search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலம், நாமக்கல்லில் இன்று பிளஸ்-2 இயற்பியல் தேர்வு

    சேலம், நாமக்கல்லில் இன்று பிளஸ்-2 இயற்பியல் தேர்வு மாணவர்கள் உற்சாகமாக எழுதினர்.
    சேலம்:

    தமிழகம் முழுவதும்  கடந்த (5-ந்தேதி) வியாழக்கிழமை  பிளஸ்-2 பொதுத்தேர்வு  தொடங்கியது.  இந்த தேர்வு சேலம்  மாவட்டத்தில் 154 மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 82 மையங்களிலும்  நடைபெறுகின்றன.

    உற்சாகமாக எழுதினர் 
    இன்று (வெள்ளிக்கிழமை) இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடந்தது. பிளஸ்-2  மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகளை எழுதினர். அவ்வபோது தேர்வு மைய கண்காணிப்பாளர்களும், பறக்கும் படையினரும் தேர்வு நடைபெறும் வகுப்புகளுக்கு வந்து  மாணவ- மாணவிகள் எழுதிய விடைத்தாள், வினாத்தாள், ஹால்டிக்கெட் ஆகியவற்றை வாங்கி அவற்றை பரிேசாதித்தனர். தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது.

    தொடர்ந்து நாளை (21-ந்தேதி) , நாளை மறுநாள் (22-ந்தேதி) ஆகிய தேதிகளில் தேர்வுகள் இல்லை.  மாணவ- மாணவிகள் பாடங்களை படிப்பதற்கு ஏதுவாக இந்த 2 நாட்களும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஒரே நாளில் 11 பாடங்கள் 
    இதையடுத்து வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை)  ஒரே நாளில் உயிரியல், தாவரவியல், வரலாறு,  வணிக கணிதம் மற்றும் புள்ளி விபரங்கள், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ராணிக்ஸ் என்ஜினீயரிங்,  அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோமொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங்,  டெக்ஸ்டைல்  டெக்னாலஜி, அலுவலக நிர்வாகம் மற்றும் செயலக பதவி உள்ளிட்ட 11 பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகின்றன.
    Next Story
    ×