என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வேடசந்தூரில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை- கள்ளக்காதல் பிரச்சினையா?
- கொலை செய்யப்பட்ட நவீன்குமாருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், பிரகாஷ் என்ற மகனும், தியா என்ற மகளும் உள்ளனர்.
- சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் வந்து விசாரணை நடத்தினார்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் நவீன்குமார்(35). இவர் தனியார் கடையில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு தனது நண்பருடன் வீடடைவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இன்று காலையில் கோடாங்கிபட்டி குளத்துக்கரையில் உள்ள ஒரு பாறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகே மதுபாட்டில்கள் கிடந்தன. எனவே குடிபோதையில் உடன் வந்தவர் நவீன்குமாரை கொலை செய்துவிட்டு தப்பிஓடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்து அவரை தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட நவீன்குமாருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், பிரகாஷ்(6) என்ற மகனும், தியா(3) என்ற மகளும் உள்ளனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் வந்து விசாரணை நடத்தினார். இதனைதொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து போலீசார் நவீன்குமாரின் மனைவியிடம் விசாரித்தபோது தனது கணவரிடம் செல்போன் இல்லை என்றும், தன்னிடம் மட்டுமே செல்போன் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவரது செல்போனை வாங்கி யார் யாருக்கு போன் செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா அல்லது கள்ளக்காதல் பிரச்சினையில் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.