அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி

வெள்ளோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இரவு நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சம்பாள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.இதுதொடர்பாக வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி
Published on

பெருந்துறை:

பெருந்துறை அடுத்துள்ள வெள்ளோடு, லட்சுமிபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் குருவன். இவரது மனைவி சம்பாள் (வயது 60).

சவம்பத்தன்று சம்பாள் வெள்ளோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இரவு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சம்பாள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் தலை மற்றும் உடலில் அடிபட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சம்பாள் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com