search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்எஸ் பாரதி
    X
    ஆர்எஸ் பாரதி

    ரஜினியால் திமுகவுக்கு வரவும் இல்லை, செலவும் இல்லை- ஆர்.எஸ்.பாரதி

    ரஜினியால் திமுகவுக்கு வரவும் இல்லை, செலவும் இல்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இதற்கான முறைப்படி அறிவிப்பை பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

    இந்நிலையில் 2 பேரையும் ரஜினி வாழ்த்தியதால் திமுகவில் அதிர்வலை என்ற கேள்விக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

    துரைமுருகன், டி.ஆர்.பாலுவை ரஜினி வாழ்த்தியதால் திமுகவுக்கு எந்த வரவும் வரப்போவதில்லை. ரஜினி வாழ்த்தாததால் திமுகவுக்கு எந்த செலவும் இல்லை.

    நண்பர்கள் என்பதால் துரைமுருகன், டி.ஆர்.பாலுவை நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×