search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rabbit hunting"

    • போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
    • முயல் வேட்டையில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல்க ளை தடுக்க காவல்துறை மற்றும் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் காஞ்சி க்கோவில் அடுத்துள்ள பெ த்தாம் பாளையம் பகுதியில் ஒரு கும்பல் சட்ட விரோதமா க முயல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக காஞ்சிக்கோவில் போலீஸ் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடை த்துள்ளது.

    அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அதிரடி சோதனை மேற்கொ ண்டனர்.

    அப்போது சட்ட விரோதமாக முயல் வேட்டையில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த சங்கர் கணேஷ், பொன்னு சாமி ஆகிய 2 பேரை கைது செய்து செய்த போலீசார் அவர்களிடம் இருந்து வேட்டைக்கு பயன்படுத்திய உபகரணங்க ள் மற்றும் 2 மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட 2 பேர் மற்றும் பறிமுதல் செய்யப் பட்ட பொருட்களையும் ஈரோடு மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    • 50 குழுக்களாக பிரிந்து சென்ற வனத்துறையினர் அந்த கும்பலை கண்காணித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • வேட்டையாடியவர்கள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    ஈரோடு:

    ஈரோடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பெருந்துறை அருகே உள்ள தோரணாவி, தொட்டிபாளையம் கிராமத்தில் உள்ள பட்டா நிலங்களில் கும்பல் கும்பலாக முயல்கள் வேட்டுயாடுவதாக, தமிழ்நாடு வனம் மற்றும் வன உரியின கட்டுப்பாடு கோவை மண்டல அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பாதுகாவலருக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட வனப்பாதுகாப்பு படையினர், ஈரோடு வனச்சரக குழுக்கள், ஈரோடு வனவியல் விரிவாக்க கோட்ட குழுக்கள் உள்பட பல்வேறு வனச்சரக குழுவினர் தொட்டி பாளையம் கிராமத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது ஒரு வாட்ஸ்-அப் செயலி மூலம் குழு அமைத்து முயல் வேட்டையாடுவது வனத்துறையினருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து 50 குழுக்களாக பிரிந்து சென்ற வனத்துறையினர் அந்த கும்பலை கண்காணித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பட்டா நிலங்களில் கும்பல் கும்பலாக ஏராளமானோர் காட்டு முயலை வேட்டையாடிக் கொண்டிருந்ததையடுத்து வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து மொத்தம் 107 பேரை பிடித்தனர். அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அவர்கள் வேட்டையாடி வைத்திருந்த 5 முயல்கள் மற்றும் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கம்புகள், ஏராளமான செல்போன்களையும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவில் திருவிழாவையொட்டி குறிப்பிட்ட சமூகத்தினர் காட்டு முயலை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும், அதன்படி இந்தாண்டு திருவிழாவை யொட்டி வேட்டையாட வந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது:-

    பொதுவாக வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவது மிகப்பெரிய குற்றமாகும். முயல் வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இவர்கள் வனப்பகுதியில் வேட்டையாடவில்லை. பட்டா நிலங்களில் தான் வேட்டையாடி உள்ளனர். இருந்தாலும் இதுவும் சட்டப்படி தவறுதான். எனவே 107 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • கன்னிமாா், கருப்பராயன், வேட்டைக்காரன் முனியப்பன் சுவாமி கோயில் பொங்கல் திருவிழாக்கள் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றன.
    • வேட்டைக்கு செல்பவா்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றனா்.

    அவிநாசி :

    அவிநாசி வட்டம், ஈட்டிவீரம்பாளையம் புதுக்காலனி பகுதியில் உள்ள கன்னிமாா், கருப்பராயன், வேட்டைக்காரன் முனியப்பன் சுவாமி கோயில் பொங்கல் திருவிழாக்கள் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றன. திருவிழாவின் நிறைவாக முயல் வேட்டைக்கு செல்வதை இப்பகுதி மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனா். இந்நிலையில், வியாழக்கிழமை வழக்கம்போல் 50க்கும் மேற்பட்டவா்கள் முயல் வேட்டைக்கு புறப்பட்டனா்.

    இதையடுத்து தகவல் அறிந்து வந்த வன அலுவலா் ம.சுரேஷ் கிருஷ்ணன் தலைமையிலான அலுவலா்கள் முயல் வேட்டைக்கு புறப்பட்ட மக்களை தடுத்து நிறுத்தினா். மேலும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி முயல்களை வேட்டையாடுவது குற்றம் என்றும், வேட்டைக்கு செல்பவா்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றனா். 

    ×