search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் முக ஸ்டாலின் - வைகோ
    X
    திமுக தலைவர் முக ஸ்டாலின் - வைகோ

    விவசாயிகளுக்கு ஆதரவாக தடையை மீறி திமுக-கூட்டணி கட்சி தலைவர்கள் உண்ணாவிரதம்

    விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் சென்னையில் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் வள்ளுவர் கோட்டம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி கொடுக்காத நிலையில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 8 மணிக்கு வந்தார்.

    உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுகவினர்

    பச்சை துண்டு அணிந்து வந்திருந்தார். அவருடன் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் பொன்முடி, கே.என்.நேரு, கீதாஜீவன் ஆகியோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

    மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமைக்கட்சியினர் மேடையின் நடுவே அமர்ந்து இருந்தனர். இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் பொன்.குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், ஐ.ஜே.கே. கட்சி தலைவர் பச்சைமுத்து, சி.ஐ.டி.யு. சவுந்தரராஜன், பஷீர்அகமது, கிறிஸ்தவ நல்லெணக்க இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், சுப வீரபாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர்கள் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் மு.க.ஸ்டாலினுடன் மேடையில் அமர்ந்து இருந்தனர்.

    மேடைக்கு வலதுபுறம் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்திருந்தனர். மேடைக்கு இடது புறம் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்திருந்தனர்.

    மேடைக்கு எதிரே அனைத்துக்கட்சி நிர்வாகிகள், தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், மகளிர் அணியினர் ஏராளமானோர் திரளாக அமர்ந்திருந்தனர்.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, வாகை சந்திரசேகர், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, காஞ்சிபுரம் செல்வம், மாவட்ட செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, சிற்றரசு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ், மயிலை வேலு, ஆவடி நாசர், காஞ்சிபுரம் சுந்தர், மாதவரம் சுதர்சனம்.

    திருச்சி சிவா, ரங்கநாதன் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், அடையாறு துரை, பி.வி.தமிழ்ச்செல்வன், படப்பை மனோகரன், பல்லாவரம் ஜோசப் அண்ணாதுரை, ரஞ்சன், ரமேஷ், ஜானகிராமன், பாலவாக்கம் விஸ்வநாதன், பெருங்குடி ரவி, ஐ.கென்னடி, அகஸ்டின்பாபு, ஜெ.கருணாநிதி, சேப்பாக்கம் சிதம்பரம், சைதை குணசேகரன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் உண்ணாவிரதத்தில் பங்கேற்று இருந்தனர்.

    மேடையில் ஒவ்வொரு தலைவர்களும் பேசி முடிக்கும் போதும் மோடி அரசை எதிர்த்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரியும் பாடல்கள் இசைக்கப்பட்டன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் உண்ணாவிரதத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் போலீசார் அவர்களை வள்ளுவர் கோட்டம் மெயின் ரோட்டுக்கு வர விடாதவாறு தடுப்புகள் அமைத்து இருந்தனர்.

    இதனால் உண்ணாவிரதத்திற்கு வந்தவர்கள் அங்கிருந்த பூங்காக்கள் மற்றும் சாலைகளில் திரண்டிருந்தனர்.

    மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்களை தொண்டர்கள் பார்த்து செல்லும் வகையில் அங்கு இட வசதிகள் செய்யப்பட்டு இருந்ததால் அதன் வழியாக நிர்வாகிகள் தலைவர்களுக்கு வணக்கம் செலுத்தியபடி சென்றனர்.

    காலை 10 மணிக்கு பிறகும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது.

    உண்ணாவிரதத்திற்கு வந்த ஒவ்வொருவரும் பச்சை கலரில் முக கவசம் அணிந்து இருந்தனர். அதில் விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்ப பெற என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

    உண்ணாவிரதத்திற்கு போலீஸ் அனுமதி இல்லை என்பதால் தடையை மீறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தோழமை கட்சியினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் அறிவித்து உள்ளனர்.
    Next Story
    ×