என் மலர்
தேர்தல் செய்திகள்
கரூர், ஏப். 6-
கரூர் பாராளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பா ளரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் மாயனூரில் பிரசா ரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
எதிரணியில் ஆளும் கட்சி சார்பில் நிற்கும் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தம்பிதுரைக்கு செல்லும் இடங்களில் எல் லாம் மக்கள் எவ்வாறு வர வேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பார்த்திருப்பீர்கள். காரணம், தொகுதிக்கு எதுவும் செய்யாத பாராளுமன்ற உறுப்பினர். அவர் தத்தெ டுத்த கிராமத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் குறைபாடு. எவ்வளவோ மக் கள் பிரச்சினைகள் இருக்கி றது.
அதையெல்லாம் விட்டு விட்டு துணை சபாநாயகர் அந்தஸ்தில் இருப்பவர் தன் னையும், தன் குடும்பத்தை யும், தனது தொழிலையும் வளப்படுத்தி கொள்வ தற்கா கத்தான் இந்த பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் பத வியை பயன்படுத்துகிறார். அவரை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும்.
தி.மு.க. கூட்டணியில் காங் கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார். காங்கி ரஸ் கட்சி கடந்த 40 ஆண் டுகளில் தமிழகத்திற்கு என்ன செய்தது. 2004-ல் இருந்து 2014 வரை ஆட்சியில் இருந்த போது நமதுஜீவாதார பிரச் சினையாகிய காவேரி பிரச் சினையில் கூட காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் சொல்கிறார், நான் செல்போனில் பேசியே ராகுல் காந்தியிடம் எல்லா திட்டங்களையும் பெற்று தரு வேன் என்கிறார்.
அந்த காங்கிரஸ் வேட்பா ளர் உங்கள் ஊருக்கு வாக்கு கேட்க வந்தால் அவரிடம் நீங்கள் கேளுங்கள். நீங்கள் செல்போன் மூலம் ராகுல் காந்தியிடம் சொல்லி கர்நா டகாவில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் சிவக்குமார், காவேரி அணை யின் குறுக்கே மேகதாது அணைகட்டுவேன் என பிடி வாதம் பிடிக்கிறாரே, அதனை தடுத்து நிறுத்த சொல்லுங்கள் என்று அவரிடம் கேளுங்கள்.
தமிழக மக்களை எல்லாம் ஏமாற்றி வாக்கு வாங்கி வென்று விடலாம் என்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. தேசிய கட்சிகளை நம்பி பயன் இல்லை என்பதால்தான் கடந்த 2014 தேர்தலில் ஜெய லலிதாவை மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள்.
அவர் உயிரோடு இருந்த வரை தமிழகத்தை பாதிக் கின்ற, குறிப்பாக விவசா யத்தை பாதிக்கின்ற எந்த வொரு திட்டத்தையும் அனு மதிக்கவில்லை. நீதிமன்றத் தில் போராடித்தான் காவேரி மேலாண்மை வாரி யம் அமைப்பதற்கான தீர்ப் பினை ஜெயலலிதா பெற்று தந்தார்.
அவரது மறைவிற்கு பிறகு கையாலாகாத பழனி சாமி அரசு, மோடிக்கு பயந்து கொண்டு சரியாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தால் அந்த திட்டம் இன்றைக்கு காவேரி மேலாண்மை ஆணையமாக வந்திருக்கிறது. இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு தேவையான குடிநீரைபெற்று தருவதற்கு இன்னும் மோடி அரசு அதனை சரியாக பயன் படுத்தவில்லை.
போதாக்குறைக்கு மேக தாதுவில் அணை கட்டுவேன் என்று அங்கே கர்நாடகா முயற்சி செய்கின்ற போது அதற்கும் மறைமுகமாக மோடி அரசு ஆதரவு அளிக் கிறது. காரணம் , தமிழ்நாட் டில் தேசிய கட்சிகளான காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக் கும் செல்வாக்கு இல்லை. கர்நாடகாவில்தான் அவர்க ளுக்கு வாய்ப்பிருக்கிறது. ஆட்சி அமைக்க முடியும் என்ற காரணத்தினால் தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளை கூட அவர் கள் நிராகரிக்கிறார்கள்.
