என் மலர்
திருவண்ணாமலை
- ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மூதாட்டி மீது மோதி கவிழ்ந்தது.
- இந்த விபத்தால் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது, அதே லாரி மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையாகும். இந்த நிலையில், சென்னையில் இருந்து கர்நாடகாவிற்கு 16ஆயிரம் லிட்டர் கொள்ளவு டீசல் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, திருவண்ணாமலை அடுத்த அரசம்பட்டில் லாரி வருவதை கவனிக்காத மூதாட்டி கனகாம்பரம் (70) என்பவர் சாலையை கடக்க முயன்றார்.
மூதாட்டி மீது லாரியை மோதாமல் இருக்க திருப்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மூதாட்டி மீது மோதி கவிழ்ந்தது. இதில் மூதாட்டி கனகாம்பரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து டீசர் ஆறாக ஓடியதால், கிராம மக்கள் கேன், குடம் உள்ளிட்டவற்றில் டீசலை நிரப்பிச் சென்றனர். இந்த விபத்தால் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நில உரிமையாளர் பாஷா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
- நில உரிமையாளர் இளைஞர்களின் உடல்களை அருகில் இருந்த கிணற்றில் வீசி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் முயல்வேட்டைக்கு சென்றனர். அப்போது குப்பநத்தம் பகுதியில் மின்வேலியில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 17 மற்றும் 27 வயதான இளைஞர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நில உரிமையாளர் பாஷா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். நில உரிமையாளர் இளைஞர்களின் உடல்களை அருகில் இருந்த கிணற்றில் வீசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- கார்த்திகை தீபத் திருவிழா அன்று 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைய உள்ளன.
- திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 70 மினி பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
சென்னை:
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பஸ்கள் இயக்கம் குறித்து அனைத்து மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர்களுடன் ஆலோ சனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் தர்பகராஜ் தலைமை வகித்து பேசியதாவது:-
கார்த்திகை தீபத் திருவிழா அன்று நகருக்கு வெளியில் மார்க்கெட்டிங் கமிட்டி (திண்டிவனம் சாலை), சர்வேயர் நகர் (வேட்டவலம் சாலை), நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் (திருக்கோவிலூர் சாலை), மணலூர்பேட்டை சாலை, விட்டோ டிஜிட்டல் இடம், அத்தியந்தல் (செங்கம் சாலை), டான்போஸ்கோ பள்ளி (காஞ்சி சாலை), அண்ணா நுழைவு வாயில் (வேலூர் சாலை), கிளியாப்பட்டு சந்திப்பு (அவலூர் பேட்டை சாலை) ஆகிய 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைய உள்ளன.
மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 4,764 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 70 மினி பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
- சாத்தூர் அணை 113.60 அடியை எட்டியுள்ள நிலையில் நீர்வரத்து 12,000 கன அடியாக உள்ளது.
- தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 9 ஆயிரம் கன அடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணை 113.60 அடியை எட்டியுள்ள நிலையில் நீர்வரத்து 12,000 கன அடியாக உள்ளது.
முன்னதாக, சாத்தனூர் அணைக்கு 7,000 கன அடி நீர் வரத்து இருந்த நிலையில், 5,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இது மேலும் அதிகரித்து, உபரி நீர் விநாடிக்கு 9000 கன அடியாக திறக்கப்பட்டது.
இந்நிலையில், சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 9 ஆயிரம் கன அடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையில் இருந்து 5,779 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் அதன் முழு கொள்ளளவான 32 அடியில் 31 அடியை எட்டியதால் நீர் திறக்கப்பட்டுள்ளது.
- பா.ஜ.க. பிரமுகரான நடிகை கஸ்தூரி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
- அதன்பின் பேசிய அவர் விஜய் தலைமையில் கூட்டணி தற்போதைய சூழ்நிலைக்கு சரிவராது என்றார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரபல திரைப்பட நடிகையும், பா.ஜ.க. பிரமுகருமான கஸ்தூரி சாமி தரிசனம் செய்தார்.
அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கரூர் சம்பவத்திற்கு பிறகு கரூர் மக்களே த.வெ.க. தலைவர் விஜய் பக்கம் இருக்கிறார்கள். ஆனால் அவர் கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் அவருடன் இல்லை.
