search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    மு.க.ஸ்டாலினுக்கு டி.டி.வி. தினகரன் வாழ்த்து

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கின்றனர்.
    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெறுகிறது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கின்றனர்.

    இந்த நிலையில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலினுக்கு டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில், தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். தங்களின் பதவியேற்பு விழாவிற்கு அழைத்தமைக்கு நன்றி. கொரோனா பேரிடர் நேரத்தில் பொறுப்பேற்கும் தங்களின் பணி, தமிழ்நாட்டு மக்களைப்  பாதுகாத்திடும் வகையில் அமைந்திட வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
    Next Story
    ×