search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் படுகொலை"

    • ராம்குமாரை போன்று மார்க்கெட் பகுதியில் மேலும் சிலரும் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
    • வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாடிப்பட்டி:

    மதுரை செல்லூர் தத்தனேரி மேலகைலாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் ராம் குமார் (வயது 25). திருமணமாகாத இவர் காலி மது பாட்டில்கள் சேகரித்தல் மற்றும் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். அது மட்டுமின்றி பரவை காய்கறி மார்க்கெட் பகுதியில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மது விற்பனையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. தினமும் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு செல்லும் அவர் இரவில் வீடு திரும்புவார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற ராம்குமார் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தனது உறவினர்கள் சிலரை அழைத்துக்கொண்டு முத்துச்சாமி மகனை பல்வேறு இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே இன்று அதிகாலை மதுரையை அடுத்த பரவை மார்க்கெட் எதிர்புறம் உள்ள மீனாட்சி நகர் 5-வது குறுக்குத்தெருவில் தலை மற்றும் முகத்தில் சரமாரியான வெட்டுக்காயங்களுடன் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்ததை அப்பகுதியினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் பரவை கிராம நிர்வாக அலுவலரும் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கொலையுண்டவர் செல்லூர் தத்தனேரியை சேர்ந்த ராம்குமார் என்பது தெரியவந்தது.

    ராம்குமாரை போன்று அந்த மார்க்கெட் பகுதியில் மேலும் சிலரும் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ராம்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது பணத்தகராறில் கொலை சம்பவம் நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவத்தில் துப்பு துலக்கும் வகையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வரும் சமயநல்லூர் போலீசார் கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அவருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்பதால் தனது நண்பரின் தாயாராருக்கு அருளா னந்தபாபு துணை யாக இருந்து வந்துள்ளார்.
    • உயிருக்கு பயந்து அவர் தப்பிஓட முயன்ற போதும் ஓட, ஓட விரட்டி வெட்டியதில் அருளானந்த பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்த ஆரோக்கி யசாமி மகன் அருளானந்தபாபு(29). இவர் அதேபகுதியில் முருகே ஸ்வரி என்பவருக்கு சொந்த மான கடலைமிட்டாய் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். முருகேஸ்வரியின் மகன்களான தட்சிணா மூர்த்தி, சக்திவேல் ஆகி யோருக்கு அருளானந்தபாபு நெருங்கிய நண்பராக இருந்து வந்தார்.

    இதில் தட்சிணாமூர்த்தி கடந்த 2016-ம் ஆண்டிலும், சக்திவேல் 2018-ம் ஆண்டிலும் அடுத்தடுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

    இந்த கொலை வழக்குகள் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு வழக்கில் வருகிற 17-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கள் அறிவித்திருந்தனர். இந்த வழக்கில் முருகேஸ்வரி முக்கிய சாட்சியாக இருந்து வந்தார். அவருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்பதால் தனது நண்பரின் தாயாரான முருகேஸ்வரிக்கு அருளா னந்தபாபு துணை யாக இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் திண்டு க்கல்-வத்தலக்குண்டு சாலையில் குடைபாறை ப்பட்டி கன்னிமாநகர் பகுதியில் அருளானந்தபாபு ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்ப ட்டார். உயிருக்கு பயந்து அவர் தப்பிஓட முயன்ற போதும் ஓட, ஓட விரட்டி வெட்டியதில் அருளானந்த பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நகர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து உறவினர்கள் தெரிவிக்கையில், ஏற்கனவே தட்சிணாமூர்த்தி, சக்திவேல் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்தான் அருளானந்தபாபுவையும் வெட்டி கொன்றிருக்க வேண்டும். எனவே கொலை யாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அடுத்தடுத்து நடந்த இந்த கொலை சம்பவங்களால் நகர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    • கிருஷ்ணமூர்த்தி தினசரி இரவு நேரத்தில் வழக்கம்ேபால் வீட்டுமுன்பு தூங்குவார்.
    • தனது வீட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    கடலூர்: 

