முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது

போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.முயல் வேட்டையில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது
Published on

பெருந்துறை:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல்க ளை தடுக்க காவல்துறை மற்றும் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சி க்கோவில் அடுத்துள்ள பெ த்தாம் பாளையம் பகுதியில் ஒரு கும்பல் சட்ட விரோதமா க முயல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக காஞ்சிக்கோவில் போலீஸ் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடை த்துள்ளது.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அதிரடி சோதனை மேற்கொ ண்டனர்.

அப்போது சட்ட விரோதமாக முயல் வேட்டையில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த சங்கர் கணேஷ், பொன்னு சாமி ஆகிய 2 பேரை கைது செய்து செய்த போலீசார் அவர்களிடம் இருந்து வேட்டைக்கு பயன்படுத்திய உபகரணங்க ள் மற்றும் 2 மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 2 பேர் மற்றும் பறிமுதல் செய்யப் பட்ட பொருட்களையும் ஈரோடு மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com