search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் - டீசல்
    X
    பெட்ரோல் - டீசல்

    பட்ஜெட்டுக்கு பிறகு விலை உயர்வு- சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 2.57 ரூபாய் அதிகரிப்பு

    பட்ஜெட்டுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசுகள் உயர்ந்துள்ளன.
    சென்னை:

    பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், எண்ணெய் பொருட்களுக்கான கலால் வரியை உயர்த்தி அறிவிப்பு வெளியானது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்வடைந்து உள்ளது. சென்னையில் இன்று அதிகபட்சமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.75.76க்கும், டீசல் விலை ரூ.2.52 உயர்ந்து ரூ.70.48க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.2.45 உயர்ந்து, ரூ.72.96-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.2.36 உயர்ந்து, ரூ.66.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மும்பையில் பெட்ரோல் விலை ரூ.78.57, டீசல் விலை ரூ.69.90, கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.75.15, டீசல் விலை ரூ.68.59 என்ற நிலையில் உள்ளது.

    பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்பட்டு புதிய சாலை மேம்பாட்டு வரி விதிக்கப்பட்ட நிலையில் இந்த விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×