search icon
என் மலர்tooltip icon

    மியான்மர்

    • மியான்மரில் 90 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர் சேதமோ இல்லை என தகவல்.

    மியான்மரில் நேற்று இரவு 10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரவித்துள்ளது.

    இது மியான்மரில் இருந்து 94.11 கி.மீ தொலைவில், 90 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர் சேதமோ இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    • நேற்று இரவு 11.56 மணிக்கு யான்கூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • 3-வது முறையாக காலை 5.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நைபிடா:

    மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று இரவு 11.56 மணிக்கு யான்கூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது.

    அதன்பின் இன்று அதிகாலை 2.52 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் உண்டானது. இது 4.2 ரிக்டர் அளவில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    3-வது முறையாக காலை 5.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.5 ரிக்டர் அளவாக பதிவானது. 48 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    மியான்மரின் யான்கூனில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். இரவு முழுவதும் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையை கடந்தது.
    • மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மியான்மரில் பலியானோர் எண்ணிக்கை 100 -ஐ தாண்டியது.

    நெய்பியிடாவ்:

    வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது.

    இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளை பந்தாடியது. புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம், மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    இதேபோல், மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன. அங்கும் புயல், மழை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    இந்நிலையில், மியான்மரில் மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. இதில் ராணுவ வீரர்கள் 4 பேர், உள்ளூர்காரர்கள் 24 பேர், வங்காள தேசத்தைச் சேர்ந்த 117 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையை கடந்தது.
    • மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மியான்மரில் பலியானோர் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்தது.

    நெய்பியிடாவ்:

    வங்க கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது.

    இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளை பந்தாடியது. புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம், மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    இதேபோல், மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன. அங்கும் புயல், மழை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    இந்நிலையில், மியான்மரில் மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது அங்குள்ள ராக்கென் மாகாணத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
    • புயலின் தாக்கம் தணிந்ததையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன.

    வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று முன்தினம் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளைப் பந்தாடியது. குறிப்பாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. புயலின் தாக்கம் தணிந்ததையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன.

    மோக்கா புயல் மற்றும் வெள்ளப்பெருக்கினால் 60 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு ஆதரவு ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது. ரக்கினே மாநிலத்தில் மட்டும் 41 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நூற்றுக்கணக்கான மக்களை காணவில்லை. அவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. 

    • பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் அப்பாவி மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
    • அரசியல் கைதிகளுக்கு ராணுவ கவுன்சில் தலைவர் மன்னிப்பு வழங்கி உள்ளார்.

    பாங்காக்:

    மியான்மரில் கடந்த 2021ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பபட்ட ஆங் சாங் சூகியின் அரசாங்கத்தை கவிழ்த்து, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அன்று முதல் போராட்டங்கள், வன்முறை, அடக்குமுறை என அமைதியற்ற சூழல் நிலவுகிறது. பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் அப்பாவி மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், புத்த புனித நாளை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் 2153 அரசியல் கைதிகளுக்கு ராணுவ கவுன்சில் தலைவர் மன்னிப்பு வழங்கி உள்ளார். இதையடுத்து அரசியல் கைதிகளை சிறைகளில் இருந்து விடுவிக்கும் பணி இன்று தொடங்கியது. மன்னிப்பு வழங்கப்பட்டவர்களின் முழு விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால், 33 ஆண்டுகள் சிறைத்தண்டன பெற்ற ஆங் சான் சூகியின் பெயர் அந்த பட்டியலில் இருக்காது என தெரிகிறது.

    விடுவிக்கப்பட்ட கைதிகள் மீண்டும் சட்டத்தை மீறினால், அவர்களுக்கு புதிய குற்றத்திற்காக வழங்கப்படும் தண்டனையுடன், ஏற்கனவே விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    • இந்த தாக்குதல் சர்வதேச அளவில் கடும் கண்டனத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.
    • குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

    மியான்மரின் கிழக்குப் பகுதியில் புத்த புத்தாண்டை மக்கள் நேற்று கொண்டாடினர். அப்போது, பொது மக்கள் கூட்டம் கூடியிருந்த பகோடா என்ற பகுதியில் நேற்று திடீரென தொடர் கார் குண்டுகள் வெடித்தது. இதில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    2021ம் ஆண்டில் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பிறகு, நாடு கொந்தளிப்பில் உள்ளது. ராணுவம் மற்றும் ராணுவ எதிர்ப்பு போராளிகள் என இருதரப்பும் அடிக்கடி மோதி வருகின்றனர். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

    மத்திய மியான்மரில் ராணுவ விமானத் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்ட சில நாட்களில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மேலும், இந்த குண்டு வெடிப்பில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

    இந்த தாக்குதல் சர்வதேச அளவில் கடும் கண்டனத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

    • ஆங் சான்சூகி உள்பட பல தலைவர்களை ராணுவம் கைது செய்தது.
    • ராணுவ ஆட்சிக்கு எதிரான அமைப்பு, தனது உள்ளூர் அலுவலகத்தை திறந்தபோது தாக்குதல்

    யாங்கூன்:

    மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அந்நாட்டு தலைவர் ஆங் சான்சூகி உள்பட பல தலைவர்களை ராணுவம் கைது செய்தது.

    ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தையும் ஒடுக்கினர். இருப்பினும் ராணுவத்துக்கு எதிராக பல அமைப்புகள் போராடி வருகின்றன. அவர்களை குறிவைத்து மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் சாஜைங் பகுதியில் மியான்மர் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

    ராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்கள் ஒன்றுகூடி உள்ளனர் என்று கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாசிகி கிராமம் அருகேராணுவ ஆட்சிக்கு எதிரான அமைப்பு, தனது உள்ளூர் அலுவலகத்தை திறந்தது.

    இந்நிகழ்ச்சியில் 150 பேர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மீது போர் விமானம் குண்டு வீசியது. பின்னர் அரை மணி நேரம் கழித்து ஹெலிகாப்டர் மூலம் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலுக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் 2021-ம் ஆண்டு ராணுவ ஆட்சி ஏற்பட்ட பிறகு சுமார் 3 ஆயிரம் பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.
    • ராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்கள் பலர் கையில் ஆயுதம் ஏந்தினர்.

    நோபிடாவ் :

    மியான்மரில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும், ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக அந்த நாட்டு ராணுவம் குற்றம் சாட்டி வந்தது.

    இந்த சூழலில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி புதிய அரசு பதவியேற்க இருந்த நிலையில், ராணுவம் சதி புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

    அதை தொடர்ந்து தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது.

    இதனிடையே ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. அதை தொடர்ந்து ராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்கள் பலர் கையில் ஆயுதம் ஏந்தினர். அவர்களுக்கும், ராணுவத்துக்கும் மோதல் தொடர்ந்து வருகிறது.

    அது ஒருபுறமிருக்க ராணுவ அரசை எதிர்க்கும் அரசியல் எதிரிகளை ஒடுக்க அரசு பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதனிடையே அதிகாரத்தை கைப்பற்றி 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் வருகிற ஜூலை மாதம் பொதுத்தேர்தலை நடத்த ராணுவ ஆட்சி குழு முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி உள்பட 40 அரசியல் கட்சிகள் கலைக்கப்படுவதாக ராணுவ அரசால் நியமிக்கப்பட்ட புதிய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

    அந்த கட்சிகள் தேர்தலுக்கு முன்பாக தங்களை பதிவு செய்து கொள்ள தவறியதால் கலைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இதன் மூலம் ஜூலையில் நடைபெறும் தேர்தலில் ராணுவ ஆதரவு பெற்ற தொழிற்சங்க ஒற்றுமை மற்றும் வளர்ச்சி கட்சி எளிதில் வெற்றியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே சமயம் ராணுவ அரசால் நடத்தப்படும் தேர்தல் ஏமாற்று வேலை என்றும், எனவே அதில் தேர்தலில் போட்டியிடபோவதில்லை எனவும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மியான்மரில் உள்ள யங்கூன்-மண்டலாய் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த மினி லாரி ஒன்று சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது.

    இதில் மினி லாரியில் இருந்த 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 11 பெண்கள் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மியான்மர் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் காயமடைந்தனர்.

    யாங்கூன்:

    மியான்மர் நாட்டில் யாங்கூன்-மண்டலே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் கவிழ்ந்து 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விசாரணையில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:30 மணியளவில் யாங்கூன்-மண்டலே நெடுஞ்சாலையில் மைல்போஸ்ட் 167க்கு அருகே பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    காயம் அடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் உள்ளவர்களும் அடங்குவர் என்றும், காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் ஆபத்தான நிலையில் உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங்சான் சூகி ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
    • ஆங்சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல வழக்குகள் தொடரப்பட்டன.

    மியான்மர்:

    மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டம் நடத்தியவர் ஆங்சான் சூகி (வயது77). இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. ஆனால் இந்த தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங்சான் சூகி ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

    இதையடுத்து ஆங்சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்களுக்கு அடுத்தடுத்து தண்டனை வழங்கப்பட்டன. இதில் இதுவரை அவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    மேலும் 5 குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பு இன்று மியான்மர் ராணுவ கோர்ட்டில் வழங்கப்பட்டது. அதன்படி ஆங்சான் சூகிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலம் அவருக்கு மொத்தம் 31 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×