என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடி அருகே தீயில் கருகிய இளம்பெண் பலி
    X

    காரைக்குடி அருகே தீயில் கருகிய இளம்பெண் பலி

    காரைக்குடி அருகே தீயில் கருகிய இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் கஸ்தூரி (வயது22). இவருக்கும், தேவகோட்டை தாணிச்சாயூரணியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் தனது குழந்தையுடன் கஸ்தூரி பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அங்கு குழந்தைக்கு வெந்நீர் போடுவதற்காக மண்எண்ணை அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்தது.

    இதில் உடல் கருகிய கஸ்தூரி சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு கஸ்தூரி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சோமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×