search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொத்து வரி உயர்வை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்- இல.கணேசன் எம்.பி.
    X

    சொத்து வரி உயர்வை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்- இல.கணேசன் எம்.பி.

    சொத்து வரி உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் இல.கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். #BJP #LaGanesan #PropertyTax
    மதுரை:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் இல.கணேசன் எம்.பி. மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறவினருக்கு ராணுவ விமானம் வழங்கியது குறித்து நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது.

    தமிழகத்தில் சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவரை காப்பாற்றும் நோக்கத்தில் தனது காரில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும் மந்திரியின் செயல்பாடு கூட தவறு என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது.

    ராமேசுவரம் மீனவர்கள் விவகாரத்தில் எல்லைத் தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.


    தமிழக கவர்னர் ஆய்வுப்பணி நடத்துவதை தவறு என மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். தி.மு.க.வினர் இதற்காக போராட்டங்களை நடத்துகின்றனர். இந்த வி‌ஷயம் தேவையற்ற முறையில் பெரிதுபடுத்தப்படுகிறது.

    கவர்னர் ஆய்வை எதிர்த்து மு.க.ஸ்டாலின், அவரிடம் ஏன் கோரிக்கை மனுவை கொடுக்கிறார்? தமிழக அரசை கலைக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை.

    மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் பொதுமக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.

    தமிழக பா.ஜனதாவை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை ஆதரிக்கிறோம். என்னுடைய பார்வையில் அரசு நன்றாகத்தான் செயல்படுகிறது. ஒருசில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.

    லஞ்சம் கொடுப்பவருக்கும் தண்டனை என்ற சட்டத்தை பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது பெருமையான வி‌ஷயமாகும்.

    சொத்து வரி உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுவதால் தேர்தல் கூட்டணி வருமா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan #PropertyTax
    Next Story
    ×