரும் செய்தனர்.
வேலை முடிந்ததும் அங்கிருந்த பாத்திரம் கழுவும் திரவத்தை மது என நினைத்து, அவர்கள் தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
நேற்று இரவு அந்த ரசாயனத் திரவத்தை அவர்கள் அருந்தியதாகக் கூறப்படுகிறது. குடித்த சிறிது நேரத்திலேயே 4 பேரின் உடல்நிலையும் மிக மோசமடைந்தது. இதில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பதாமி தேவி என்ற பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்துயர சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் ரசாயனத் திரவத்தை மது என நினைத்து குடித்ததே மரணத்திற்கு காரணம் என தெரிய வந்தது.
- 3 மாவட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
- கடந்த சில நாட்களாக கடுமையான வகையில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபேக் மாவட்டத்தில் திடீரென ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேரை மிதித்துக் கொலை செய்துள்ளது.
சட்டவிரோத சுரங்கங்கள், வளர்ச்சிக்காக காடுகளை அழித்தல் போன்றவற்றால் காட்டில் இருக்கும் யானைகள் உணவுக்காக ஊருக்குள் நுழைகின்றன. அவ்வாறு நுழையும் யானைகள் மக்களை கொடூரமாக மிதித்து கொலை செய்யும் சம்பவம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
சுர்சு பிளாக்கில் உள்ள கோந்த்வார் கிராமத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு யானைக் கூட்டம் நுழைந்தது. ஊருக்குள் நுழைந்த யானைக் கூட்டம் வீடுகளை இடித்து சூரையாடியது. இதனால் வீட்டில் இருந்த மக்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். இருந்தாலும் வீட்டில் இருந்து ஓடி தப்பிக்க முயன்ற மக்களை யானைக் கூட்டம் தாக்கியது.
இதில் இன்று அதிகாலை ஒரே குடும்பத்த சேர்ந்த 4 பேரை யாரைக் கூட்டம் மிதித்து கொன்றன. மேலும் இருவரையும் மிதித்து கொன்றன. ஒரு குழந்தை படுகாயத்துடன் உயிர் பிழைத்தது. அதை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
போகாரா, ராம்கார்க், ஹசாரிபேக் மாவட்டங்களில் காட்டு யானைகள் பிளறிக் கொண்டு அட்டகாசம் செய்து வருவதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக நாங்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தோம். துரதிருஷ்டவசமாக மக்கள் அவர்களுடைய வீட்டில் இருந்து வெளியேறும்போது, 6 பேரை மிதித்துக் கொன்றுள்ளது.
- A.R.Rahman's- The Wonderment Tour இன்னிசை கச்சேரி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
- சென்டிரலில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு கடைசி ரெயில் புறப்படும் எனத் தகவல்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள Nehru Outdoor Stadium வளாகத்தில், நாளை 14.02.2026 A.R.Rahman's- The Wonderment Tour இன்னிசை கச்சேரி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான Noise and Grains Private Limited உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.
Noise and Grains Private Limited ஆனது A.R.Rahman's - The Wonderment Tour இசை நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு மெட்ரோ ரெயிலில் இலவசமாகப் பயணம் செய்ய ஸ்பான்சர் செய்கிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும் தனித்தனி நிகழ்ச்சி நுழைவு சீட்டானது (Event Ticket) மெட்ரோ பயண சீட்டாகவும் (Metro Ticket) செயல்படும்.
பயனாளர்கள் இந்த நுழைவு மெட்ரோ பயண சீட்டை நிகழ்ச்சி நடைபெறும் நாளான 14.02.2026 அன்று ஒரு சுற்று பயணத்திற்கு மட்டும் பயன்படுத்தலாம் (2 நுழைவு, 2 வெளியேறு).
இந்தப் பயணச் சீட்டு வைத்திருப்பவர்கள், சென்னையிலுள்ள எந்தவொரு மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்தும் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் வரை சென்று வரலாம். இதற்கு, மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி வாயில்களில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் QR-ஐ ஸ்கேன் செய்யலாம்.
நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு, சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரெயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am – 15.02.2026), வழித்தடம் 1-ல் (நீலவழித்தடம்) விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி ரெயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am – 15.02.2026), பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையம் வரை செல்லும் கடைசி ரெயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am – 15.02.2026), புறப்படும்.
