என் மலர்
நீங்கள் தேடியது "physics"
- பிளஸ்-2 தேர்வில் பண்ருட்டி ஜான்டூயி பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- யோகஸ்ரீ என்ற மாணவி வணிகவியல், பொருளியல், கணினிபயன்பாடு ஆகிய மூன்று பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
நடந்து முடிந்த பிளஸ்- 2 தேர்வில் பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி+2பொதுதேர்வில்தேர்வு எழுதிய 402 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100சதவீததேர்ச்சிபெற்றுசாதனைபடைத்துள்ளது. மாணவன்அருண் கார்த்திக், மாணவி தர்ஷனாஆகிய இருவரும் 591 மதிப்பெண்கள்பெற்று முதலிடம் பிடித்தனர். 570க்கு மேல் 14 மாணவ-மாணவியர்களும் 550க்குமேல் 29 மாணவ- மாணவியர்களும், 500க்கு மேல் 92 மாவை, மாணவியர்களும்தேர்ச்சி பெற்றுள்ளனர்.
25 மாணவ மாணவிகள் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனைபடைத்துள்ளனர். மாணவன்ஹரிஹரன் இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகியமூன்று பாடங்களிலும், யோகஸ்ரீ என்ற மாணவி வணிகவியல், பொருளியல், கணினிபயன்பாடு ஆகிய மூன்று பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் வீரதாஸ், பள்ளி முதல்வர் வாலண்டினா லெஸ்லி, தலைமை யாசிரியர் மணிகண்டன், ஆசிரியர்கள் பாராட்டி பரிசு ழங்கினர்.
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.
இயற்பியல் துறை வல்லுநர்களான அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் அஸ்கின், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெரார்டு மவுரோ மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த டோனோ ஸ்ட்ரிக்லேண்ட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நீண்ட காலத்துக்கு பிறகு இயற்பியலுக்காக நோபல் பரிசு பெறும் 3-வது பெண் விஞ்ஞானி என்ற பெருமையையும் டோனோ ஸ்ட்ரிக்லேண்ட் தட்டிச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாளை வேதியியலுக்கான நோபல் பரிசும், 5-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 8-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. #NobelPrize #NobelPrizeForPhysics
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
மொழிப்பாடத்தில் 8,60,434 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 8 லட்சத்து 33 ஆயிரத்து 319 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.85 ஆகும்.
ஆங்கிலம் பாடத்தில் 8,34,370 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.97 ஆகும்.
இயற்பியல் பாடத்தில் 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 5 லட்சத்து 44 ஆயிரத்து 553 பேர் தேர்வு எழுதினர். இதில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 163 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர்.
வேதியியல் பாடத்தில் 5 லட்சத்து 17 ஆயிரத்து 419 பேர் தேர்ச்சி பெற்றனர். 95.02 சதவீதம் தேர்ச்சியாகும்.
உயிரியல் பாடத்தில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 325 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 10 பேர் வெற்றி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.34 ஆகும்.

புவியியல் பாடத்தை 13,972 பேர் எழுதினர். இதில் 13,862 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 99.21 ஆகும். ஹோம் சயின்ஸ் பாடத்தில் 99.78 சதவீதமும், புள்ளியியல் பாடத்தில் 98.31 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.
231 மாணவ-மாணவிகள் 1180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இதில் 181 மாணவிகள் அடங்குவர். மீதியுள்ள 50 பேர் மாண வர்கள்.
1151 -1180 மதிப்பெண் வரை 4847 பேரும், 1126-1150 மார்க்வரை 8510 பேரும், 1101-1125 மதிப்பெண் வரை 11,739 பேரும் பெற்று உள்ளனர். 1001-1,100 மார்க்வரை 71,368 பேரும், 901-1000 மதிப்பெண்வரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 266 பேர் பெற்றுள்ளனர். #PlusTwoExamResults #PlusTwoResults #Plus2Result