சாத்தனூர் அணையில் இருந்து 15,000 கன அடி நீர் திறப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தூர் அணை 113.60 அடியை எட்டியுள்ள நிலையில் நீர்வரத்து 12,000 கன அடியாக உள்ளது.தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணையில் இருந்து 15,000 கன அடி நீர் திறப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை
Published on

திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 9 ஆயிரம் கன அடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணை 113.60 அடியை எட்டியுள்ள நிலையில் நீர்வரத்து 12,000 கன அடியாக உள்ளது.

முன்னதாக, சாத்தனூர் அணைக்கு 7,000 கன அடி நீர் வரத்து இருந்த நிலையில், 5,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இது மேலும் அதிகரித்து, உபரி நீர் விநாடிக்கு 9000 கன அடியாக திறக்கப்பட்டது.

இந்நிலையில், சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 9 ஆயிரம் கன அடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையில் இருந்து 5,779 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் அதன் முழு கொள்ளளவான 32 அடியில் 31 அடியை எட்டியதால் நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com