என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கொடுமுடி, சிவகிரி, எழுமாத்தூர், கஸ்பாபேட்டை பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை மின் வாரிய செயற்பொ–றியாளர் முத்துவேல் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    கொடுமுடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வெங்க மேடு, அரசம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், சோளக்ககாளிபாளையம், ஆவுடையார்பாறை மற்றும் நாகமநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இதேபோல் சிவகிரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    இதனால் சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப் பாளையம், பழமங்கலம், வீர சங்கிலி, கல்லாபுரம், விலாங்காட்டு வலசு, எல்லகடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மேலப்பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டபாளையம், அம்மன்கோயில்,தொப்பம்பாளையம், பெரும்பரப்பு, வடுகப்பட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைகிணறு, கரட்டுப்புதூர், காட்டுபாளையம், ராக்காம்பாளையம், இச்சிப்பாளையம், முத்தையன்பாளையம், கருக்கம்பாளையம், ஊஞ்சலூர், ஒத்தகடை, வடக்குபுதுபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இதேபோல் எழுமாத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    இதனால் எழுமாத்தூர், மண்கரடு, செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகப்பட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ள பெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளை யம், ஆனந்தம்பாளையம், ஏரப்பம்பாளையம், மின்னக்காட்டு வலசு, வெப்பிலி, பூந்துறை, சேமூர், மற்றும் 88 வேலம்பாளையம் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இதேபோல் கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    இதனால் கஸ்பா பேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன் பாளையம், செல்லம் பா–ளையம், கோவிந்த நாயக்கம்பாளையம்,

    நஞ்சை ஊத்துக்குளி, செங்காளிபாளையம், மேட்டுப்பாளையம், ஆனைக்கல்பாளையம், ஈ.பி.நகர், கே.எஸ்.ஏ.நகர் இந்தியன்நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், கவுண்டன்பாளையம், சாவடிப்பாளையம், ரகுபதி நாயக்கன்பாளையம் மற்றும் காகத்தான்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • பெண் புரோக்கர் மாலதியிடம் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் விஜயா ஆகியோர் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
    • பண ஆசை காட்டி மேலும் பல பெண்களை அழைத்து சென்று கருமுட்டை விற்பனை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்த சம்பவம் தொடர்பாக அவரது தாய் வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, சிறுமியின் பிறப்பு, ஆதார் சான்றிதழை போலியாக தயாரித்து கொடுத்த ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. இவர்கள் கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஈரோட்டுக்கு வந்தனர். அவர்கள் ஆர்.என்.புதூர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் சிறுமியிடம் கருமுட்டை எடுத்த ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பான ஆவணங்களையும் கேட்டு பெற்றனர். அதோடு இல்லாமல் கடந்த 4 ஆண்டுகளில் ஆஸ்பத்திரிகளில் கருமுட்டை தானம் கொடுத்தவர்கள் பட்டியலையும் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

    சிறுமியிடம் நடத்திய விசாரணையில் திருப்பதி, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கருமுட்டை எடுக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் பெருந்துறையில் உள்ள ஆஸ்பத்திரி மூலம் திருவனந்தபுரத்துக்கும், ஓசூரில் உள்ள ஆஸ்பத்திரி மூலம் திருப்பதிக்கும் சிறுமியை அழைத்து சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து மருத்துவ குழுவினர் 2 ஆஸ்பத்திரிக்கும் ஆவணங்களுடன் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டனர்.

