என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சத்தியமங்கலத்தில் இன்று விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டதில் பழைய ஓய்வூதியத் திட்டம், ஆசிரியரின் பணி பாதுகாப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் தனியார் பள்ளியில் அனைத்து முதுகலை ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டதில் பழைய ஓய்வூதியத் திட்டம், ஆசிரியரின் பணி பாதுகாப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பட்டது.

    இதில் நேரடி நியமன முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அன்பரசு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பிரச்சார செயலாளர் பிரபாகரன் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • அந்தியூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
    • முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் வன்முறைகள் எவ்வித த்திலும் இழைக்கப்படுவதை தடுத்திட பாடுபடுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    அப்போது அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்திய குடிமகன், குடிமக்களாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் .

    மனரீதியாகவும், உடல்ரீ தியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன். அவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து மருத்துவமனை, வங்கி, பஸ் நிலையம் போன்ற இடங்களில் முதியோ ர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் வன்முறைகள் எவ்வித த்திலும் இழைக்கப்படுவதை தடுத்திட பாடுபடுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சாலையோரம் வரும் மான், யானைகளை போட்டோ எடுத்தால் வழக்குப்பதிவு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • மனிதர்களின் தேவையற்ற செயல்களால் மனித-விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாவும் ஆபத்து நிகழும் முன் நடவடிக்கையாக வனத்தில் அத்துமீறுவோர் மீது அபராதம், வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது 1435 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இந்த புலிகள் காப்பகம் 2013-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி தமிழகத்தின் 4-வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

    இங்கு யானைகள் புலி,சிறுத்தை, கரடி, செந்நாய்கள், கடமான்கள், புள்ளிமான்கள், கழுதைபுலி என ஆயிரக்கணக்கான வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது.

    இந்த சரணாலயத்தின் மேற்கு கிழக்கு தொடர்ச்சி மலை சந்திக்கும் தலமலை வனப்பகுதி யானைகள் இடம்பெறும் முக்கிய வழித்தடமாக உள்ளது. அண்மையில் நடந்த கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 1200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    தற்போது ஊட்டி, கொடைக்கானல் போல இதமான கால நிலை நிலவுவதால் திம்பம், ஆசனூர் கேர்மாளம் வனச்சாலையில் ஆயிரக்கணக்கானோர் முகாமிட்டு இயற்கையின் அழகை ரசிக்கின்றனர். யானை, புள்ளிமான்கள் போன்ற விலங்குகள் சாாலையோரம் துளிர்விட்டு பச்சைபசேல் என படர்ந்திருக்கும் புற்களை சாப்பிட அடிக்கடி வருவது வழக்கம்.

    அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவே தேசிய நெடுஞ்சாலை செல்வதால் இரு மாநிலங்களிடையே பயணிக்கும் வாகன ஓட்டிகள்,சுற்றுலா பயணிகள் யானை, புள்ளிமான்களை பார்த்து மெய்சிலிர்க்கின்றனர். சிலர் வாகனத்தை நிறுத்தி புகைப்படம் எடுப்பது, சப்தமிடுவதும் வனவிலங்குகளின் நேர்மறையான எண்ணங்களை உருவாக்குகின்றன.

    சில வாகன ஓட்டிகள் ஆர்வம் காரணமாக யானைகள் அருகே நின்று செல்பி எடுக்கின்றனர். இதனால் யானை அவர்களை துரத்தி தாக்க முற்படுவதும் அவர்கள் தப்பிப்பதும் வாடிக்கையாகி விட்டது. ஆபத்தை உணராத இளைஞர்கள் மலை உச்சியில் நின்று மலைகளின் பின்னணியில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    சல சலவென ஓடும் நீரோடைகளில் உள்ள பாறைகள் மீது அமர்ந்து மது அருந்துவதும் எல்லையை மீறிய செயலாககாணமுடிகிறது. இயற்கையான சூழல் கொண்ட விலங்குகள் வாழும் வாழ்விடத்தில் மனிதர்கள் அத்துமீறி நுழைந்து யானை, சிறுத்தை. புள்ளிமான்களின் வாழ்விடத்தில் இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை கள இயக்குநர் கிருபா சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    மனிதர்களின் தேவையற்ற செயல்களால் மனித-விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாவும் ஆபத்து நிகழும் முன் நடவடிக்கையாக வனத்தில் அத்துமீறுவோர் மீது அபராதம், வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

