என் மலர்tooltip icon

    சிவகங்கை

    இளையான்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா சாலைகிராமத்தைச் சேர்ந்தவர் நூர்ஷாதயா (வயது29). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அப்துல் சமது என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது 30 பவுன் நகை, ரூ5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன.

    இந்த நிலையில் நூர்ஷாதயா சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் எனது கணவர் அப்துல் சமது கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததால் 2014-ம் ஆண்டு எனது தாய் வீட்டுக்கு வந்து விட்டேன்.

    ஆனாலும் அவர் தொடர்ந்து வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்கிறார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் அமர்கான்-பாத்திமாபீவி, உறவினர் ரகுமான் ஆகியோர் இருக்கின்றனர் என்று கூறி உள்ளார்.

    இதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி விசாரணை நடத்தி வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்த அப்துல்சமது மற்றும் அவரது பெற்றோர், உறவினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
    இளையான்குடி அருகே மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர்கள் மூதாட்டியை தாக்கி 6½ பவுன் நகையை பறித்து சென்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா சாலைகிராமம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட தெற்கு விசவனூரைச் சேர்ந்தவர் கருப்பாயி (வயது70). இவர் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்தனர்.

    ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென்று மர்ம நபர்கள் கருப்பாயியை மறித்து கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். ஆனால் அவர் அதனை இறுக்க பிடித்துக்கொண்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் கருப்பாயியை சரமாரியாக தாக்கி விட்டு 6½ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து சாலை கிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
    காரைக்குடியில் ஒரே நாளில் 3 பெண்களிடம் மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டி.டி.நகரைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி அகிலா தேவி (வயது49). இவர் நேற்று வீட்டருகே நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் அகிலாதேவியை பின் தொடர்ந்தார்.

    ஆள்நடமாட்டம் குறைந்த இடத்தில் வந்தபோது மர்ம நபர் அகிலாதேவியை கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினான்.

    காரைக்குடி கழனி வாசலை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி பத்மினி (39). இவர்களது மகன் வெளியூரில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

    நேற்று மகனை பஸ் நிலையத்தில் விட்டு விட்டு பத்மினி மொபட்டில் வீடு திரும்பினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பத்மினி கழுத்தில் கிடந்த 8½ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    காரைக்குடி லெட்சுமண நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மனோன்மணி (37). இவர் செக்காலை ரோட்டில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார்.

    மனோன்மணி ரெயில்வே பீடர் ரோட்டில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார்.

    உடனே அவர் திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இதைகேட்டு அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து வந்தனர். இதை பார்த்த கொள்ளையன் அங்கிருந்து தப்பினான். இந்த பதட்டத்தில் அவனது செல்போன் தவறி கீழே விழுந்தது. இதை கைப்பற்றிய பொதுமக்கள் அழகப்பாபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் பிரேமானந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முத்துக்கருப்பன் மகன் வைரமுத்து (27) நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் காரைக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர். ஆனால் இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் தெரிவிக்கவில்லை.

    காரைக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நகை பறிப்பு, வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் சர்வ சதாரணமாக நடந்து வருகின்றன. ஆனால் இதுவரை குற்றவாளிகள் யாரும் சிக்கியதாக தெரியவில்லை.

    பொதுமக்கள் நாள் தோறும் பீதியுடனேயே வெளியில் நடமாடி வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் அடுத்தடுத்து 3 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. புகார் செய்தாலும் போலீசார் உடனே கண்டு கொள்வதில்லை. மெத்தனமாக செயல்பட்டு வருவதால் கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக தலையிட்டு கொள்ளை சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அம்மா வழியிலான ஆட்சியை நடத்தும் நாங்கள் பயப்பட மாட்டோம். 4 ஆண்டுகள் மட்டுமல்ல அதற்கு மேலும் இந்த ஆட்சி தொடரும் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை அரசு மன்னர் துரைசிங்கம் கல்லூரி மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.