இது போன்று தமிழகத்தை வஞ்சிக்கின்ற தேசிய கட்சி களை புறக்கணிப்பதன் மூலம் தான் தமிழ்நாட்டு உரிமைக்காக போராடும் மாநில கட்சியை ஆதரிப்பதன் மூலம்தான் உங்களது தேவையை டெல்லியில் போராடி பெற்றுத்தர முடி யும். அதனால்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்த தேர்தலில் போட்டியிடு கிறது.
விவசாயத்தை அழித்து தமிழ்நாட்டை பாலைவன மாக்க வேண்டும். இங் குள்ள மக்கள் எல்லாம் வேறு மாநிலத்திற்கு அகதிகளாக செல்லவேண்டும். விவசா யத்தை அழித்து நிலங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொடு த்திட நினைக்கிறார்.தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடியின் ஆட்சியை முடி வுக்கு கொண்டு வரவும், தமிழ்நாட்டை கடந்த காலங் களில் வஞ்சித்து தமிழக நலன்களை செய்யாத காங்கிரஸ் கட்சியையும் புறக்கணிக்கும் விதமாக தக்க பாடம் புகட்டவேண்டும்.
தமிழகத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக கொடுத்து வரும் தொல்லைகள் தெரி யும். பழனிசாமி போலவோ, பன்னீர்செல்வம் போலவோ நாம் அவர்களுக்கு அடி பணிய வில்லை, மண்டியிடவில்லை என்ற காரணத்தினால்தான் நமது இயக்கத்தை அழிக்க பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி. முனுசாமி, சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறங்கும் போதும், நடக்கும் போதும் ஸ்டாலின் முதலமைச்சர் கனவு காண்கிறார். என்னையும் முதல்வரையும் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார்.
அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுகவை முடித்து வைக்கப்போவது, அக்கட்சியின் இப்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் தான். ஏனென்றால் அவரது செயல்பாடுகள், பேச்சுக்கள் அந்த அளவிற்கு மகா மட்டமாக இருக்கின்றன. என்ன பேச வேண்டும், என்ன பேசக்கூடாது? என்பதே அவருக்கு தெரியவில்லை. தைலாபுரம் தோட்டத்தில் நாங்கள் அரசியல் பயிலரங்கம் நடத்துகிறோம். அவர் விரும்பினால் அங்கு வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #MKStalin #Ramadoss
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.
இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கள்ளக்குறிச்சி இன்று மக்கள் குறிச்சியாக மாறி இருப்பதை நான் பார்க்கிறேன். திரும்பும் திசையெல்லாம் மக்கள் திரண்டு வந்துள்ள எழுச்சியை நான் காண்கிறேன். மத்தியில் நடக்கும் ஆட்சியை அகற்றிட வேண்டும், மாநிலத்தில் நடக்கும் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக திரண்டு உள்ளீர்கள்.
மத்தியில் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ராகுல்காந்தி பிரதமராக அமரும் நேரத்தில் ஒரே நொடியில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தூக்கி எறியப்படும்.
மோடியும், எடப்பாடியும் ஒருநாள் கூட பதவியில் தொடர யோக்கியம் இல்லாத நிலையில் உள்ளனர்.
சாதாரண, சாமானிய மக்கள் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.
கலைஞரை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் சாமானியர்களுக்காக குரல் கொடுத்து போராடி இருக்கிறார். ஆட்சி பொறுப்பில் இருந்தபோது பல்வேறு சாதனைகளை நிறைவேற்றி தந்துள்ளார்.
சமூக நீதி திட்டங்களை கொண்டு வந்து பாதுகாத்த தலைவர் தான் கலைஞர். இன்று அ.தி.மு.க.வுடன் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. இணைந்துள்ளது. அரசியல் ரீதியாக ஒரு கட்சி மாறுபாடு எடுப்பது தவறல்ல, அது எதார்த்தம். அதுபற்றி நான் விமர்சிக்க தயாராக இல்லை.
ஆனால் வன்னியர்களுக்கு தி.மு.க. என்ன செய்தது என்று ராமதாஸ் கேட்கிறார். தனிப்பட்ட முறையில் அவருக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. ஏனெனில் டாக்டர் ராமதாஸ் கலைஞருக்கு அளித்த பாராட்டையே சாட்சியாக வைத்து கூறுகிறேன்.
