search icon
என் மலர்tooltip icon

    ஐ.பி.எல். திருவிழா 2024

    RCB குறித்த விமர்சனம் -  வைரலாகும் கவுதம் கம்பீரின் பழைய வீடியோ
    X

    RCB குறித்த விமர்சனம் - வைரலாகும் கவுதம் கம்பீரின் பழைய வீடியோ

    • சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
    • டோனி கை கொடுக்க வந்தும் அவரைக் கண்டுகொள்ளாமல் ஆர்சிபியினர் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததே டோனி திரும்பிச் சென்றதற்கு காரணம் என ஒலிக்கும் குரல்கள்

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டம் நேற்று முன் தினம் ( மே 18) பெங்களூருவில் நடந்தது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த ஆட்டத்தில் நடந்தவை குறித்த பதிவுகளே சமூக வலைத்தளப் பக்கங்களை ஆக்கிரமித்துள்ளன.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ஆர்சிபி அணி நிர்ணயித்த 218 ரன்களை துரத்திய சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது. ஆட்டத்தின் இறுதியில் டோனி வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறியதே தற்போது நடந்துவரும் விவாதங்களுக்குக் காரணம்.

    ஆர்சிபி வீரர்கள் வெற்றிக்களிப்பில் இருந்ததால் கை கொடுக்க சென்ற டோனி சட்டென திரும்பி டிரஸிங் அறைக்குச் சென்ற வீடியோ தீயாக பரவி வரும் நிலையில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். டோனி கை கொடுக்க வந்தும் அவரைக் கண்டுகொள்ளாமல் ஆர்சிபி அணியினர் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததே டோனி திரும்பிச் சென்றதற்கு காரணம் என்று அவருக்கு ஆதரவான குரல்கள் எழத் தொடங்கியுள்ளன

    இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் அணிகள் குறித்தும் தனது விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைக்கக்கூடிய கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான கவுதம் கம்பீர், சில காலத்துக்கு முன் பேசிய பழைய வீடியோ ஒன்றில், சிஎஸ் கே அணி 5 முறை ஐபிஎல் வென்றிருந்தாலும் தாங்கள் பெரியவர்கள் என்ற ஆட்டிட்யூடான மனநிலை அவர்களிடம் இருக்காது.

    ஆனால் விராட் கோலியும் ஆர்சிபி அணியும் ஒரு லீக் போட்டி வென்றாலும், பிளே ஆப்பிற்கு தகுதிபெற்றாலும் கூட தாங்கள் கோப்பையை வென்றதுபோல் நடந்துகொவர்கள் என்று பேசியிருந்தார். அதுவே இந்த மேட்சிலும் நடந்துள்ளதாக இந்த வீடியோவை நெட்டிஸின்கள் அதிகமாக பகிர்ந்து வருவதால் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.

    Next Story
    ×