search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உயர்ந்த பதக்கங்களை வென்ற இந்தியர்கள்: பைடன் வழங்கினார்
    X

    உயர்ந்த பதக்கங்களை வென்ற இந்தியர்கள்: பைடன் வழங்கினார்

    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உயர்ந்த விருதாக கருதப்படுகிறது
    • அசோக் கேட்கில் மற்றும் டாக்டர் சுப்ரா சுரேஷ் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள்

    1973 கான்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பவுதிகத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர் 63 வயதான அசோக் கேட்கில் (Ashok Gadgil). இவர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைகழகத்தில் பவுதிகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

    1993ல் இந்தியாவில் ஏற்பட்ட காலரா தொற்றுநோய் பாதிப்பை கண்ட கேட்கில், புற ஊதா கதிர் மூலமாக குடிநீரை சுத்திகரிப்பு செய்யும் சாதனத்தை கண்டுபிடித்தார். வளர்ந்து வரும் நாடுகளில் தூய்மையான குடிநீர் கிடைப்பதற்காக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருபவர், கேட்கில்.

    இவரை போன்ற மற்றொரு ஆராய்ச்சியாளர் அமெரிக்காவின் புகழ் பெற்ற எம்.ஐ.டி. (MIT) பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் 66 வயதான டாக்டர். சுப்ரா சுரேஷ் (Dr. Subra Suresh). பொறியியல் படிப்பிற்கான பிரவுன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக உள்ளார்.




    இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவருக்கும் அமெரிக்காவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உயர்ந்த விருதான தேசிய பதக்கம் (National Medal of Sciences) கிடைத்துள்ளது. மனிதகுலத்திற்கு இன்றியமையாத அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளில் இவர்கள் காட்டிய அர்ப்பணிப்பிற்காக இந்த பதக்கங்கள் வழங்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.

    இருவருக்கும் இந்த பதக்கங்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கினார்.

    Next Story
    ×