    விழாவில் 15 ஆயிரத்து 689 பயனாளிகளுக்கு ரூ.39 கோடியே 2 லட்சத்து 46 ஆயிரத்து 443 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டம் ஆன்மீகம், வீரம் நிறைந்த மாவட்டம் ஆகும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அரசியலில் போராடி உயர் நிலைக்கு வந்தவர்கள். அம்மா வழியில் இந்த ஆட்சி நடைபெறுகிறது. கட்சியில் 90 சதவீதம் பேர் விசுவாசமானவர்கள்.

    மக்களின் எண்ணப்படி இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியையும் கட்சியையும் ஒற்றுமையுடன் செயல்பட்டு காப்பாற்றி நல்ல பெயர் எடுப்போம். அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆட்சியில் குறை காண முடியாததால் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் ஊழல் நடை பெற்றுள்ளதாக பொய்யான குற்றச்சாட்டுகளை திரும்ப திரும்ப கூறி வருகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறி வருகிறார்கள்.

    2010 வரை தி.மு.க. ஆட்சியில் 14 ஆயிரத்து 583 கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் பதிவானது. 2011 முதல் 6 ஆண்டுகள் 12 ஆயிரத்து 128 வழக்குகள்தான் பதிவாகி உள்ளன. அனைத்து துறைகளிலும் அம்மாவின் வழியில் சிறப்பாக செயல்படும் அரசை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்கள். எத்தகைய வே‌ஷம் போட்டாலும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியாது.

    இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதி பூங்காவாக உள்ளது. இவர்களை பார்த்ததும் ஒரு குட்டி கதை நினைவுக்கு வருகிறது.

    ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்திருந்தது. அதை பார்த்த நரி அந்த சேவலை சாப்பிட விரும்பியது. நரி அந்த சேவலிடம் நாம் காட்டில் நண்பர்களாகி விட்டோம். கீழே இறங்கி வந்தால் உன்னிடம் விபரமாக கூறுகிறேன் என்று கூறியது.

    இதற்கு சேவல் சற்று தூரத்தில் பார்த்தவாறு இருந்தது. அதற்கு நரி தூரத்தில் என்ன பார்க்கிறாய்? என்று கேட்டது. அதற்கு சேவல் வேட்டை நாய்கள் ஒன்றாக வருகிறது என்று கூறியது. நரி அதற்கு வேட்டை நாய்களுக்கு இதுபற்றி தெரியாது என்று கூறிவிட்டு ஓட்டம் எடுத்தது.

    எனவே நரியின் தந்திரம் சேவலுக்கு புரிந்து விட்டது. அதுபோல் சிலர் நரிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்கெல்லாம் அம்மா வழியிலான ஆட்சியை நடத்தும் நாங்கள் பயப்பட மாட்டோம். 4 ஆண்டுகள் மட்டுமல்ல அதற்கு மேலும் இந்த ஆட்சி தொடரும்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதிய பஸ் நிலையம் கட்டப்படும். காளை யார்கோவில் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கப்படும். சிவகங்கை நகரில் உள்ள தெப்பக்குளம் சீரமைக்கப்படும். மன்னர் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டிதரப்படும்.

    சிவகங்கையில் ரூ.10 கோடியே 60 லட்சத்தில் புறவழிச்சாலை அமைத்து தரப்படும். பெரம்பலூர் -மானாமதுரை சாலையில் ரூ.4 கோடியே 2 லட்சத்தில் பாலமும், உருவாட்டி, தப்பலூர், முத்தரசன் கோட்டை ஆகிய ஊர்களில் உயர்மட்ட பாலமும், மாத்தூர், முளைகுளம், ஆண்டிச்சி ஊரணியில் சிறு பாலமும் கட்டப்படும்.

    சிவகங்கை அரசு மருத் துவக்கல்லூரிக்கு நவீன உபகரணங்கள், காரைக்குடி அரசு மருத்துவமனை யில் சி.டி. ஸ்கேன், விபத்து சிகிச்சை பிரிவு, நவீன உப கரணங்கள் வழங்கப்படும்.