    கடலூர் முதுநகர் போலீஸ் சரகம் ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 26). கூலி தொழிலாளி. இவர் தினசரி இரவு நேரத்தில் வழக்கம்ேபால் வீட்டுமுன்பு தூங்குவார். அதன்படி நேற்று இரவு வீட்டுக்கு வெளியே கிருஷ்ண மூர்த்தி தூங்கினார். இன்று காலை கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழி யாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராள மானோர் திரண்டனர். இதுபற்றி கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த கிருஷ்ண மூர்த்தியின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. இவரை மர்மநபர்கள் கத்தி யால் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆற்றில் வாலிபர் ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் கிருஷ்ணமூர்த்தி சம்மந்தப் பட்டுள்ளது தெரியவந்தது. எனவே பழிக்குபழியாக கிருஷ்ணமூர்த்தி கொலை செய்யப்பட்டாரா? அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் விரைந்து சென்று கொலை யாளிகளின் ரேகைகளை பதிந்து தீவிரமாக துப்புதுலக்கி வருகிறார்கள். அந்த பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • கொலை செய்யப்பட்ட நவீன்குமாருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், பிரகாஷ் என்ற மகனும், தியா என்ற மகளும் உள்ளனர்.
    • சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் வந்து விசாரணை நடத்தினார்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் நவீன்குமார்(35). இவர் தனியார் கடையில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு தனது நண்பருடன் வீடடைவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இன்று காலையில் கோடாங்கிபட்டி குளத்துக்கரையில் உள்ள ஒரு பாறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகே மதுபாட்டில்கள் கிடந்தன. எனவே குடிபோதையில் உடன் வந்தவர் நவீன்குமாரை கொலை செய்துவிட்டு தப்பிஓடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்து அவரை தேடி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட நவீன்குமாருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், பிரகாஷ்(6) என்ற மகனும், தியா(3) என்ற மகளும் உள்ளனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் வந்து விசாரணை நடத்தினார். இதனைதொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் நவீன்குமாரின் மனைவியிடம் விசாரித்தபோது தனது கணவரிடம் செல்போன் இல்லை என்றும், தன்னிடம் மட்டுமே செல்போன் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவரது செல்போனை வாங்கி யார் யாருக்கு போன் செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா அல்லது கள்ளக்காதல் பிரச்சினையில் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொலை செய்யப்பட்டவர் முத்தனம்பட்டியை சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது.
    • கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வடமதுரை அருகே வெள்ளபொம்மன்பட்டியில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்த நிலையில் ஒரு புதருக்குள் கிடந்தார்.

    இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து ஏ.டி.எஸ்.பி சந்திரன் தலைமையில் டி.எஸ்.பி துர்க்காதேவி, வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    சாலையில் இருந்து 15 மீ தூரத்தில் அவர் இறந்து கிடந்தார். அவர் தலையில் கல்லை தூக்கிபோட்டு கொலை செய்ததற்கான தடயங்கள் இருந்தன. நீல நிற பேண்டும், டீ-சர்ட்டும் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊர்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டவர் முத்தனம்பட்டியை சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மோப்ப நாய் வாலிபர் குமாரின் உடலை முகர்ந்து பார்த்துவிட்டு வெள்ளபொம்மன்பட்டி பிரிவு வரை சென்று நின்றது. இதனையடுத்து போலீசார் வாலிபரின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்றும், அதில் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்பத்தை அழிக்க நினைத்ததால் அண்ணனை தீர்த்து கட்டினேன்
    • வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த நரியனேரி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியின் மகன் யுவராஜ் (வயது 30) 2-வது மனைவி மகன் அஜித் (24 )இவர்களுக்கு இடையே நிலத் தகராறு சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் யுவராஜ் கலந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அஜித் மற்றும் 2 பேர் சேர்ந்து யுவராஜை கத்தியால் குத்தினர். தப்பி ஓடிய யுவராஜை அவர்கள் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

    கந்திலி போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் செவ்வாத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த அஜித், சேட்டு மகன் நரசிம்மன் (30) உறவினர் அன்பழகன் (42) ஆகியோரை கைது செய்தனர். 3 பேரையும் போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

    இதுகுறித்து அஜித் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது;

    எங்கள் குடும்பத்தில் நிலத்தகராறு சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. எங்களுடைய வீட்டை டெட்டனேட்டர் வைத்து குடும்பத்தினரை கொல்ல முயற்சி செய்தனர்.

    மேலும் யுவராஜ் எங்களது குடும்பத்தை ஒட்டுமொத்தமாக கொல்ல திட்டமிட்டது தெரியவந்தது. எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். நேற்று உன்னிடம் திருவிழா நிகழ்ச்சி நடந்த போது யுவராஜிக்கு பின்புறமாக சென்று கத்தியால் குத்தி கொலை செய்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×