    அதன்படி நேற்று திருப்பதி, திருவனந்தபுரத்தை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி மேலாளர்கள், டாக்டர்கள், நர்சுகள் சென்னை மருத்துவக்குழு முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

    மேலும் ஆவணங்களையும் கேட்டு பெற்றனர். மாலை 3 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை இரவு 8 மணி வரை நடைபெற்றது. பின்னர் மருத்துவ குழுவினர் தேவைப்படும்போது விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

    மருத்துவக்குழு ஒருபுறம் விசாரணை நடத்தி வரும் நிலையில் ஈரோடு ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையில் போலீசாரும் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் நேற்று 2-வது முறையாக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி முன்னிலையில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதற்கிடையே 15 நாள் போலீஸ் காவல் முடிந்து சிறுமியின் தாய் உள்பட 4 பேரும் ஈரோடு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். சூரம்பட்டி போலீசார் பெண் புரோக்கர் மாலதியை 5 நாள் காவலில் எடுக்க கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் 1 நாள் மட்டுமே விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதையடுத்து சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, சான்றிதழ் போலியாக தயாரித்து கொடுத்த ஜான் ஆகிய 3 பேரை மீண்டும் சிறைக்கு அழைத்து சென்றனர். பெண் புரோக்கர் மாலதியை சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    பெண் புரோக்கர் மாலதியிடம் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் விஜயா ஆகியோர் விடிய விடிய விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் மாலதியின் 2 வங்கி கணக்குகளின் பண பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தினர்.

    பொதுவாகவே ஒருவர் கருமுட்டை கொடுத்தால் மீண்டும் 6 மாதம் கழித்துதான் கருமுட்டை கொடுக்க முடியும். அப்படி இருக்கையில் மாலதியின் வங்கி கணக்கில் 6 மாத இடைவெளியில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே அவர் பண ஆசை காட்டி மேலும் பல பெண்களை அழைத்து சென்று கருமுட்டை விற்பனை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைகள் அனைத்தும் போலீசார் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.

    விசாரணை முடிந்ததும் மாலதி மீண்டும் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

    • வெள்ளோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இரவு நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சம்பாள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
    • இதுதொடர்பாக வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள வெள்ளோடு, லட்சுமிபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் குருவன். இவரது மனைவி சம்பாள் (வயது 60).

    சவம்பத்தன்று சம்பாள் வெள்ளோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இரவு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சம்பாள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தலை மற்றும் உடலில் அடிபட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சம்பாள் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு செய்யும் இடத்தில் மழைநீர் புகுந்தது.
    • இதனால் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் சிரமம் அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சூறாவளியுடன் விடிய, விடிய மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேப்போல் மின்கம்பங்கள் விழுந்து சேதம் அடைந்தன. இதனால் மின் தடையும் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் ரோடுகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் 3-வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை 5 மணிக்கு பிறகு மாநகர் பகுதியில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.

    சுமார் 1½ மணி நேரம் பெய்த பலத்த மழையால் மாநகர் பகுதி முழுவதும் வெள்ள காடானது. ரோடுகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    பல்வேறு இடங்களில் தற்போது திட்ட பணிகள் நடந்து வருவதால் அதற்காக தோண்டப்பட்ட இடத்தில் மழை நீர் தேங்கி நின்றது.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு செய்யும் இடத்தில் மழைநீர் புகுந்தது. இதனால் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் சிரமம் அடைந்தனர்.

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளித்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இங்கு லேசான மழை பெய்தாலே சேறும் சகதியுமாக காட்சி அளிப்பது தொடர்கதையாகி வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

    இதேபோல் கவுந்தபாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணையில் 63.8. மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி வழிகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வரட்டுப்பள்ளம்-63.8, ஈரோடு-46, கவுந்தப்பாடி-44.20, பவானிசாகர்-14.4, பெருந்துறை-10, தாள வாடி-3, சென்னிமலை, கோபி-1.

    • சிவகுமாரின் மனைவி ஜெயபிரியா தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
    • அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த குருப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (32). இவரது மனைவி ஜெயபிரியா (28).