2006-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி கோனேரிகுப்பம் கிராமத்தில் வன்னியர் சங்க வெள்ளிவிழா மாநாடு நடந்தது. அதில் டாக்டர் ராமதாஸ், தலைவர் கலைஞருக்கு வெள்ளி செங்கோல் ஒன்றை பரிசாக கொடுத்து பேசினார். அப்போது அவர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 பேருக்கு நன்றி சொல்கிறேன். அடுத்து கலைஞருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இட ஒதுக்கீட்டிற்காக நாங்கள் போராடினோம், போராடிக்கொண்டே இருந்தோம். அன்று முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை சந்திக்க முயற்சி செய்தும் முடியவில்லை. பின்னர் கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் என்னை அழைத்து பேசினார். அதன்பிறகு இட ஒதுக்கீட்டை தருவதாக கூறி அதற்கான உத்தரவை கலைஞர் போட்டார். அதற்காக நன்றியை தெரிவிக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், இடஒதுக்கீடு தரவில்லை என்றால் இன்று கூலி வேலை செய்துகொண்டு ஓட்டுப்போடுகிற ஒரு சமுதாயத்தை சேர்ந்தவராகவே இருந்து இருப்போம். அதை மாற்றிய பெருமை கலைஞரை சேரும் என்றும் பாராட்டியவர் டாக்டர் ராமதாஸ்.
இப்படி பேசிவிட்டு, இப்போது தி.மு.க. என்ன செய்தது என்கிறார். மேலும் இந்த தேர்தலோடு தி.மு.க. முடிந்து விடும் என்கிறார். இப்படி பேசுவது அவருக்கு வாடிக்கை, இதை கேட்பது மக்களுக்கு வேடிக்கையாகும்.
அவர் பல்வேறு சமயங்களில் அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசிவிட்டு, இப்போது நான் பேசுகிறேன் என்று பேசி வருகிறார். ஜெயலலிதா பற்றி உங்களை விட கேவலமாக பேசியவர் யாராவது உள்ளனரா?. அதையெல்லாம் இப்போது பேசி எனது கவுரவத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை.
இப்போது அரசியல் லாபத்திற்காக போய் சேர்ந்து இருக்கலாம். அதற்காக வரலாறை மறைத்துவிட வேண்டாம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு கலைஞர் என்ன செய்துள்ளார் என்பதை அந்த சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பாராட்டி கொண்டு இருக்கின்றனர். ராமதாசிடம் இருந்து பாராட்டு பத்திரத்தை எதிர்பார்க்க மாட்டோம், தேவையும் இல்லை.
மதம், சாதியினால் பிளவு ஏற்படுத்தி அரசியல் லாபம் பெறுபவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி தருவார்கள். இதற்காக வருகிற 18-ந்தேதி அந்த சாட்சியை நிரூபிக்க உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தன்னை எம்.ஜி.ஆர் மாதிரி நினைத்து புறப்பட்டுள்ளார். உங்கள் ஆட்சி கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆட்சியில் என்ன செய்துள்ளோம் என்று சொல்லும் தெம்பு, திராணி, அவர்களுக்கு இருக்கிறதா?.
நான் ஒரு விவசாயி என்றும், இந்த விவசாயி நாட்டை ஆளுவது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். விவசாயி நாட்டை ஆளும் போது அதை நான் மனப்பூர்வமாக ஆதரிப்பேன். ஆனால் அவர் ஒரு விஷவாயு. கஜாபுயல் அடித்து வாழ்வாதாரத்தை இழந்த அந்த மக்களை இந்த விவசாயி சந்தித்தாரா. எட்டு வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் 8 வழிச்சாலைக்கு ஆதரவாக தான் இந்த விவசாயி இருக்கிறார். விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமி, தன்னை விவசாயி என்று கூற அருகதை இல்லை.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஒரு பிறந்த நாள் விழாவில் ஒரு ரவுடி வீச்சரிவாளால் கேக் வெட்டினார். அதேபோல் இன்று எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலத்தில் ரவுடிகள் ஒன்று சேர்ந்து கத்தியால் கேக் வெட்டும் காட்சி வெளியாகி உள்ளது. சட்டம்-ஒழுங்கு எப்படி உள்ளது என்பதை இதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
பொள்ளாச்சியை விட கொடுமையான சம்பவம் நாட்டில் நடந்துள்ளதா. இதில் யார் பின்னால் இருந்து இயக்கினார்?. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன். நானும் தொடர்ந்து பேசுகிறேன். என் மீது வழக்குப்போடவில்லை. ஏனெனில் ஆதாரங்கள் அப்படி சிக்கி உள்ளது. 6 மாதத்திற்கு முன்பு பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்கள் காரில் பெண்களை கடத்தி சென்ற போது, தப்பிப்பதற்காக காரில் இருந்து குதித்த ஒரு பெண் இறந்துள்ளார். இதுவரையில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். 7 ஆண்டுகளாக போலீசே அங்கு கிடையாதா. 7 ஆண்டுகளாக நடந்த இந்த கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக தான் உங்களை தேடி நாடி வந்துள்ளேன்.
