என் மலர்

  செய்திகள்

  பாளையங்கோட்டை கோர்ட்டு எதிரே உள்ள பெல் பள்ளி மைதானத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்
  X
  பாளையங்கோட்டை கோர்ட்டு எதிரே உள்ள பெல் பள்ளி மைதானத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்

  பாளையங்கோட்டை மார்க்கெட்டில் இருந்து இறைச்சி, மீன் கடைகள் இடமாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாளையங்கோட்டை மார்க்கெட்டில் இருந்து இறைச்சி, மீன் கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. அங்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
  நெல்லை:

  பாளையங்கோட்டை மார்க்கெட்டின் தெற்கு பகுதியில் ஏராளமான இறைச்சி மற்றும் கோழிக்கடைகளும், மீன் கடைகளும் உள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் உணவு பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த நேரத்தில் இறைச்சி, கோழி விற்பனை அதிக அளவில் நடந்து வந்தது.

  இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் இறைச்சி, மீன் வாங்க பாளைங்கோட்டை மார்க்கெட்டிற்கு திரண்டு வந்தனர். இதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியவில்லை. போலீசாரும், வருவாய்த்துறையினரும், சுகாதாரத்துறையினரும் அங்கு சென்று மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.

  இதைத்தொடர்ந்து மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் ஊழியர்கள் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் ஆய்வு நடத்தினார்கள்.

  பின்னர் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக மார்க்கெட்டில் இருந்து இறைச்சி, மீன் கடைகள், பாளையங்கோட்டை கோர்ட்டு எதிரே உள்ள பெல் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு 20 கடைகள் அமைக்கப்படுகின்றன.

  இதேபோல் நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு டவுன் கண்டியப்பேரி மருத்துவமனை அருகில் உள்ள உழவர் சந்தை மைதானத்திலும், தச்சை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு டவுன் ஆர்ச்சில் இருந்து அருணகிரி தியேட்டர் நோக்கி செல்லும் திட்ட சாலையிலும் இறைச்சி கடைகள் வைத்து வியாபாரம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிப்பதற்கான வட்டம் போடப்பட்டுள்ளது. அங்கு நேற்று முதல் கடைகள் செயல்பட்டன.

  இந்த தகவலை சுகாதார ஆய்வாளர் இளங்கோ தெரிவித்துள்ளார்.


  Next Story
  ×