என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம் மாவட்டத்தில் மிளகாய் வத்தல் கிலோ ரூ.210 ஆக உயர்ந்தது
Byமாலை மலர்25 Jan 2022 9:33 AM GMT (Updated: 25 Jan 2022 9:33 AM GMT)
சேலத்தில் மிளகாய் வத்தல் கிலோ ரூ.210 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர், ஏற்காடு, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், எடப்பாடி, சங்ககிரி, வாழப்பாடி, ஆத்தூர், நரசிங்கபுரம், தலைவாசல், தாரமங்கலம், உள்பட பல பகுதிகளில் தினசரி சந்தைகள் இயங்கி வருகின்றன.
இங்கு விற்பனைக்காக சேலம் மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இருந்தும் மிளகாய் வத்தல் குவிண்டால் அடிப்படையில் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
குறிப்பாக அதிக அளவில் மிளகாய் வத்தல் ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மிளகாய் வத்தலை வியாபாரிகள் நேரடியாகவே கொள்முதல் செய்து சாக்குமூட்டைகளில் வைத்து லாரிகள், ரெயில்கள் மூலமாக சேலம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.
பின்னர் இவற்றை கடை உரிமையாளர்கள் சில்லரை விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதில் முதல் ரக மிளகாய் வத்தல்களில் ஒன்றான சிறிய அளவில் இருக்கும் வத்தல் விலை தற்போது உயர்ந்துள்ளது. இந்த வத்தல் காரம் அதிகமாக இருக்கும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.170க்கு விற்ற இந்த வத்தல் தற்போது ரூ.220க்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்குள் ரூ.50 விலை அதிகரித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு அதிகபட்சமாக கிலோ110 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த வத்தல் விலை படிப்படியாக உயர்ந்து கிலோ 220 ரூபாயாக இரட்டிப்பாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×