    சிவகுமார் மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் கேங்மேனாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். தற்போது ஜெயபிரியா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சிவக்குமார் பெருந்தலையூர்-மேவானி ரோடு சுதாபிரியா தோட்டம் அருகே உள்ள மின்கம்பத்தில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தபாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிவகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கவுந்தபாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் சிவகுமாரின் மனைவி ஜெயபிரியா தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    • பணத்திற்கு ஆசைப்பட்டுகணவன்-மனைவி நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.
    • இது குறித்து நடவடிக்க வேண்டும் என நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த பொது மேலாளர் மாரிமுத்து(42) என்பவர் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    நாங்கள் ஈரோடு, கருங்கல்பாளையம் நியூ ஸ்டேட் பேங்க் காலனியில் தலைமை இடமாக வைத்து நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஈரோடு, பவானி, ஓமலூர், சங்ககிரி, அரச்சலூர், மற்றும் அம்பாசமுத்திரம் என 6 இடங்களில் எங்கள் கிளைகள் உள்ளன.

    எங்கள் நிறுவனத்தில் சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவன்ன கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பணிபுரிந்து வந்தார். அவர் சொல்பவர்கள் எல்லாம் எங்கள் நிறுவனத்திற்கு வரச்சொல்லி ஆவணங்களை சரிபார்த்து பெற்றுக்கொண்டு பணத்தை அவரிடம் வழங்கினோம்.

    அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் திருமணத்தையும் நாங்களே தலைமையேற்று நடத்தி வைத்தோம். இந்நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு இருவரும் எங்கள் நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.

    இருவரும் 3 மாதத்திற்குள் எங்கள் நிதி நிறுவனம் இடமிருந்து ரூ.19 லட்சத்து 37 ஆயிரத்து 325 ரூபாயை மோசடி செய்து கையாடல் செய்து உள்ளனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் உள்ளனர்.

    எனவே அவர்கள் இருவர் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    • சகோதரிக்கும் திருமணமாகி குழந்தை இல்லை. அவரும் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் விரக்தியடைந்து குமார் தற்கொலைக்கு முயன்றார்.
    • இதையடுத்து தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (23). கார்பெண்டர். இவர் சிறிய வயதாக இருக்கும்போதே அவரது பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் குமார் அவரது சகோதரியின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    சகோதரிக்கும் திருமணமாகி குழந்தை இல்லை. அவரும் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதன்கார ணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த குமார் நேற்று இரவு சூளை அருகே உள்ள குரங்கன்பள்ளம் ஓடையில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது கம்பியில் சிக்கி கொண்டார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோட்டில் ஆன்லைனில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் வியாபாரி இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தினர். அந்த பெண் வியாபாரி பணத்தை செலுத்திய வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோட்டை சேர்ந்த பெண் வியாபாரி ஒருவர் மிளகாவை மொத்த விலையில் வாங்குவதற்காக இணையதளம் உதவியை நாடியுள்ளார். அப்போது இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த போன் நம்பருக்கு அந்த பெண் வியாபாரி போன் செய்துள்ளார்.

    அப்போது எதிர்முனையில் பேசியவர்கள் தாங்கள் நிறுவனம் குஜராத்தில் உள்ளது என்றும் மொத்த வியாபாரிகளுக்கு சலுகை விலையில் பொருட்களை அனுப்பி வைத்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய அந்த பெண் வியாபாரி அவர்கள் கூறியபடி ஆயிரம் கிலோ பொருட்கள் வாங்குவதற்காக அவர்கள் கூறிய வங்கி கணக்கில் முன் தொகையாக ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 800-யை செலுத்தியுள்ளார்.

    அதன் பின்னர் அவர்கள் கூறியபடி அந்த பெண் வியாபாரிக்கு அவர்கள் பொருட்களை அனுப்பவில்லை.

    இது குறித்து அந்த பெண் வியாபாரிகள் கேட்டதற்கு காலம் தாழ்த்தி வந்தனர். அதன்பிறகு செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் - ஆப் என்று வந்தது.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் வியாபாரி இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தினர். அந்த பெண் வியாபாரி பணத்தை செலுத்திய வங்கி கணக்கை முதலில் முடக்கினர்.

