search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prices hiked"

    20 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகளும் டீசல் விலை 21 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. #PetrolDieselPrice
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றம் செய்யும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை நடைமுறையில் இருக்கும்.



    கடைசியாக ஏப்ரல் 24-ம் தேதி விலை மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின்னர் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றியமைக்கவில்லை என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், இந்த கூற்றை எண்ணெய் நிறுவனங்கள் மறுத்தன.

    இந்த நிலையில், 20 நாட்களுக்கு பிறகு இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகளும் டீசல் 21 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதன்மூலம் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.63-ல் இருந்து ரூ.77.80 ஆக உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் ஒரு லிட்டர் 65 ரூபாய் 93 காசுகளாக இருந்த நிலையில், இன்று 21 காசுகள் உயர்த்தப்பட்டு 66 ரூபாய் 14 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.61-க்கும் டீசல் ரூ.69.79-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் ரூ.82.65, டீசல் ரூ.70.43, கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.77.50, டீசல் ரூ. 68.68 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. #PetrolDieselPrice
    ×