    • சுங்கசாவடிக்கு பணம் செலுத்த தவிர்த்து பெருந்துறை-காங்கேயம் ரோட்டில் செல்லும் கனரக லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • சென்னிமலை வழியாக வரும் லாரிகள் அடிக்கடி விபத்துக்களையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

    சென்னிமலை:

    சென்னிமலை- பெருந்துறை ரோட்டில் உள்ள ஈங்கூரில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ெரயில்வே மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது. அந்த பாலம் கட்டப்படுவதற்கு முன்பாக அந்த வழியே வாகனங்களில் செல்லும் அனைத்து மக்களும் ெரயில் செல்லும் வரை காத்திருந்த பின்பே செல்வார்கள்.

    ஈங்கூரில் ெரயில்வே மேம்பாலம் கட்டப்படுவதற்கு முன்பு பல்வேறு பொதுநல அமைப்பினரும், பொதுமக்களும் ெரயில்வே மேம்பாலத்திற்காக போராடினார்கள்.

    அதன்பிறகு ஈங்கூரில் ெரயில்வே மேம்பாலம் கட்ட அரசு அனுமதியளித்தது. 2010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு அதன்பிறகு இந்த மேம்பாலம் வழியாக எந்த வித தடங்களும் இன்றி வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு தேசிய நெடுஞ்சாலை வழியாக பொள்ளாச்சி, கேரளா செல்லும் பெரும்பாலான லாரிகள் பெருந்துறையில் இருந்து சென்னிமலை வழியாக செல்ல ஆரம்பித்து விட்டன.

    தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றால் விஜயமங்கலம், கருமத்தம்பட்டி உள்பட 3 இடங்களில் உள்ள சுங்க சாவடிகளில் பணம் செலுத்த வேண்டும் என்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் ஈங்கூர், சென்னிமலை, காங்கேயம் வழியாக பொள்ளாச்சி மற்றும் கேரளாவுக்கு செல்கின்றன.

    அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகளும் இதன் வழியாக செல்கின்றன. இதனால் சென்னிமலை -பெருந்துறை ரோடு, சென்னிமலை-காங்கேயம் செல்லும் ரோடு, மற்றும் குறுகிய ரோடாக உள்ள சென்னிமலை டவுன் பகுதி ஆகியவை மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி விட்டது.

    இந்த வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்கின்றனர். சென்னிமலை வழியாக வரும் லாரிகள் அடிக்கடி விபத்துக்களையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

    நான்கு வழிச் சாலைகளில் செல்லும் கண்டெய்னர்கள் எல்லாம் சுங்க கட்டணம் கட்டுவதை தவிர்க்க இந்த வழியில் செல்கின்றன. இதனால் இந்த ரோடு தாங்காமல் அடிக்கடி பெயர்ந்து போய்விடுகிறது. மேலும் ஒரே நேரம் 2, 3 லாரிகள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் குறுகலான சாலையை கொண்ட சென்னிமலை பகுதியில் அடிக்கடி சென்னிமலை கிழக்கு ராஜா வீதி மற்றும் சென்னிமலைபாளையம் பிரிவு, மலை கணுவாய், பசுவபட்டி வெப்பிலி ரோடு பிரிவு ஆகிய இடங்களில் மாதம் தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    காங்கேயத்திலிருந்து சென்னிமலை வழியாக பெருந்துறைக்கோ அல்லது பெருந்துறையில் இருந்து காங்கேயத்திற்கோ இரு சக்கர வாகனங்களிலோ அல்லது கார்களிலோ குறிப்பாக காலை, மாலை நேரங்களில் செல்பவர்களுக்கு இந்த லாரிகளின் தொந்தரவு நன்கு தெரியும்.

