search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாழைத்தார்
    X
    வாழைத்தார்

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு காய்கறி, வாழைத்தார் வரத்து அதிகரிப்பு

    கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து அதிகரித்து காணப்பட்டது.
    மேட்டுப்பாளையம்:

    கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது.

    முட்டைகோஸ் 40 லோடு, கேரட் 3000-ல் இருந்து 4000 மூட்டை, பீட்ரூட் 1500 மூட்டை, முள்ளங்கி 100 மூட்டை, பீன்ஸ் 250 மூட்டையும் வந்திருந்தது. வரத்து அதிகரித்து காணப்பட்டதால் விலையும் குறைந்து காணப்பட்டது.

    முட்டைகோஸ் ஒரு கிலோ ரூ.5ல் இருந்து ரூ.10, கேரட் ஒரு கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.50, பீட்ரூட் ஒரு கிலோ ரூ.20-ல் இருந்து ரூ.30, முள்ளங்கி ஒரு கிலோ ரூ.10-ல் இருந்து ரூ.20, பீன்ஸ் ஒரு கிலோ ரூ.40-ல் இருந்து ரூ.60 வரையும் விற்பனை ஆனது.

    ஊட்டியில் இருந்து 32 லோடு, திம்பத்தில் இருந்து 35 லோடு, ஆசனில் இருந்து 15 லோடு, குஜராத்தில் இருந்து 25 லோடு, கோலாரில் இருந்து 6 லோடு வந்திருந்தது. வரத்து அதிதமாகக் காணப்பட்டதால் விலையும் வீழ்ச்சியடைந்தது.

    ஊட்டி உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.800-ல் இருந்து ரூ.1300, திம்பம் ரூ.500-ல் இருந்து ரூ.800, ஆசன் ரூ.700-ல் இருந்து ரூ.800, குஜராத் ரூ.500-ல் இருந்து ரூ.750, கோலார் ரூ.600-ல் இருந்து ரூ.800 வரையும் விற்பனை ஆனது.

    மொத்தத்தில் ஓணம் பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம் மார்க்கெட் பரபரப்பாக காணப்படுகின்றது.

    மேட்டுப்பாளையம், அன்னூர், அவினாசி ஆகிய தாலுகாக்கள் ஈரோடு மாவட்டம் மற்றும் பில்லூர் டேம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கதளி, நேந்திரன், பூவன், ரஸ்தாளி, செவ்வாழை, ரொபஸ்டா, தேன் வாழை, மொந்தன் ஆகிய 10 ஆயிரம் வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்தன. அதன்பின்னர் நடைபெற்ற ஏலத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 35 வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கோரினார்கள். ஏலத்தில் கதளி ஒரு கிலோ ரூ.20ல் இருந்து ரூ.60, நேந்திரன் ஒரு கிலோ ரூ.15-ல் இருந்து ரூ.40, பூவன் ஒரு தார் ரூ.150-ல் இருந்து ரூ780, ரஸ்தாளி ஒரு தார் ரூ.200-ல் இருந்து ரூ.650, ரொபஸ்டா ஒரு தார் ரூ.150-ல் இருந்து ரூ.650, செவ்வாழை ஒரு தார் ரூ.250-ல் இருந்து ரூ.900, தேன் வாழை ரூ.150-ல் இருந்து ரூ.650, மொந்தன் ஒருதார் ரூ.200-ல் இருந்துரூ.550 வரை விற்பனை ஆனது.மழை காரணமாக கேரள வியாபாரிகள் வருகை குறைந்து காணப்பட்டது. ஓணம் பண்டிகையையொட்டி விவசாயிகள் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல விலை கிடைக்கவில்லை.

    வெள்ளைப்பூண்டு மண்டிகளுக்கு நீலகிரி, கர்நாடகாவில் இருந்துசுமார் 10 ஆயிரம் மூட்டைகள் வந்திருந்தன. நீலகிரி வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ ரூ.150-ல்இருந்து ரூ.260, கர்நாடக வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.230 வரை விற்பனை ஆனது. கடந்த வாரத்தை விட சற்று விலை குறைந்து காணப்பட்டது.


    Next Story
    ×