நமது குடும்பத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தால் எப்படி துடிதுடித்து போய் இருப்போம். 200-க்கும் மேற்பட்ட பெண்களின் பெற்றோரின் நிலை என்ன என்று நினைத்து பாருங்கள். இதில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் தொடர்புடையவர்கள் யார் யார்? என்று கண்டுபிடித்து அத்தனை பேரையும் சிறையில் போடுவது தான் தி.மு.க.வின் முதல் வேலை.
அதேபோல் தான் ஜெயலலிதாவின் இறப்பில் தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதா பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கிறார். கொள்கை ரீதியில் கருத்துவேறுபாடு இருந்தாலும், நாட்டின் முதல்-அமைச்சர் அவர் என்பதாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதாலும் எனக்கும் சேர்த்து அவர்தான் முதல்-அமைச்சர். ஆகவே நான் பேசக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு தகுதி கிடையாது.
வாரிசுக்கு வாய்ப்புகள் கொடுக்கலாமா என்று செய்திகள் வருகிறது. தகுதியின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்னை சொல்லவில்லையா, சொன்னவர்கள் என்ன நிலையில் உள்ளார்கள். ஏன் வாரிசுக்கு சீட் கொடுக்க கூடாது.
இவ்வாறு அவர் பேசினார். #Loksabhaelections2019 #MKStalin #Edappadipalaniswami
மதுரை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது நாளாக தேர்தல் பிரசாரம் செய்தார்.
இன்று காலை மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேனி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார்.
அம்மாவின் அரசு விவசாய மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை தந்து வருகிறது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து வருகிறார். ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது. அதுபோல இப்போது நாங்களும் சொல்கிற திட்டங்களை நிச்சயம் செய்து முடிப்போம்.

இதற்காக ரூ.7½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அணையை மேலும் பலப்படுத்தும் பணிகள் நடத்தப்படுகிறது. அணையை பலப்படுத்தும் பணிக்கு கேரள அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது. 2 படகுகளில் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி கேட்டோம். ஒரு படகுக்கு மட்டுமே அனுமதி தந்துள்ளனர்.
அணைக்கு செல்லும் வழியில் உள்ள மரங்களை அகற்றவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் நலன் பெற எந்த தியாகத்தையும் செய்ய அ.தி.மு.க. அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். #Loksabhaelections2019 #EdappadiPalaniswami #ADMK #TNFarmers
கோவை சிங்காநல்லூர் தொகுதி பறக்கும்படை அலுவலர் செல்வராஜ் தலைமையிலான அலுவலர்கள் புலிய குளம் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த ஒரு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் ஏராளமான துணிப்பைகளில் மொத்தம் 149 கிலோ எடை கொண்ட தங்க பிஸ்கட்டுகள் இருந்தது. வேனில் இருந்த ஊழியர்களிடம் விசாரித்த போது, புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் தங்க கட்டிகளை மொத்தமாக வாங்கி பெரியகடைவீதி, டவுன் ஹால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைகடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக கொண்டு செல்லப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இவற்றின் மொத்தமதிப்பு ரூ.44 கோடி ஆகும்.
இதுகுறித்து வருமான வரித்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துவெங்கட் ராம் தலைமையில் ஏராளமான நகைக்கடைக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.
இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. உரிய ஆவணங்களை காட்டினால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
149 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறை, சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விசாரணை நடத்தினர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளுக்கு ஆவணங்கள் இருப்பதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறி உள்ளது. இன்று காலை ஆவணங்களை கொண்டு வந்து காட்டுவதாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு காட்டினால் ஆவணங்களை சரி பார்த்த பின்பு, முறையாக இருந்தால் தங்ககட்டிகள் திரும்ப ஒப்படைக்கப்படும்
இவ்வாறு அவர்கள் கூறினர்.

