என் மலர்

  செய்திகள்

  கொலையுண்ட ரஞ்சித்
  X
  கொலையுண்ட ரஞ்சித்

  நெற்குன்றத்தில் தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெற்குன்றத்தில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  போரூர்:

  நெற்குன்றம் ஏ.வி.கே.நகர் மெயின் ரோட்டில் உள்ள அட்டை கம்பெனி முன்பு வாலிபர் ஒருவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  இன்ஸ்பெக்டர் மாதேஸ் வரன், சப்-இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் ஆகியோர் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் திருவேற்காடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 24) என்பது தெரியவந்தது.

  மது அருந்தும் போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரஞ்சித் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

  திருவேற்காடை சேர்ந்த ரஞ்சித் ஏதற்காக இங்கு வந்தார். ஏற்கனவே யாருடனும் முன்விரோதம் உள்ளதா? அவருடன் நண்பர்கள் யாரேனும் வந்தனரா? என்பது குறித்தும் விசாரிக்கிறார்கள். கொலை செய்யப்பட்ட ரஞ்சித் பூந்தமல்லியில் ரோந்து சென்ற போலீஸ்காரரை வெட்டிய வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×