கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்

அந்தியூர் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்.இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் அட்டகல்லூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். கூலி தொழிலாளி. இவரது மகள் காயத்ரி (21). குமாரபாளையத்தில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தினமும் கல்லூரிக்கு செல்வதற்காக காயத்ரி வீட்டிலிருந்து அந்தியூர் பஸ் நிலையத்திற்கு தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்து அங்கிருந்து பஸ் மூலம் கல்லூரிக்கு செல்வது வழக்கம்.

அதன்படி சம்பவத்தன்று காயத்ரியை அவரது தந்தை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து அந்தியூர் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். பின்னர் காயத்ரி கல்லூரி செல்வதற்காக பஸ்சில் ஏறி சென்று உள்ளார்.

அதன் பின்னர் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை மாயமான தனது மகளை மீட்டுத்தருமாறு அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் அங்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com