search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம்
    X

    பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் கூட்டம் நடைபெற்ற காட்சி. 

    திருப்பூரில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம்

    • தீர்மானத்தை மாநகராட்சி கூட்டத்தில் கடுமையாக எதிர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது.
    • அதிமுக ஆட்சி காலத்தில் தான் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில், திருப்பூர் மாநகராட்சியின் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கிப் பேசினார். அவைத்தலைவர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் , புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பூர் பழைய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் வைப்பதாக கொண்டு வரப்படுகின்ற தீர்மானத்தை மாநகராட்சி கூட்டத்தில் கடுமையாக எதிர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஏற்கனவே கே.என்.பி., அவர்களின் பெயரில் இருக்கின்ற இந்த பேருந்து நிலையத்தினை, புதிதாக கட்டுவதற்கு அதிமுக. ஆட்சிக் காலத்தில் தான் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. அப்படி இருக்கையில், இந்த பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர் வைப்பது எந்தவிதத்திலும் பொருத்தமானதாக இல்லை. தியாகி திருப்பூர் குமரன் பெயரைத்தான் வைக்க வேண்டும். தி.மு.க. கருணாநிதி பெயரை வைத்தால் அ.தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு பெயர் மாற்றி வைக்கப்படும் என்றார். கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சியின் எதிர்க்கட்சிக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர் கண்ணப்பன் உள்ளிட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×