search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினி, கமல்
    X
    ரஜினி, கமல்

    கருணாநிதி சிலை திறப்பு விழா - ரஜினி, கமல் பங்கேற்க திமுக அழைப்பு

    சென்னை கோடம்பாக்கத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு நடிகர் ரஜினி மற்றும் கமலுக்கு தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி மறைந்தார். 

    முதல் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலை திறப்பு விழா கோடம்பாக்கத்த்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கவுள்ளார்.

    முன்னாள் முதல்வர் கருணாநிதி

    இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என நடிகர் ரஜினி மற்றும் கமலுக்கு தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது  

    ஏற்கனவே, அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை கடந்த ஆண்டு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×