    கீழசெவல்பட்டி, தெத்தூர், இடையமேலூரில் துணை மின் நிலையம் அமைக்கப்படும். இந்தியா விலேயே தமிழகம் சுகாதாரத்துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசுக்கு உங்களது ஆதர வினை தொடர்ந்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலெக்டர் லதா நன்றி கூறினார். விழாவில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செந்தில்நாதன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலருமான முருகானந்தம், காளை யார்கோவில் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, வக்கீல் ராஜா, பாலா, சசிகுமார், அய்யனார், வக்கீல் பாண்டி, சட்டமன்ற அலுவலக மேலாளர் நந்தபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை கலெக்டர் லதா தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, திட்ட இயக்குநர் காஞ்சனா, கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, தாசில்தார் கந்தசாமி மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
    இளையான்குடி, திருப்புவனத்தில் பஸ் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருமான குணசேகரன் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் உள்ள இளையான்குடி, திருப்புவனம் பகுதியில் நீண்ட நாட்களாக பஸ் நிலையம் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அதிக அளவில் கிராமப் பகுதிகள் உள்ளன.

    இங்குள்ள சாலை கிராமத்தை ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும். திருப்புவனத்தில் நீதிமன்றம், மானாமதுரை வைகை ஆற்றில் புதிய பாலம், கலைக்கல்லூரி அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்த போது இந்தப் பணிகள் முழுவதும் நிறை வேற்றப்படும் என்று உறுதி அளித்து இருந்தார்.

    மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் உள்ள இந்தப்பணிகளை விரைந்து முடிக்க முதல்வர், துணை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

    சிங்கம்புணரியில் டென்னிஸ் விளையாடிய வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வடக்கு வேளார் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 34). சிங்கப்பூரில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

    இவரது மனைவி உதயா. 9 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 8 வயதில் மனிஷ் என்ற மகன் உள்ளான். தற்போது உதயா கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் மனைவியை பார்ப்பதற்காக சந்திரசேகரன் சிங்கம் புணரிக்கு வந்தார். நேற்று மாலை அவர், தனது மகன் மற்றும் அருகில் உள்ள சிறுவர்களுடன் டென்னிஸ் விளையாடினார். அப்போது பந்து வீட்டின் அருகில் சென்ற மின்சார வயரில் சிக்கிக் கொண்டது.

    அதை எடுப்பதற்காக சந்திரசேகரன், இரும்புக் கம்பியுடன் கூடிய துடப்பத்தை வைத்து வீட்டின் மாடியில் நின்று கொண்டு பந்தை எடுக்க முயன்றார். எதிர்பாராதவிதமாக சந்திரசேகரனின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்.ரகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேவகோட்டையில் மாணவன் மற்றும் இளம்பெண் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை:

    தேவகோட்டை தாலுகாவுக்குட்பட்ட முன்னரி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், விவசாயி. இவருடைய மகன் மூவேந்தர் செல்வம் (வயது 14).

    இவன், தேவகோட்டையில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற மூவேந்தர் செல்வம், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவனை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால் தேவகோட்டை தாலுகா போலீசில் சரவணன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் மூவேந்தர் செல்வத்தை தேடி வருகிறார்.

    நரியநேந்தலை சேர்ந்தவர் காளியம்மாள். இவரது மகள் கார்த்திகா (19), பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்த இவர், 15-ந் தேதி தேவகோட்டை சென்று வருவதாக கூறிச் சென்றார்.

