என் மலர்tooltip icon

    சென்னை

    • மகாராஷ்டிராவின் அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கான உத்தவ் தாக்கரேவின் உறுதியான நிலைப்பாடு பாராட்டுக்குரியது.
    • கூட்டாட்சி மற்றும் மொழியியல் கண்ணியத்தை பாதுகாக்கும் வலிமைக்கு வாழ்த்துகள்.

    சிவசேனா கட்சி நிறுவனரும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மகாராஷ்டிராவின் அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கான உத்தவ் தாக்கரேவின் உறுதியான நிலைப்பாடு பாராட்டுக்குரியது.

    கூட்டாட்சி மற்றும் மொழியியல் கண்ணியத்தை பாதுகாக்கும் வலிமைக்கு வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தெருநாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் தமிழ்நாடு அரசின் கால்நடை துறை அரசாணை வெளியிட்டது.
    • கருணை கொலை செய்யப்படும் தெருநாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும்.

    மோசமான காயமடைந்து, நோய் வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணை கொலை செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

    தெரு நாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் தமிழ்நாடு அரசின் கால்நடை துறை அரசாணை வெளியிட்டது.

    பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணை கொலை செய்ய வேண்டும். கருணைக்கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். கருணை கொலை செய்யப்படும் தெரு நாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாலையில் சுற்றித்திரியும் விலங்குகளை கட்டுப்படுத்துவது குறித்த கொள்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஆழ்வார்பேட்டை வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
    • மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

    சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் காலனியில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு இன்று அதிகாலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய வாலிபர் ஒருவர் இன்று மாலையில் முதலமைச்சர் டிஸ்சார்ஜ் ஆகும் நிலையில் அவரது வீட்டில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.

    மிரட்டல் விடுத்த நபரின் பெயர் விக்னேஷ் என்பது தெரிய வந்தது. அவர் தொடர்பு கொண்ட எண்ணை வைத்து கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    மிரட்டலை தொடர்ந்து இன்று காலையில் முதலமைச்சரின் வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஆழ்வார்பேட்டை வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

    இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும் முதலமைச்சரின் வீடு உள்ள சித்தரஞ்சன் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் முதலமைச்சரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து நீலாங்கரையில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

    நீலாங்கரை போலீசார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.

    • பிரதமர் மோடிக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.
    • பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

    தமிழக மக்களின் உணர்வுகளுக்கு பிரதமர் மதிப்பளிப்பார் என நம்புகிறேன் என பிரதமர் மோடிக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி, ஏழை - நடுத்தர மக்களின் போக்குவரத்துக்காக ரெயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

    மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
    • மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்நிலையில், முதல்வரின் வீட்டில் காவல் துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.

    ஆனால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.

    மேலும், காவல் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இது லட்சிய கூட்டத்திற்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கும் இடையில் நடக்கும் போர்.
    • தமிழ் தேசிய இனத்தின் உரிமை கனமை கொண்டுள்ள சித்தாந்தமா? சினிமாவா?

    சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் சீமான் உரையாற்றி வருகிறார்.

    அப்போது அவர் கூறுகையில்," இது லட்சிய கூட்டத்திற்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கும் இடையில் நடக்கும் போர் என விஜயை மறைமுகமாக சண்டைக்கு அழைத்துள்ளார் சீமான்.

    தமிழ் தேசிய இனத்தின் உரிமை கனமை கொண்டுள்ள சித்தாந்தமா? சினிமாவா? இதுதான் சண்டை" என சீமான் கூறியுள்ளார்.

    • களச்செயல்பாடுகள் குறத்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் முதல்வர் ஆலோசனை.
    • ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்!

    உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடி கொண்டிருக்கும்போது ஓய்வெடுக்க மனமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, உயிராக இயக்கும் களச்செயல்பாடுகள் குறத்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை!

    உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர, #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்!

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அனுமதிக்கப்படாத வாசகங்கள், புகைப்படங்கள் அல்லது ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தக் கூடாது.
    • கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாசகங்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் தவெகவினர் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக் காலத்தில், கழகத் தோழர்கள் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதவாறு மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும்.

    வீடு வீடாகச் செல்லும் பரப்புரை, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் தலைமைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாசகங்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    சுவர் எழுத்துகள், பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் இவை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்படாத வாசகங்கள், புகைப்படங்கள் அல்லது ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தக் கூடாது.

