என் மலர்

  செய்திகள்

  திருப்பத்தூரில் மதுபாட்டிலால் தாக்கி தொழிலாளி கொலை
  X

  திருப்பத்தூரில் மதுபாட்டிலால் தாக்கி தொழிலாளி கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பத்தூர் அருகே மது பாட்டிலால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருப்பத்தூர்:

  வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பூரிகமாணி மிட்டா பகுதியை சேர்ந்தவர் பெரியகண்ணு மகன் பன்னீர் செல்வம் (வயது 58). கூலித் தொழிலாளி. இவர் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் வீட்டின் அருகில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

  தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து பன்னீர்செல்வத்தை சரமாரியாக அடித்து, உடைத்தனர். மேலும் மது பாட்டில்களை அவரது தலையில் உடைத்தும் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் பீறிட்டு கொட்டியது. பன்னீர் செல்வம் சுருண்டு விழுந்தார்.

  அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது பெரியகண்ணுவை தாக்கிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். நள்ளிரவு நேரம் என்பதால் தப்பிய மர்ம நபர்களை அடையாளம் காண முடியவில்லை. பலத்த காயமடைந்த பன்னீர் செல்வம் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார்.

  இதுப்பற்றி, அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் வழக்குப்பதிந்து பன்னீர்செல்வத்தை அடித்துக் கொன்ற 2 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

  Next Story
  ×