
இந்து மக்கள் கட்சி சார்பில் ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் வைத்து இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் வணங்கினார்.

2021-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் ரஜினிகாந்த் தனித்தே போட்டியிட்டு மாற்றத்தை ஏற்படுத்துவார். அவரது அரசியல் மக்கள் நலன் காக்கும் அரசியலாக இருக்கும். வருகிற தேர்தலில் ரஜினி நிச்சயம் மாற்றத்தை தருவார்.
ராயப்பேட்டையில் நடக்கும் இந்து மக்கள் கட்சி அரசியல் மாநாட்டையொட்டி, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து டிசம்பர் 1-ந்தேதி காலை 11 மணிக்கு காவி கொடி பேரணி தொடங்குகிறது.
இந்த மாநாட்டில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பா.ஜனதா மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
லஞ்ச ஊழலை ஒழிக்க வேண்டும், கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும், தமிழகத்தில் ஆன்மீக அரசியலை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.