search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா ஆட்சியில் பெண்கள் உரிமை மறுக்கப்படுகிறது - குஷ்பு குற்றச்சாட்டு
    X

    பா.ஜனதா ஆட்சியில் பெண்கள் உரிமை மறுக்கப்படுகிறது - குஷ்பு குற்றச்சாட்டு

    பா.ஜனதா ஆட்சியில் பெண்கள் உரிமை மறுக்கப்படுகிறது என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். #Congress #Kushboo

    சென்னை:

    சென்னை பாரிமுனையில் ஏ.ஐ.டி.யு.சி மகளிர் சங்க மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்கள் புகார் தெரிவிக்க காத்திருக்க கூடாது. தயக்கம் இல்லாமல் உடனடியாக புகார் செய்ய முன்வர வேண்டும்.

    பாசிச பா.ஜனதா ஆட்சியின் தவறான கொள்கைகளால் பெண்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பணிபுரியும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

    மோடி ஆட்சியில் பெண்கள் உரிமை மறுக்கப்படுகிறது. மத்தியில் நடப்பது பிரதமர் மோடியின் பணக்கார நண்பர்களுக்கான ஆட்சி. பொதுமக்களுக்கான ஆட்சி இல்லை.


    சாதாரண விவசாயி வங்கியில் வாங்கிய கடனை கட்ட தவறினால் அவரது டிராக்டரை ஜப்தி செய்கிறார்கள். அவரையும் பிடித்து வழக்கு போடுகிறார்கள். ஆனால் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடியை வங்கிகளில் கடன் பெற்றவர்கள் பாதுகாப்பாக வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டிய ஆட்சி. வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தங்கள் வெறுப்பை ஓட்டாக்கி இந்த ஆட்சியை விரட்ட வேண்டும்.

    இங்கு ஏராளமான பெண்கள் வந்திருக்கிறார்கள். இந்த ஆட்சியின் பாதிப்பை நேரடியாக அனுபவிப்பவர்கள் நீங்கள். பெண்கள் நினைத்தால் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

    ராகுல் தலைமையில் மக்களுக்கான ஆட்சி மத்தியில் அமையவும், பா.ஜனதாவின் அடிமை ஆட்சியாக இருக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டவும் ஒன்றுபட்டு உழைப்போம்.

    இவ்வாறு குஷ்பு பேசினார். #Congress #Kushboo

    Next Story
    ×