search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி நாளை வேலூர் வருகை- 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
    X

    ஜனாதிபதி நாளை வேலூர் வருகை- 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை (வெள்ளிக்கிழமை) வேலூர் வருகிறார். இதையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். #RamnathKovind #Vellore
    வேலூர்:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை வேலூர் வருகிறார். வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை மற்றும் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.

    இதற்காக டெல்லியிலிருந்து காலை 10.45 மணிக்கு சென்னை வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு 11.45 மணியளவில் வேலூர் வருகிறார். அவரது ஹெலிகாப்டர் ஸ்ரீபுரம் பொற்கோவில் உள்ள ஹெலிபேடில் தரையிறங்குகிறது.

    மதியம் 12.30 மணியளவில் சி.எம்.சி. மருத்துவமனையில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.

    பின்னர் சுற்றுலா மாளிகையில் மதிய உணவு சாப்பிடுகிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

    பின்னர் மாலை 3 மணியளவில் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் அங்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் இருதய சிகிச்சை பிரிவை திறந்து வைக்கிறார்.

    அதனை தொடர்ந்து தங்க கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மாலை 5 மணியளவில் ஹெலிகாப்டரில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் ராஜ்பவன் செல்கிறார். இரவு அங்கு தங்குகிறார்.

    5-ந்தேதி காலை 10.30 மணிக்கு சேப்பாக்கம் சென்னை பல்கலைக்கழக விழாவில் பங்கேற்கிறார். 11.55 மணிக்கு வேளச்சேரியில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

    அங்கு புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார். மதியம் 1.15 மணிக்கு அங்கிருந்து சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லிக்கு செல்கிறார்.

    ஜனாதிபதியின் வருகையையொட்டி வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதரன் மேற்பார்வையில் 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பிற மாவட்டங்களில் இருந்தும் வேலூருக்கு போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    ஜனாதிபதி வருகையையொட்டி வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. #RamnathKovind #Vellore
    Next Story
    ×