    அதன் பின்னர் அவர் செலுத்திய பணத்தை அந்த வங்கி கணக்கிலிருந்து எடுத்தனர். நேற்று பாதிக்கப்பட்ட பெண்ணை அலுவலகத்திற்கு நேரடியாக வரவழைத்து மோசடியில் அவர் இழந்த ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 800 பணத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைத்தனர்.

    இதையடுத்து அந்த பெண் வியாபாரி நன்றி கூறி சென்றார்.

    • ஆசனூரில் தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆசனூர் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் ஆசனூர் குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    தாளவாடி, ஜூன்.16-

    ஆசனூரில் தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆசனூர் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் ஆசனூர் குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தண்ணீரால் நனைந்த சாக்குப்பையை போட்டு அணைப்பது குறித்தும் விளக்கம் அளிக்க ப்பட்டது. இதில் கிராம மக்கள் பங்கேற்று தீத்தடுப்பு நடவடிக்கை குறித்து செயல்விளக்கத்தை பார்வையிட்டனர்.

    மேலும் பேரிடர் காலங்களில் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • சத்தியமங்கலம் அருகே ஆட்டுக்கொட்டகையில் இருந்து விவசாய தோட்டம் வழியாக ஆட்டுக்குட்டியை சிறுத்தை இழுத்து சென்றதற்கான அடையாளம் காணப்பட்டது.
    • மேலும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கவும் அவர்கள் பரிந்துரை செ ய்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள ஓட்டக்குட்டை பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் ஆடு வளர்த்து வருகிறார்.

    நேற்று மாலை ஓட்டக்குட்டை பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது மரத்தில் கட்டப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியை சுமதி அருகில் உள்ள ஒரு தொழுவத்தில் கட்டியிருந்தார்.

    சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் சென்ற போது தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டை காணவில்லை. அப்போது ஆட்டுக்கொட்டகையில் இருந்து விவசாய தோட்டம் வழியாக ஆட்டுக்குட்டியை சிறுத்தை இழுத்து சென்றதற்கான அடையாளம் காணப்பட்டது.

    எனவே சிறுத்தை தான் ஆட்டுக் குட்டியை உயிரோடு இழுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுமதி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து கால் தடயங்களை பார்த்த போது அது சிறுத்தையின் கால் தடம் தான் என்று உறுதிசெய்தனர்.

    மேலும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கவும் அவர்கள் பரிந்துரை செ ய்தனர். எனவே விரைவில் கூண்டு வைக்கப்படுகிறது.

    • கோபிசெட்டிபாளையம் அருகே லாரி டிரைவர் உடல் நலம் சரியில்லாத காணத்தால் திடிரென மயங்கி விழந்தார். . உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜெயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என். பாளையம் குமரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயகுமார் (49). ஆப்பக்கூ டலில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையின் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி செல்வி.

    கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன 3 மாதத்திலேயே ஜெயகுமார் மனைவியை விட்டு பிரிந்து வசித்து வருகிறார். மேலும் ஜெயக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் ஊராக சுற்றி வந்துள்ளார்.

    இந்நிலையில் கோபி அருகே உள்ள கரட்டடி பாளையம், திருவள்ளுவர் வீதியில் உள்ள ஒரு வேப்பமரத்தடியில் உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜெயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குடிபோதையில் ஜெயகுமார் சரிவர சாப்பிடாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.

    • பெருந்துறை அருகே முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுதொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள ஈங்கூர் வரப்பாளையம், பாச்சாங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 80). இவர் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கிளீனராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    சம்பவத்தன்று மதியம் சாப்பிட்டுவிட்டு பழைய வீட்டிற்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் வெளியே வராததால் அவரது மனைவி ரங்காத்தாள் மற்றும் மகன் சதாசிவம் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உள்புறம் தாழ் போட்டு இருந்தது.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் விட்டத்தில் கயிற்றில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தார்.

    உடனடியாக அவரை கீழே இறக்கி தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பெரியசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இதுதொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×