பயணிகள் கடைசி ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பிரத்யேக சலுகையைப் பயன்படுத்தி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று, தடையில்லா பயணத்தை அனுபவிக்கும்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும், மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் இதுபோன்ற ஒத்துழைப்பை வழங்க சென்னையில் உள்ள மற்ற பெரிய நிகழ்வு அமைப்பாளர்களையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அழைக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு குறித்த பரிந்துரையை நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
- வழக்கு விசாரணையின் தற்போது நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு குகி- மெய்தி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான வீடுகள் தீ வைத்து கொழுத்தப்பட்டன. மக்கள் சொந்த வீடுகளை இழந்து அண்டை மாநிலங்களுக்கும், முகாம்களுக்கும் தப்பி ஓடினர். இந்த வன்முறை தொடர்பாக 11 வழக்குகளை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான நீதிபதி ஜாய்மால்யா பாக்சி கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "11 எப்.ஐ.ஆர். தொடர்பாக விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டனர்.
மேலும், நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான கமிட்டி பரிந்துரை செய்த மறுவாழ்வு மற்றும் நலத்திட்டம் ஆகியவற்றை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில மற்றும் மத்திய அரசை கேட்டுக்கொண்டனர்.
அத்துடன் வழக்கை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- தெலுங்கானாவில் நகராட்சி தேர்தல் நடைபெற்றது.
- காங்கிரஸ் வேட்பாளர் பணம் மற்றும் குக்கர்கள் வழங்கிய நிலையிலும் தோல்வியடைந்தார்.
தெலுங்கானா மாநிலத்தில் நகராட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான வார்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அஸ்வராவ்பேட்டா என்ற நகராட்சியிலும் தேர்தல் நடைபெற்றது. இங்குள்ள 10-வது வார்டில் காங்கரிஸ் கட்சி போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர், வாக்கு சேகரித்தபோது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் சமையல் குக்கர் போன்ற பரிசுப்பொருட்களை வழங்கியுள்ளார்.
ஆனால், தேர்தலில் அவர் தோல்வியடைந்துள்ளார். இதனால் விரக்தி ஏற்பட்டுள்ளது. தனக்கு வாக்களிப்பாளர்கள் என்று பரிசுப் பொருட்கள் வழங்கினேன். ஆனால் எனக்கு வாக்களிக்கவில்லை. இதனால் வாக்காளர்கள் தான் வழங்கிய பரிசுப் பொருட்களை திரும்ப வழங்க வேண்டும் என்று கூறியதாக செய்திகள் பரவியது.
இதனால் 10-வது வார்டு வாக்காளர்கள் கடும் கோபம் அடைந்தனர். அவர்கள் குக்கருடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.
நாங்கள் ஒருபோதும் பணமே அல்லது குக்கரோ கேட்கவில்லை. இப்போது நாங்கள் ஏன் அவமானப் படுத்தப்படுகிறோம். என வாக்காளர்கள் கேட்டனர்.
இந்தக் கோரிக்கையால் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாகவும், வேட்பாளர் தங்களை மிரட்ட முயற்சிப்பதாகவும் குடியிருப்பாளர்கள் குற்றம்சாட்டினர்.
போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து பதற்றத்தை தனித்தனர்.
- 448 வார்டுகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி 240 வார்டுகளில் வெற்றிபெற்றது.
- பி.ஆர்.எஸ் 140 வார்டுகளிலும், பா.ஜனதா 37 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.
தெலுங்கானாவில் நேற்று முன்தினம் 116 நகராட்சிகளில் உள்ள 2,582 வார்டுகளுக்கும், 7 மாநகராட்சிகளில் உள்ள 414 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
இன்று மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 448 வார்டுகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி 240 வார்டுகளில் வெற்றிபெற்றது.
பி.ஆர்.எஸ் 140 வார்டுகளிலும், பா.ஜனதா 37 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் பல வார்டுகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
- நாடாளுமன்றத்தை சீர்குலைக்க ஒவ்வொரு நாளும் புதிய சாக்குப்போக்கு கண்டுபிடிக்கப்படுகிறது.
- இது அவர்களுடைய அடையாளமாக மாறிவிடும்.
பட்ஜெட் தொடர்பான முதல் கட்ட அமர்வு இன்றுடன் நிறைவடைந்தது. இரு அவைகளிலும் முன்னாள் தலைமை ராணுவ தளபதி எழுதியுள்ள புத்தகத்தில் சீனா குறித்த கருத்து இடம் பெற்றுள்ளதாக ராகுல் காந்தி பேச வந்த விவகாரம், இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பின. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. பெரும்பாலான நாட்களில் அவைகள் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் அவையை சீர்குலைக்க எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புதிய சாக்குப்போக்குகளை கண்டுபிடிக்கிறார் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சத்தியுள்ளார்.
