search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    முதல்முறையாக உள்ளாட்சி தேர்தலை சந்தித்த கமல் கட்சிக்கு கடும் பின்னடைவு

    பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலைப்போல உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கினார்.

    இதன்பிறகு பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு நடைபெற்ற 2 பொதுத்தேர்தல்களை மக்கள் நீதி மய்யம் சந்தித்தது. இதில் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

    இந்த கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. 2 தேர்தல்களிலுமே மக்கள் நீதி மய்யம் தோல்வியை தழுவி இருந்தது.

    இந்த நிலையில் 9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில்
    மக்கள் நீதி மய்யம்
    முதல்முறையாக போட்டியிட்டது. பல இடங்களில் மாவட்ட, ஒன்றிய, கிராம அளவில் போட்டியிடுவதற்கு கூட ஆட்கள் கிடைக்காத நிலையில் குறைவான இடங்களிலேயே மக்கள் நீதி மய்யம் களம் இறங்கியது.

     மக்கள் நீதி மய்யம்

    பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலைப்போல உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி எந்த இடங்களிலும் வெற்றி பெறவில்லை. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு குறைவான வாக்குகள் கிடைத்த 9 மாவட்டங்களில் தான் தற்போது தேர்தல் நடந்துள்ளது.

    இந்த மாவட்டங்களின் ஊரக பகுதிகளிலும், மாவட்ட அளவிலும் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் தான் உள்ளாட்சி தேர்தலை சந்தித்தோம்’ என்று தெரிவித்தார்.


    Next Story
    ×