search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல்- தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
    X

    பாராளுமன்ற தேர்தல்- தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்ட நிலையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். #parliamentelection #dmk #mkstalin

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளன.

    ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்து பேசுவதற்கு குழுவினை அமைத்துள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குழு ஒன்றை அமைத்து உள்ளார்.

    அந்த குழுவில் இடம் பெற்றுள்ள நிர்வாகிகளுடன் அவர் நேற்று இரவு ஆலோ சனை நடத்தினார்.

    சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன், துணை செயலாளர் ஐ.பெரியசாமி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுடன் எப்போது பேச்சு வார்த்தை தொடங்குவது, ஒவ்வொருவருக்கும் தொகுதி பங்கீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தி.மு.க. கூட்டணியில் 11 கட்சிகள் இடம் பெற்று இருந்தாலும் 8 கட்சிகளுக்கு மட்டுமே ‘சீட்’ கொடுக்கப்படுகிறது.

    கூட்டணி கட்சிகளை அரவணைத்து தொகுதிகளை முறையாக பங்கீடு செய்வது பற்றியும் இந்த கூட்டணி குழுவினர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. #parliamentelection #dmk #mkstalin

    Next Story
    ×