    சரக்கு லாரிகள் மற்றும் கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கவே நான்கு வழி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த வழியாக செல்லாமல் சுங்கச் சாவடிகளுக்கு பயந்து குறுக்கு வழியில் லாரிகள் செல்வதால் பொதுமக்களுக்கு பெரிய இடையூறு ஏற்படுவதுடன், உயிர் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.

    ஈங்கூர் மேம்பாலம் கட்டப்படாமல் இருந்திருந்தால் ெரயில் வரும் போது மட்டும் ஒரு பத்து நிமிடங்கள் தான் நாம் நின்று விட்டு சென்றிருப்போம். ஆனால் தற்போது இந்த லாரிகளால் ஒரே வழியாக சென்று விடும் நிலையில் உள்ளோம் என சென்னிமலை பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.

    சென்னிமலை டவுன் பகுதிக்குள் இந்த கனரக லாரிகள் நுழைய தடை விதித்தால் கூட போதும் என்கின்றனர். இதை தவிர்க்க சென்னிமலை நகரை சுற்றி ரிங்ரோடு பைபாஸ் அமைக்க வேண்டும் என சென்னிமலை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியும் அரசுக்கு அனுப்பி உள்ளனர்.

    • அந்தியூர் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்.
    • இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் அட்டகல்லூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். கூலி தொழிலாளி. இவரது மகள் காயத்ரி (21). குமாரபாளையத்தில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தினமும் கல்லூரிக்கு செல்வதற்காக காயத்ரி வீட்டிலிருந்து அந்தியூர் பஸ் நிலையத்திற்கு தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்து அங்கிருந்து பஸ் மூலம் கல்லூரிக்கு செல்வது வழக்கம்.

    அதன்படி சம்பவத்தன்று காயத்ரியை அவரது தந்தை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து அந்தியூர் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். பின்னர் காயத்ரி கல்லூரி செல்வதற்காக பஸ்சில் ஏறி சென்று உள்ளார்.

    அதன் பின்னர் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை மாயமான தனது மகளை மீட்டுத்தருமாறு அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் அங்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • பெருந்துறை அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் தலையில் பலத்த அடிபட்டு பலியானார்.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    சித்தோடு ராயபாளையம்புதூர் கோர்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 52). இவர் நேற்று மாலை பெருந்துறை வந்துவிட்டு சித்தோடு செல்வதற்காக தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    பவானி ரோடு எருகாட்டுவலசு அருகே சென்று கொண்டிருந்த போது மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூச்சு பேச்சின்றி கிடந்தார்.

    உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • பெருந்துறையில் வடமாநில வாலிபருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
    • திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஒடிசா மாநிலம் சுபமபூர் பகுதியை சேர்ந்தவர் அண்டயாமி சாகு (21). இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உறவினருடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் வேலைக்காக வந்தார்.

    அங்கு உறவினர் தங்கியிருந்த அறையில் தங்கி வேலை தேடி வந்தார். இந்நிலையில் அண்டயாமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு நிலைமை மோசமானதால் அவரை பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சுமார் 30 நிமிடத்திக்கு மேலாக கரும்புகளை யானை சுவைத்தது.
    • கரும்பு ஏற்றி செல்லும் லாரிகள் கரும்புகளை சாலையில் வீசி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் இந்த தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் சோதனைசாவடி அருகே கரும்புகளை சாப்பிட யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை சாப்பிடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி கொண்டு சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு லாரி ஒன்று சென்றது. லாரி ஆசனூர் அடுத்த காரப்பள்ளத்தில் இருந்து புளிஞ்சூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஒற்றை யானை கரும்பு லாரியை வழிமறித்து நிறுத்தியது.

    பின்னர் லாரியில் இருந்த கரும்புகளை சுவைத்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 30 நிமிடத்திக்கு மேலாக கரும்புகளை யானை சுவைத்தது. பின்னர் கிளீனர் லாரியின் மேல் ஏறி கரும்புகளை எடுத்து சாலை ஓரத்தில் வீசினார். பின்னர் யானை சாலை ஓரத்துக்கு சென்றது. இதையடுத்து கரும்பு லாரி மீண்டும் புறப்பட்டு சென்றது.