சூலூர் பறக்கும்படை அலுவலர் சந்தோஷ்உதய ராகவன் தலைமையிலான அலுவலர்கள் சோமனூர் பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது அதில் காடா துணிகள் இருந்தது. விசாரணையில் அவை சோமனூர் லாரி அலுவலகத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு வழக்கமாக அனுப்பப்படுகிற காடா துணிகள் என்றனர். ஆனால் காடாதுணி பேல்களுக்கு முறையான இ-பில் இல்லை. இதையடுத்து காடாதுணிகளு டன் 2 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் பறக்கும்படை அலுவலர்கள் இன்று அதிகாலை சுகுணாபுரம் சோதனை சாவடியில் வாகனசோதனை செய்த போது அவ்வழியாக வந்த ஒரு மினிஆட்டோவை சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது.
இதுகுறித்து ஆட்டோவில் இருந்த பாலக்காடை சேர்ந்த சேமையர் (வயது 22) என்பவரிடம் விசாரித்த போது வியாபார ரீதியாக பணத்தை கொண்டு செல்வதாக கூறினார். அவரிடம் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #LokSabhaElections #GoldSeized
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகன் அருண்மொழிதேவனை ஆதரித்து விருதுநகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். விருதுநகர் மின்வாரியம் அலுவலகம் முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-
அரசியல் என்பது நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கியிருப்பது தவறான நடைமுறையாகும். அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கினாலும் எந்தவகையிலாவது அரசியல் நம்மை விடாமல் தொடரும். அரசியலிலும், தேர்தலிலும் மாற்றம் தேவை. இந்த மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக தான் நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். நாங்கள் உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை. ஓட்டுக்கு பணம்பெற்றுக்கொண்டு நாட்டை விற்றுவிடக்கூடாது என்பதை வலியுறுத்தத்தான் வருகிறோம்.
கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு கிலோ அரிசி ரூ.2-க்கு கொடுத்தார். ஐந்தாண்டுகள் கழித்து ஒரு கிலோ அரிசி ரூ.1-க்கு கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதுதான் வளர்ச்சியா?. வளர்ச்சியில்லை, இது வறுமையின் வளர்ச்சியாகும். இதுவரை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் என்ன செய்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதைச்செய்வோம், இதை செய்வோம் என்று கூற இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இதனை சொல்வதற்கு தகுதி உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான். இலவச கல்வி, இலவச தரமான மருத்துவம் வழங்குவோம். முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் அரசு ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை பெற வேண்டும். தரமான அரசு மருத்துவமனைகள் இருந்தால் மருந்துகள் வாங்குவது குறையும். தரமான மருந்துகள் வழங்கப்பட்டால் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் குறையும்.
விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நமது வரலாற்று கடமை. தமிழகத்தில் தமிழன் தலைநிமிர்ந்து நிற்க நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை விவசாயியுடன் கரும்பு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Seeman
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் என்றும், தங்கள் கூட்டணியில் உள்ள வேட்பாளர்கள் அனைவரும் விவசாயிகள் மற்றும் அரசு ஊழியர்களின் பிள்ளைகள் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: தமிழகத்தில் உங்கள் கூட்டணியின்(அ.தி.மு.க. கூட்டணி) வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?
பதில்: எங்கள் கூட்டணி மக்களை சார்ந்த கூட்டணி. இந்த தேர்தல் விவசாயிகளுக்கும், முதலாளிகளுக்கும் நடக்கின்ற தேர்தல். தி.மு.க. கூட்டணியில் அனைவரும் கோடீஸ்வரர்கள். கட்சிக்கு சம்பந்தம் இல்லாத பெரிய கோடீஸ்வரர்களுக்கு சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
எங்கள் கூட்டணியில் எல்லாமே விவசாயிகளின் பிள்ளைகள், அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு தான் சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். எங்கள் அணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் வாக்கு வங்கி இருக்கிறது. ஆனால், எதிரணியில் தி.மு.க.வுக்கு மட்டும் தான் வாக்கு வங்கி உள்ளது. மற்ற எந்த கட்சிக்கும் வாக்கு வங்கி இல்லை. எனவே, வாக்கு வங்கியும், மக்களின் ஆதரவும் உள்ள எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.
