search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய மந்திரி பர்ஷோத்தம்ரூபாலாவிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மனு அளித்த போது எடுத்தபடம். அருகில் கனிமொழி
    X
    மத்திய மந்திரி பர்ஷோத்தம்ரூபாலாவிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மனு அளித்த போது எடுத்தபடம். அருகில் கனிமொழி

    தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும்- மத்திய மந்திரியிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை

    டெல்லியில் மத்திய மீனவளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
    உடன்குடி:

    தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதா கிருஷ்ணன் டெல்லியில் மத்திய மீனவளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவை நேரில் சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- 

    தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும், பாகிஸ்தான் வளைகுடா பகுதிகளில் பல மாதங்கள் தங்கி மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க வேண்டும்.

    இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகு களை மீட்க வேண்டும்.பல்வேறு நாடுகளின் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் நலன்களை காக்க தேசிய ஆணையம் அமைக்க வேண்டும். 

    மீன்பிடித் தடைக் காலத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பொதுக் காப்பீடு வழங்க வேண்டும். மீன்பிடித் தொழிலில் புதிய உத்திகளை கையாளுதல், வானிலை அறிவிப்பு களை தெளிவாக அறிந்து கொள்ள புதிய நுட்ப களைப்பயன் படுத்துதல், மீன் இருக்கும் இடங்களை அறிந்துகொள்ள நவீன உத்திகளைக் கையாள மீனவர்களுக்கு பயிற்சிய ளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    கோரிக்கை மனுக்களைப் பெற்ற மத்திய மந்திரி உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படும் என உறுதியளித்தார். அப்போது கனிமொழி  எம்.பி.உடனிருந்தார்.
    Next Story
    ×