    கரும்பு ஏற்றி செல்லும் லாரிகள் கரும்புகளை சாலையில் வீசி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இதே செயலில் ஈடுபட்டு வந்தால் லாரி ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்தப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    • ஓட்டல் ஊழியர் பரோட்டாவுக்கு குருமா ஊற்றினார். அதில் இறந்து போன பல்லி கிடந்தது.
    • தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    ஈரோடு:

    அறச்சலூர் ஓடாநிலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 44). மாற்றுத்திறனாளி. இவர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக தனது மனைவி அமுதா (40), உறவினர்களான சந்திரன் (48), சண்முகம் (32) ஆகியோருடன் சுரேஷ் (32) என்பவருக்கு சொந்தமான காரில் வாடகைக்கு எடுத்து வந்தனர்.

    பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்றபோது, ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சாப்பிட முடிவு செய்தனர்.

    மாற்றுத்திறனாளியான செந்தில்குமார் மட்டும் ஓட்டலுக்கு செல்லாமல் காரில் உட்கார்ந்திருந்தார். அமுதா, சந்திரன், சண்முகம், டிரைவர் சுரேஷ் ஆகியோர் ஓட்டலுக்குள் சென்று பரோட்டா சாப்பிட்டனர். அப்போது ஓட்டல் ஊழியர் பரோட்டாவுக்கு குருமா ஊற்றினார். அதில் இறந்து போன பல்லி கிடந்தது.

    இதைப்பார்த்ததும் சாப்பிட்டு கொண்டிருந்த அமுதா, சந்திரன், டிரைவர் சுரேஷ், சண்முகம் ஆகிய 4 பேரும் வாந்தி எடுத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கினர். இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து சிகிச்சையில் இருந்த சுரேஷ் கூறும்போது, "பரோட்டாவுக்கு ஊற்றிய குருமாவில் கிடந்த பல்லியை பார்த்ததும் எங்களுக்கு வாந்தி வந்து விட்டது. இதுதொடர்பாக ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது, அது பல்லி இல்லை கோழியின் கால் என்று கூறினார்கள். நாங்கள் அதனை செல்போனில் படம் எடுப்பதை பார்த்ததும், ஓட்டல் ஊழியர்கள் வந்து பல்லி விழுந்த குருமாவை எடுத்து கீழே ஊற்றி விட்டு, நாங்கள் சாப்பிட்ட இலையையும் அவசர அவசரமாக அப்புறப்படுத்தி விட்டனர். எனவே, சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது உணவு பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 7.45 மணிக்கு ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையிலான குழுவினர், சம்பந்தப்பட்ட ஓட்டலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் 'ஓட்டலை சுகாதாரமாக பராமரிக்கும்படி' அங்கு பணியாற்றியவர்களிடம் ஆலோசனை கூறினர்.

    • காலிங்கராயன் வாய்க்கால் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
    • நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட அனுமதி.

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள 15,743 ஏக்கர் முதல் போக பாசன நிலங்களுக்கு, 16.06.2022 முதல் 13.10.2022 வரை 120 நாட்களுக்கு, தண்ணீர் திறந்த விட கோயம்புத்தூர் மண்டலம் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

    5184 மில்லியன் கன அடிக்கு மிகாமல், இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து ஆணையிடப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஈரோடு கருங்கல்பாளையம், பெரியமாரியம்மன்கோவில் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு, ஜூன். 15-

    ஈரோடு கருங்கல்பாளையம், பெரியமாரியம்மன்கோவில் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசை பார்த்ததும் தப்பியோட முயன்றனர்.

    அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர்கள் கருங்கல்பாளையம், மாரியம்மன்கோயில் வீதியை சேர்ந்த வினோத்(32), ராஜாஜிபுரம் மணி(30) என தெரியவந்தது.

    அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமிருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×