கேள்வி:- 18 சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும்? அ.தி.மு.க. ஆட்சி தப்புமா?
பதில்:- தேர்தல் முடிவுகளை பொறுத்தவரையில் 40 பாராளுமன்ற தொகுதி மட்டும் அல்ல, 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் நாங்கள் முழுமையாக வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. நிச்சயமாக ஆட்சியை தக்க வைக்கும். அதில் சந்தேகம் இல்லை.
கேள்வி:- பாராளுமன்றம் கூடிய நாட்களில் உங்களது வருகை 45 சதவீதம் அளவுக்கு குறைவாக இருந்ததாக கூறப்படுகிறதே?
பதில்:- கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எத்தனை முறை சட்டமன்றம் சென்றார்? ஒரு வருடத்துக்கு ஒருமுறை சென்ற அவர் மீது யாராவது குறை சொல்லி இருக்கிறார்களா? அவர் ஒரு கட்சியின் தலைவர் அவருக்கு எல்லா வேலைகளும் இருக்கும். நானும் தர்மபுரியில் இருந்தேன். தமிழகத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன்.
வருகைப்பதிவுக்கும், தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்வதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? 100 சதவீதம் வருகைப்பதிவு வைத்துள்ள மற்ற தொகுதி எம்.பி.க்கள் தர்மபுரியில் செய்யப்பட்டுள்ள அளவுக்கு திட்டங்கள் செய்து இருப்பார்களா? பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது, 100-க்கு 70 நாட்கள் சபை ஒத்தி வைப்பு நடக்கும். எனவே, அங்கு போய் சும்மா கையெழுத்து போட்டு, டெல்லியில் உட்காருவது எனக்கு பிடிக்கவில்லை. அதனால், இங்கு வந்து வேலைகளை செய்தேன்.
கேள்வி:- சமீபத்தில் வெளியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்த உங்கள் கருத்து என்ன?
பதில்:- காங்கிரஸ் கட்சி ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். ஏழைகளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று கூறுகிறார்கள். இதற்கு 3 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். எங்கே இருந்து நிதி எடுப்பார்கள்? நடைமுறைப்படுத்த வாய்ப்பே இல்லை. ராகுல்காந்தி கூறுகிறார் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறும் மாநிலங்களில் நீட் தேர்வுக்கு பதில் வேறு பெயரில் நுழைவு தேர்வு இருக்கும் என்கிறார். மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்கிறார். இது முரண்பாடான கருத்தாகும்.
கேள்வி:-அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி அமைக்க பெரிய அளவில் பேரம் பேசப்பட்டதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறாரே?
பதில்:- தி.மு.க. எப்போதும் கையாளும் ஒரு பொய் இது. கடந்த தேர்தலில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பெரிய அளவில் பேரம்பேசி பணம் வாங்கினார் என்று குற்றம்சாட்டிய தி.மு.க. இப்போது வைகோவை கூட்டணியில் சேர்த்து இருக்கிறது. விஜயகாந்த் மீதும் அதேபோன்று குற்றம் சாட்டினார்கள். இப்போது விஜயகாந்துடனும் கூட்டணிக்கு பேசிக் கொண்டு இருந்தார்கள். திருமாவளவனும் கடந்த தேர்தலில் பணம் பெற்றார் என்று குற்றச்சாட்டு வைத்தனர். இப்போது, அவரும் அவர்கள் கூட்டணியில் இருக்கிறார். தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் நல்ல கட்சி. அவர்களுடன் கூட்டு சேரவில்லை என்றால் பணம் வாங்கிவிட்டார்கள், மோசமான கட்சி என்று கூறுவது ஆரம்பகாலத்தில் இருந்தே அவர்களின் வாடிக்கையாகிவிட்டது.
கேள்வி:- நீங்கள் மத்திய மந்திரியாக இருக்கும் போது கொண்டு வந்த முத்தான 3 திட்டங்கள் என்ன?