இது தொடர்பாக தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தை சீர்குலைக்க ஒவ்வொரு நாளும் புதிய சாக்குப்போக்கு கண்டுபிடிக்கப்படுகிறது. இது நீண்ட காலத்திற்கு காங்கிரஸ் கட்சியின் பணியாக இருக்காது. அவர்களுடைய அடையாளமாக மாறிவிடும். ஒவ்வொரு செசனிலும் ஒரு ஸ்கிரிப்ட் காரணமாக கூச்சல் குழப்பம், பொய்கள், வேண்டுமென்றே பாராளுமன்ற விதிமுறைகள் மீறப்படுகின்றன.
எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி கூட, பொறுப்பை விட குழப்பத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
பொய்களைப் பேசி, அவற்றையே திரும்பத் திரும்பச் சொல்லும் அரசியல் இனி அவருக்கு ஒரு பழக்கமாகவே இல்லை. அரசியல் அடையாளம். ராகுல் காந்தியை இந்திய அரசியலில் அவநம்பிக்கையின் அடையாளமாக மாற்றியுள்ளது. ராகுல் காந்தியும் காங்கிரசும் அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம், ஜனநாயக அமைப்பு, நாடாளுமன்ற நடைமுறைகள் அல்லது மக்களின் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல.
இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
- இந்தியா- அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி.
- அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. அத்துடன் முதற்கட்ட அமர்வு நிறைவு பெற்றது.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரின் முதல் அமர்வின் கடைசி நாளான இன்று மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் மறைந்த முன்னாள் எம்.பி. பகவன்தாஸ் ரத்தோருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி கோஷமிட்டனர். அமெரிக்காவை சேர்ந்த எப்ஸ்டீன் கோப்புகளில் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம்பெற்றதாக கூறி அவர் ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகளின் அமளியால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதனால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
மதியம் 12 மணிக்கு சபை கூடியபோது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினர். இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு நிறைவடைந்தது. 3 வார விடுமுறைக்குப் பிறகு மக்களவை வருகிற மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் மத்திய பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு மத்திய அமைச்சகங்களுக்கான ஒதுக்கீடுகளை நிலைக்குழுக்கள் ஆராயும்.
இதற்கிடையே அமெரிக்காவின் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் ஆவணங்களில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம்பெற்றதை அடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என்று கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அவர்கள் ஹர்தீப் சிங் பூரி மற்றும் எப்ஸ்டீனின் படங்களுடன் கூடிய பெரிய பதாகையையும் வைத்திருந்தனர். மத்திய மந்திரிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அதேபோல் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் முதல்கட்ட அமர்வு நிறைவடைந்தது. 3 வார விடுமுறைக்குப் பிறகு மாநிலங்களவை வருகிற மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- அங்கித் சவுகானை விசாரணைக்காக சந்தியா அடிக்கடி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டார்.
- மதுபான கடை கொள்ளை வழக்கில் சிறைக்கு சென்ற அங்கித் சவுகான் சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம் பாசுமா பகுதியை சேர்ந்தவர் சந்தியா பரத்வாஜ். காவலாளியான இவர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். அதேப் பகுதியை சேர்ந்தவர் அங்கித் சவுகான். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.
அங்கித் சவுகானை விசாரணைக்காக சந்தியா அடிக்கடி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த நிலையில் மதுபான கடையில் நடந்த திருட்டு வழக்கில் அங்கித் சவுகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே சந்தியாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். முசாபர் நகரை சேர்ந்த போலீஸ்காரரான அதுல் சர்மா என்பவருக்கும், சந்தியாவுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இரு வீட்டாரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து முடித்தனர்.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து வந்தது. இதற்கிடையே மதுபான கடை கொள்ளை வழக்கில் சிறைக்கு சென்ற அங்கித் சவுகான் சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார். இதனையறிந்த சந்தியா காதலனை கரம்பிடிக்க முடிவு செய்தார். கடந்த சனிக்கிழமை சந்தியாவும், அங்கித் சவுகானும் வீட்டை விட்டு வெளியேறினர். மகள் வீட்டில் இல்லாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
சந்தியாவை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அவர்களால் சந்தியா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தியாவின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. போலீசார் சந்தியாவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சந்தியா தனது காதலனுடன் பக்சர் நகரில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் சந்தியா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சந்தியா தன்னை யாரும் கடத்தவில்லை. அங்கித் கவுகானுக்காக தானே வீட்டை விட்டு வெளியேறி வந்ததாக தெரிவித்தார்.
போலீசார் அங்கித் சவுகான் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அதனால் அவரை பிரிந்து வர வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் சந்தியா அவர் மீது வழக்குகள் இருந்தாலும் அவரைத்தான் நான் காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். என்னால் அங்கித் சவுகானை விட்டு பிரிந்து வர முடியாது என பிடிவாதமாக தெரிவித்தார். இதனால் சந்தியாவின் திருமணம் நிறுத்தப்பட்டது.