கரூரில் உயிரிழப்புகளைச் சந்தித்த குடும்பம்கூட அவர்மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த நம்பிக்கைக்காக விஜய் ஏதாவது செய்ய வேண்டும்.
விஜய் தலைமையில் கூட்டணி தற்போதைய சூழ்நிலைக்கு சரிவராது. ஆந்திர மாநில துணை முதல் மந்திரியும், நடிகருமான பவன் கல்யாணை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு விஜய் உறுதுணையாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
- எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே புரட்சி தமிழர் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார்.
- ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை.
திருவண்ணாமலையில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணிக்கு விஜய் வருவது என்பது நடக்காத காரியம். தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு ஆகியவற்றை சி.பி.ஜ விசாரிக்க கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழக போலீஸ்துறை மீது உள்ள நம்பிக்கை போய்விடக் கூடாது என்பதற்காக சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
தி.மு.க ஆட்சி மட்டும் அல்ல தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக மனு செய்திருப்பார்கள். இந்த கருத்தை சொல்வதால் நான் தி.மு.க கூட்டணிக்கு சென்றுவிடுவேன் என நீங்கள் கருத வேண்டாம். கரூர் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதித்திட்டம் தீட்டி இருக்க வாய்ப்பு இல்லை.
இதுபோன்ற கொடூர எண்ணம் செந்தில் பாலாஜிக்கு கிடையாது. எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே புரட்சி தமிழர் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியின் பயனாளிகள்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும். டாஸ்மாக் மூலம் 22 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு ஊழல் செய்துள்ளது என குற்றம்சாட்டும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்துக்கு செல்லாமல் ஊர், ஊராக சென்று பேசுவது ஏன்? ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
- இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலையில் இளம்பெண்ணை 2 காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான காவலர்கள் இருவரும் சஸ்பெண்ட் ஆன நிலையில் தற்போது நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 114 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவு 119.00 அடியாகும். தற்போது அணையின் நீர் இருப்பு 113.55 அடியாக உள்ளது.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று மதியம் சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 114 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக சாத்தனூர் அணைக்கு வரும் உபரி நீரை அணையின் நீர் மின் நிலையத்தின் வழியாக வினாடிக்கு 1000 கன அடி வீதம் வெளியேற்றப்பட உள்ளது.
சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கலெக்டர் தர்ப்பகராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
வருவாய் துறை, நீர் வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த பணியாளர்கள் இணைந்து வெள்ள அபாயம் ஏற்படும் இடங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
- பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவுர்ணமி வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.46 மணிக்கு (6-ந்தேதி நள்ளிரவுக்கு பின்) தொடங்கி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வர உள்ளதால் பவுணர்மியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
- விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லை தற்போது அதிகரித்துள்ளது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு நாய்க்கு ஆதரவாக பேசியவர்களின் கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் அனாமிகா என்ற 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
- அருண் என்பவருக்கும் மகா லெட்சுமி என்ற பெண்ணுக்கும் 3 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது.
- அருண் தற்போது ஜெர்மனியில் வேலை செய்து வருகிறார்.
திருவண்ணாமலை அடுத்த வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் மகா லட்சுமி (25) என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் அருண் ஜெர்மனியில் வேலை செய்து வரும் நிலையில், மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மகா லட்சுமி உயிரை மாய்த்துக்கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மகா லெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த மகா லட்சுமியின் தந்தை மதுரையில் தலைமைக் காவலராக பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வது சிறப்பு.
- மலையடிவாரத்தில் பீமன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.
சிவ வழிபாட்டில் நினைத்தாலே முக்தி தரும் ஆலயமாக கருதப்படுவது திருவண்ணாமலை. அப்படிப்பட்ட திருவண்ணாமலை தலத்துக்கு இணையான கோவில் கொங்கு மண்டலமான கோவையில் உள்ளது. அந்த கோவில் மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் ஆகும்.