    தேர்தல் பரப்புரை, பொதுக் கூட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவற்றில் அங்கீகரிக்கப்படாத பேனர்கள், வடிவமைப்புகள், இலச்சினைகள் அல்லது வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது.

    முதல்வர் வேட்பாளர் அல்லது கழகத் தலைவர் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட உள்ளடக்கம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இதைப் பின்பற்றாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    உள்ளரங்கு, பொதுவெளி மற்றும் பொதுக் கூட்டங்களின் போது, கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் வெடி வெடிப்பது உள்ளிட்ட அதிகப்படியான கொண்டாட்டங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    நிகழ்ச்சிகளின் போது, பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல், பொதுமக்களின் உற்ற தோழர்களாகக் கழகத் தோழர்கள் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 'இந்தியாவின் பழங்கால வரலாற்றை திருத்தி எழுதி உள்ளது கீழடி'.
    • கீழடி நாகரிகத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் வகையில் திமுக வீடியோ வெளியீடு.

    பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வரவுள்ள நிலையில், கீழடி தொடர்பான வீடியோ ஒன்றை திமுக அரசு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, கீழடி நாகரிகத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் வகையில் திமுக வீடியோ வெளியிட்டுள்ளது.

    • தமிழ்நாடு முழுவதும் உள்ள மேய்ச்சல், தரிசு, மந்தை புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும்.
    • கால்நடைகளை மேய்ப்பதற்கு பல இடங்களில் வனத்துறை தடை விதித்துள்ளதைக் கண்டித்து போராட்டம்.

    நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில், மாடு மேய்க்கும் போராட்டம் நடைபெறும் என்றும், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று மாடு மேய்ப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தேனி அடப்பாறையில் ஆக.3ம் தேதி வரும் ஆகஸ்ட் 3ம் தேதி மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

    கால்நடைகளை மேய்ப்பதற்கு பல இடங்களில் வனத்துறை தடை விதித்துள்ளதைக் கண்டித்து மாடு மேய்க்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள மேய்ச்சல், தரிசு, மந்தை புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

    ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை சீமான் நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திமுக மண்டல பொறுப்பாளர்கள் 8 பேர், மருத்துவமனைக்கு இன்றே நேரில் வர முதலமைச்சர் அழைப்பு .
    • ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்வதற்காக அழைப்பு என தகவல்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அங்கிருந்தபடியே ஓரணியில் தமிழ்நாடு நிலவரம், தேர்தல் களப்பணிகள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், திமுக மண்டல பொறுப்பாளர்கள் 8 பேர், அப்போலோ மருத்துவமனைக்கு இன்றே நேரில் வர வேண்டும் என்று முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

    ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    2026 சட்டமன்றத் தேர்தல் களப் பணிகள் குறித்து முதலமைச்சர் அறிவுரைகளை வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • மு.க.ஸ்டாலினிடம் பல வகைகளில் எடுத்துக் கூறியும் அவரால் அதன் நுட்பத்தையும், தேவையையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
    • தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை பாதுகாப்பதற்கான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தத் தவறியதன் மூலம் தாம் பெரும் தவறை செய்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

    மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பால் மாநிலங்களின் சமூகநீதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கான தரவுகளை வழங்க முடியாது; ஒவ்வொரு மாநிலமும் அதன் சமூகநீதித் தேவைகளுக்காக தனித்தனியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் ராகுல்காந்தி கூறியுள்ள கருத்தின் பொருளாகும்.

    ஆனால், இந்தக் கருத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பல வகைகளில் எடுத்துக் கூறியும் அவரால் அதன் நுட்பத்தையும், தேவையையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

    அவரைப் பொறுத்தவரை சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒவ்வொரு சாதியின் மக்கள்தொகை விவரங்களை வெளிக் கொண்டு வரக்கூடியது. அந்த விவரங்கள் வெளிவந்தால் மக்களை ஏமாற்றி பிழைக்க முடியாது என்பது தான் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த எண்ணமாக இருக்கிறது.

    இந்த நிலைப்பாடு தவறு என்பதை முதலமைச்சர் எப்போது புரிந்துகொள்வார் என்பது தான் தெரியவில்லை. தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் முழுமையான சமூகநீதியை வழங்கவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உணர வேண்டும்.

    ராகுல்காந்தி ஆட்சியை இழந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு உணர்ந்த தவறை மு.க.ஸ்டாலின் பதவிக்காலத்திலேயே உணர வேண்டும். தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும்.

    தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது, 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் களைய இது மிகவும் அவசியமாகும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் விவாதம் நடத்தி புரிய வைக்கத் தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×