search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகழேந்தி
    X
    புகழேந்தி

    அ.தி.மு.க.வில் இணைவது எப்போது?- புகழேந்தி பதில்

    அ.தி.மு.க.வில் இணைவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
    சேலம்:

    டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்தவர் புகழேந்தி. கர்நாடக மாநில செய்தி தொடர்பாளராகவும் அவர் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் டிடி.வி. தினகரனுடன் புகழேந்திக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதையடுத்து புகழேந்தி அதிருப்தியில் இருந்து வந்தார். தனியாகவும் ஆதரவாளர்களுடன் கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் இன்று பகல் சேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கி இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழேந்தி திடீரென்று சந்தித்து பேசினார்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்பு புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை அறிந்ததும் உண்மையிலேயே நெஞ்சார்ந்த இதயத்தில் இருந்து வாழ்த்த வேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது. ஏனென்றால் நேற்றைய தினம் பெற்றிருக்கின்ற ஒரு வெற்றி இமாலய வெற்றி.

    அம்மா அவர்களுக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் இன்சார்ஜ் ஆக பணியாற்றினேன். அப்போது அதிகமான வாக்குகள் லீடிங் காண்பித்தோம். அம்மா இன்றைக்கு இருந்திருந்தால், எவ்வளவு பெரிய லீடிங்கை காண்பித்து இருப்பார்களோ, அதே லீடிங்கை, தற்போது காண்பித்து இருக்கிறார்கள்.

    இப்போது கட்சியில் சேர நான் வரவில்லை. நெஞ்சார வாழ்த்த வந்தோம். வாழ்த்தினோம். இந்த வெற்றி சிறக்க வேண்டும். தொடர வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    அ.தி.மு.க. கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்தவித ஆபத்தும் இல்லாமல் வீறு நடைபோடுகிறது. அ.தி.மு.க.வில் இணைவது குறித்தும் அரசியல் குறித்தும் எடப்பாடி பழனிசாமியிடம் நான் பேசவில்லை. எனது மாமியார் வீடு சேலத்தில் இருப்பதால் அருகில் உள்ள முதல்வர் வீட்டிற்கு சென்று முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

    அ.தி.மு.க.வில் இணைவது குறித்து விரைவில் அறிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×