பதில்:- 108 ஆம்புலன்சு திட்டம். இந்தியாவில் 22 மாநிலங்களில் இந்த திட்டத்தின் கீழ் ஆம்புலன்சுகள் ஓடுகின்றன. கோடிக்கணக்கான உயிரை காப்பாற்றிய திட்டம் இது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 ஆயிரம் குழந்தைகள் 108 ஆம்புலன்சில் பிறந்துள்ளன. இதனை எனது மிகப்பெரிய திட்டமாக நான் பார்க்கிறேன். அடுத்து தேசிய கிராமப்புற சுகாதார திட்டம். இந்த திட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் தாய் இறப்பு விகிதம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது, குழந்தை இறப்பு விகிதம் 55 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக அப்போதைய ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கிமூன் நேரில் எனக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார். அடுத்து பொது இடங்களில் புகையிலை பிடிக்க கூடாது. புகையிலை பொருட்களில் எச்சரிக்கை விளம்பரம் காரணமாக கோடிக்கணக்கான உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளது.

பதில்:- சொத்துகளை அபகரிப்பது தி.மு.க.வின் குலத்தொழில். எங்கள் வேலை அதுவல்ல. கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் தி.மு.க.வினர் சொத்துகளை அபகரித்து சிறைக்கு சென்றதை நாம் பார்த்தோம். நாங்கள் எடுக்கிறவர்கள் அல்ல, கொடுக்கிறவர்கள். இது போன்ற ஒரு பொய்யை மு.க.ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் தோல்வி பயத்தால் தொடர்ந்து எங்களை பற்றி, பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் பற்றி தனிநபர் விமர்சனம் மோசமான வார்த்தைகள் பேசி வருகிறார்கள்.
நான் மு.க.ஸ்டாலினிடம் கேட்கிறேன். நாங்கள் எந்த விசாரணைக்கும் தயார். எங்கள் சொத்து பட்டியலை கொடுக்கிறேன். விசாரணை குழு, கோர்ட்டு விசாரணை, சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ. விசாரணை எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். என் பெயரிலோ, எங்கள் அம்மா, அப்பா பெயரிலோ, குடும்பத்தில் ஒருவர் பெயரிலே ஒரு சதுர அடி நிலமாவது வன்னியரின் சொத்தை நாங்கள் அபகரித்து உள்ளோம் என்று நிரூபித்தால், நீங்கள் என்ன சொன்னாலும் நான் கட்டுப்படுகிறேன். அப்படி, உங்களால் நிரூபிக்க முடியவில்லை என்றால் நீங்கள் தி.மு.க. தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். உங்கள் கட்சியில் நிறையபேர் அதை எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
சிவமொக்கா (மாவட்டம்) டவுன் பகுதியில் வசித்து வருபவர் பரமேஸ். இவர், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் உறவினர் ஆவார். பரமேசுக்கு, சிவமொக்காவில் வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூம் உள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி பரமேசுக்கு சொந்தமான வீடு மற்றும் ஷோரூமில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் இந்த சோதனையை நடத்தி இருந்தனர். 20 மணி நேரம் இந்த சோதனை நடந்திருந்தது.
சோதனையின் போது பரமேஸ் வீடு, ஷோரூமில் இருந்து முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றிருந்தனர். மேலும் பரமேசுக்கு ஒரு தேசிய வங்கியில் லாக்கர் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர். ஆனால் அந்த லாக்கரின் சாவி காணாமல் போய் விட்டதாக அதிகாரிகளிடம் பரமேஸ் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பரமேசுக்கு சொந்தமான வங்கி லாக்கரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தார்கள். அப்போது அந்த லாக்கரில் பாலிதீன் கவரில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி மெஷின்கள் மூலம் பணம் எண்ணப்பட்டது. அப்போது ரூ.6½ கோடி இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி பரமேசிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார். அதே நேரத்தில் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதையும் அதிகாரிகளிடம் பரமேஸ் வழங்கவில்லை. இதையடுத்து, ரூ.6½ கோடியையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர்.
