என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவுந்தப்பாடி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி
    X

    கவுந்தப்பாடி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி

    • சிவகுமாரின் மனைவி ஜெயபிரியா தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
    • அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த குருப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (32). இவரது மனைவி ஜெயபிரியா (28).

    சிவகுமார் மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் கேங்மேனாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். தற்போது ஜெயபிரியா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சிவக்குமார் பெருந்தலையூர்-மேவானி ரோடு சுதாபிரியா தோட்டம் அருகே உள்ள மின்கம்பத்தில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தபாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிவகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கவுந்தபாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் சிவகுமாரின் மனைவி ஜெயபிரியா தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    Next Story
    ×