கொங்கு திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் இந்த கோவில் கோவை- பாலக்காடு சாலையில் குனியமுத்தூரை தாண்டியதும் மதுக்கரை மரப்பாலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. சுமார் 1600 அடி உயரமுள்ள மலை உச்சியில் கோவில் அமைந்திருப்பது சிறப்பானது. இந்த மலை தர்மலிங்க மலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வது சிறப்பு. திருவண்ணாமலைக்கு அடுத்து அதிக பக்தர்கள் கிரிவலம் செல்லும் ஆலயமாக தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இதனால் கொங்கு திருவண்ணாமலை என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
அதேசமயம் வனவிலங்குகள் நடமாட்டம் கருதி பவுர்ணமி தினத்தில் மட்டும் கிரிவலம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். திருவண்ணாமலையில் ஏற்றுவது போல் இங்கும் கார்த்திகை திருவிழாவின் போது மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
தர்மலிங்கேஸ்வரர் பெயர்க்காரணம்
பஞ்சபாண்டவர்கள் காலக்கட்டத்தில் பாண்டவர்களில் மூத்தவரான தருமன் இங்கு வந்து ஈஸ்வரனை தவமிருந்து வழிபட்ட காரணத்தால் சுவாமி, தர்மலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அந்த சமயத்தில் பீமன் கீழே காவல் காத்ததாகவும், மற்ற தம்பிகள் பாதுகாப்பாக கிரிவலம் வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இதன்காரணமாக மலையடிவாரத்தில் பீமன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.

சுயம்பு மூர்த்தி
தர்மலிங்கேஸ்வரர் மலையில் தானாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தி ஆவார். பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிக்கு சொந்தமான பசுமாடு காணாமல் போய் இருக்கிறது. அந்த பசுவை தேடி விவசாயி மலை உச்சிக்கு சென்று இருக்கிறார். அங்கு சுயம்புலிங்கத்திற்கு மாடு பால்சொரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் ஊர் முழுக்க பரவி அதன்பிறகே பக்தர்கள் வழிபடத் தொடங்கி அங்கு கோவில் எழுப்பப்பட்டதாக சொல்கிறார்கள்.
ஏன் கொங்கு திருவண்ணாமலை
இந்த ஆலயத்தை கொங்கு திருவண்ணாமலை என்று அழைப்பதற்கும் சில காரணங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி தான் தர்மலிங்கேஸ்வரர் வீற்றிருக்கும் மலை. ஆனால் மற்ற மலைகளுடன் சேர்ந்து இருக்காமல் தனித்துவமாக இந்த மலை அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது போல் இங்கும் கிரிவலப்பாதையில் 8 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
ஆலய அமைப்பு:
கோவில் சன்னதிக்கு முன்பு முதலில் ஸ்தூபியும், கொடிமரமும் உள்ளன. அதையடுத்து மகாமண்டபம், நந்தி, பலிபீடத்தைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் உள்ளது. கருவறையில் சித்தலிங்கேஸ்வரர் ஆவுடையார் மீது சிவலிங்கத் திருமேனியில் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மூலவர் தர்மலிங்கேஸ்வரர் இரண்டே கால் அடி உயரத்தில் உள்ள கற்சிலை ஆகும். கருவறை நுழைவுவாசலில் இடதுபுறம் விநாயகர் மற்றும் வலது புறம் முருகப் பெருமான் திருமேனிகள் உள்ளன.
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. காலைக் கதிரவன் தன் பொற்கதிர்களால் கருவறை இறைவனை தினம் தினம் குளிப்பாட்டும் காட்சி நம் கண்களை வியக்க வைக்கும் காட்சியாகும். கருவறையின் விமானம் தொலைவிலிருந்து பார்க்கும் பக்தர்களின் கண்களுக்கு நல் விருந்தாக அமைகிறது. தைப்பூசம், நவராத்திரி, சிவராத்திரி, ஆண்டு பிறப்பு நாட்களில் இறைவனுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் பிரார்த்தனை பலித்ததும் பிறந்த குழந்தையை அழைத்து வந்து இறைவன் சன்னதியில் இறைவனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவது இங்கு இயல்பாக காணும் காட்சிகளாக உள்ளது. கோவிலில் தமிழ் முறைப்படி மட்டுமே அர்ச்சனைகள், வழிபாடுகள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.






