search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
    X

    தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 4, 5 மற்றும் 6-ந்தேதிகளில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #TN
    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.



    4, 5 மற்றும் 6-ந்தேதி ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யலாம். நாளை முதல் அநேக இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rain #TN
    Next Story
    ×