    அதன் பிறகு கார்த்திகா வீடு திரும்பாததால், தேவகோட்டை தாலுகா போலீசில் காளியம்மாள் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிரியாமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காரைக்குடி தாலுகா இடுகபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, விவசாயி. இவருடைய மகன் பாண்டியன் (17). கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பாண்டியன், அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    இது குறித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிங்கம்புணரியில்டென்னிஸ் விளையாடிய வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வடக்கு வேளார் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 34). சிங்கப்பூரில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

    இவரது மனைவி உதயா. 9 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 8 வயதில் மனிஷ் என்ற மகன் உள்ளான். தற்போது உதயா கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் மனைவியை பார்ப்பதற்காக சந்திரசேகரன் சிங்கம் புணரிக்கு வந்தார். நேற்று மாலை அவர், தனது மகன் மற்றும் அருகில் உள்ள சிறுவர்களுடன் டென்னிஸ் விளையாடினார். அப்போது பந்து வீட்டின் அருகில் சென்ற மின்சார வயரில் சிக்கிக் கொண்டது.

    அதை எடுப்பதற்காக சந்திரசேகரன், இரும்புக் கம்பியுடன் கூடிய துடைப்பத்தை வைத்து வீட்டின் மாடியில் நின்று கொண்டு பந்தை எடுக்க முயன்றார். எதிர்பாராதவிதமாக சந்திரசேகரனின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்.ரகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அரசு பஸ்-லாரி நேருக்கு நேர் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். பெண் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மானாமதுரை:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் புறப்பட்டது. இரவு 10 மணிக்கு மானாமதுரை அருகே உள்ள சங்கமங்கலம் விலக்கில் வந்தபோது காரைக்குடியில் இருந்து கமுதி நோக்கி வேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் லாரி மற்றும் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

    பஸ்சில் பயணம் செய்த மானாமதுரை பாகபத் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி செந்தில்வடி வேல் (வயது40) என்பவரின் கை துண்டாகி ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    பஸ்சில் இருந்த மதுரை சிந்தாமணியை சேர்ந்த வள்ளி (50), பாரூக், பரமக்குடியை சேர்ந்த கண்ணன் (37), ஆலங்குளம் செந்தில்ராஜா (34), வல்லம் ரிஷிகுமார் (18), ராம நாதபுரம் சரத்குமார் (19) உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதில் வள்ளி ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது பரகத்துல்லா வழக்குப்பதிவு செய்து கமுதியை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமாரை கைது செய்தார்.

    காளையார்கோவில் அருகே தலையில் காயத்துடன் மீன் வியாபாரி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா, அழகாபுரியைச் சேர்ந்தவர் கணபதி (வயது 55), மீன் வியாபாரி. இவர் நேற்று வியாபாரத்தை முடித்து விட்டு வந்தார்.

    பின்னர் வெளியில் சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் கணபதி வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அழகாபுரி அருகே உள்ள கொல்லங்குடி சாலையில் தலையில் காயத்துடன் கணபதி கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார்.

    இது குறித்து காளையார் கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் கல்யாணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    தலையில் காயம் இருந்ததால் அவரை யாரோ அடித்து கொலை செய்திருப்பதாக போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    காரைக்குடி அருகே தீயில் கருகிய இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் கஸ்தூரி (வயது22). இவருக்கும், தேவகோட்டை தாணிச்சாயூரணியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் தனது குழந்தையுடன் கஸ்தூரி பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அங்கு குழந்தைக்கு வெந்நீர் போடுவதற்காக மண்எண்ணை அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்தது.

    இதில் உடல் கருகிய கஸ்தூரி சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு கஸ்தூரி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சோமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருப்புவனம் அருகே கல்லூரி மாணவர் மாயமாகி விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா பூவந்தியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 21). மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    வீட்டில் இருந்து தினமும் பஸ்சில் கல்லூரி சென்று வந்தார். 10-ந் தேதி காலை வழக்கம் போல்அய்யப்பன், கல்லூரி செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு புறப்பட்டுச் சென்றார்.

    அதன் பிறகு மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. இரவு வெகுநேரமாகியும் அய்யப்பன் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடினர். ஆனால் அய்யப்பன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்பனின் தாயார் பழனியம்மாள், பூவந்தி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் உமாதேவி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் அய்யப்பனை தேடி வருகிறார்.

    ×