search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    ஆனங்கூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

    ஆனங்கூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள ஆனங்கூரில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 3 ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று இரவு பூச்சூட்டல் நிகழ்ச்சியும், கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.   கடந்த 9-ம் தேதி திங்கட்கிழமை அன்று வடி சோறு நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இன்று மாலை பொங்கல், மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது . இதனையொட்டி இன்று காலை சுமார் 8 மணியளவில் ஆனங்கூர் கிராம சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் கொண்டு வந்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் வைத்து அங்கிருந்து ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க அருகாமையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு செல்லாண்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால் மூலம் பகல் சுமார் 11 மணிக்கு மேல் பாலாபிஷேகம் நடைபெற்றது. 

    இன்று மாலை சுமார் 7 மணி அளவில் பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படையல் போட்டு பொங்கல் பூஜையும், அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் ஆனங்கூர் கிராம சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக கொண்டு வந்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் வரிசையாக வைத்து மாவிளக்கு பூஜை  நடைபெறுகிறது.  அதனை தொடர்ந்து வானவேடிக்கை நடைபெறுகிறது.

     நாளை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு மேல் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்துள்ளனர்.
    Next Story
    ×