இதற்கிடையில், பணம் சிக்கியது குறித்து விசாரணைக்கு ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கும்படி பரமேசுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி லாக்கரில் சிக்கிய ரூ.6½ கோடியை வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவேகவுடாவின் உறவினரிடம் ரூ.6½ கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ElectionComission #MoneySeized #DeveGowda
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் அளித்த புகார் மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அ.ம.மு.க. வேட்பாளர்கள் சுயேச்சையாக கருதப்படுகின்றனர். அவர்களுக்கு பிரசாரம் செய்துவரும் டி.டி.வி.தினகரனை மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நட்சத்திர பேச்சாளராக கருத முடியாது. ஆனால் அவர்கள் அ.ம.மு.க. கட்சியாக தங்களை விளம்பரப்படுத்தி துண்டு பிரசுரங்கள் மூலமாகவும், சுவர் விளம்பரங்கள் செய்தும், கூட்டங்களில் பேசியும் வருகின்றனர். இதற்கான செலவுகளை அந்தந்த வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும்.
தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து பல கோடி பணம் கைப்பற்றப்பட்டது. அதுபற்றிய விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், 3-ந் தேதி திருப்பூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை மீது பொய் குற்றச்சாட்டுகளை அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இது இந்த இரண்டு துறைகளையும் பற்றிய எதிர்மறையான எண்ணங்களை மக்கள் மனதில் ஏற்படுத்திவிடும். எனவே மு.க.ஸ்டாலின் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கிகளில் 5 பவுன் வரை விவசாயிகள் அடமானம் வைத்து பெற்றுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் தங்க நகைகளை அடமானம் வைத்து வேளாண்மை கடன் பெற தமிழகத்தில் சட்டம் இல்லை. இது தெரிந்தும் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதால், அவர் தவறான வாக்குறுதிகளை அளித்ததாக கருதி அவர் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க.வின் தொழில்நுட்ப பிரிவு மக்களிடையே பிரிவினையை தூண்டும் விதமாகவும், கலவரத்தை ஏற்படுத்தும் விதத்திலும் சமூக வலைத்தளங்களில் பொய்பிரசாரம் செய்கிறது. உரிய நடவடிக்கை எடுப்பதோடு அந்த பிரசாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
கோடநாடு கொலை வழக்கோடு முதல்-அமைச்சரையும் சம்பந்தப்படுத்தி, அவரது பெயரை கெடுக்கும் நோக்கத்தில் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இதுதொடர்பாக அவருக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதுதொடர்பான வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் முடிந்துவிட்டதாக கூறி மீண்டும் அதுபற்றி பேசி வருகிறார். ஆனால் அந்த வழக்கின் சாட்சி விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. வக்கீல் எம்.வேணுகோபால் கொடுத்த புகாரில், “4-ந் தேதியன்று கோவையில் பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை மிகக்கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தார். சென்னையில் வருமான வரித் துறையின் சோதனைக்கு உள்ளான சபேசன் என்பவருடன் அமைச்சரை இணைத்து பேசினார்.
இதனால் வாக்காளர்கள் மத்தியில் அமைச்சரை பற்றிய தவறான எண்ணம் உருவாகக் கூடும். எனவே, தேர்தல் ஆணையம் மு.க.ஸ்டாலின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #DMK #MKStalin
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்களை விமர்சனம் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது அதிகார துஷ்பிரயோகம். அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இப்படி எல்லாம் பேசினால் மக்களிடம் எடுபட்டு விடும் என்ற பயத்தில் வழக்கு போடுகிறார்கள்.
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்து பேசி இருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அ.தி.மு.க.வினர் தேர்தலில் தோற்கப்போகிறார்கள். நிறைய தொகுதிகளில் ‘டெபாசிட்’ இழக்கப்போகிறார்கள்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் ஜனநாயக முறையில் நடக்குமா? தி.மு.க.வினர் வீடுகளில் மட்டும் தான் சோதனை நடத்தப்பட்டு உள்ளது என்றும் கேட்கிறீர்கள். துரைமுருகன் வீட்டில் பணம் வைத்து இருந்தது தவறு தான். அதே நேரத்தில் தேர்தல் ஆணையமும், பறக்கும் படையினரும் எதிர்க்கட்சியினரிடம் மட்டுமே சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
ஆளும் கட்சியினர் லோடு, லோடாக பணம் அள்ளிக்கொண்டு செல்கிறார்கள். அவர்களை பிடிக்காமல் விட்டு விடுகிறார்கள் என்பது தான் குற்றச்சாட்டு. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சிக்கு ஒரு அளவு கோல், எதிர்க்கட்சிக்கு என்று ஒரு அளவு கோல் வைப்பது தவறு.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran







