என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • கஸ்பா பகுதியில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார்.
    • மாணவியை கல்லூரிக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கஸ்பா பகுதியில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். அந்த மாணவியை 3 மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் முன்னாள் மாணவர் ஆவார். மாணவியை கல்லூரிக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கொல்கத்தாவில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

    • மாணவியின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தியதில், கல்லூரி மாணவி திருமண வயதை எட்டியவர் என்பது தெரியவந்தது.

    நாகரிகம் வளர்ந்த இந்த காலத்திலும் இப்படி ஒரு கொடுமை நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    மேற்குவங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடைய தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    மாணவிக்கும், பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்ததால், அவர்களது காதலுக்கு மாணவியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்த்து வந்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி, யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.

    இதுபற்றி மாணவியின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், கல்லூரி மாணவி திருமண வயதை எட்டியவர் என்பது தெரியவந்தது.

    எனவே அவரது திருமணத்தில் தலையிட முடியாது என்று கூறி, மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாணவியின் குடும்பத்தினர் கடும் ஆத்திரம் அடைந்தனர். வேறு மதத்தவரை மகள் திருமணம் செய்தது தங்களுக்கு அவமானம் என்று கருதினர்.

    ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மாணவியின் பெற்றோர், தங்கள் மகளை இறந்து விட்டதாக கூறி அவருக்கு 'தர்ப்பணம்' செய்தனர். இதற்காக வீட்டில் இருந்த மாணவியின் படத்துக்கு மாலை அணிவித்து, இறந்தவர்களுக்கு செய்வது போல் பூஜைகளை செய்தனர்.

    இதுபற்றி மாணவியின் தாய் கூறுகையில், எங்கள் மகளின் செயல் எங்களுக்கு மிகுந்த அவமானமாகிவிட்டது. இப்போது அவள் இல்லை என்று நினைத்து அவளது உடைகள், பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் எரித்துவிட்டோம் என்றார்.

    • மாநில சட்டம் ஒழுங்கு, சோனாகாச்சி போல இருக்கிறது என கூறியுள்ளார்.
    • சுகந்தா மஜும்தார் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவரும், மத்திய மந்திரியுமான சுகந்தா மஜும்தார், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    அதாவது, மாநில சட்டம் ஒழுங்கு, சோனாகாச்சி போல இருப்பதாக கூறியுள்ளார். சோனாகாச்சி பகுதி, பாலியல் தொழிலுக்கு புகழ்பெற்ற இடமாகும். எனவே அவரது இந்தக் கருத்து மாநில அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து, சோனாகாச்சியை சேர்ந்த பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் அங்குள்ள போலீசில் சுகந்தா மஜும்தாருக்கு எதிராக புகார் செய்துள்ளார். அதாவது, பாலியல் தொழிலாளர்களை இழிவுபடுத்தி இருப்பதாக அந்தப் புகாரில் அவர் கூறியிருந்தார்.

    இதுதொடர்பாக சுகந்தா மஜும்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக, மஜும்தாரின் கருத்துக்கு மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அவர் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தினர்.

    • கொல்கத்தாவில் சக ஓட்டுநர்கள் உடனான வாக்குவாதத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
    • ராகுல் கழுத்தில் கொல்கத்தாவை சேர்ந்த நபர் கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

    கொல்கத்தாவில் தமிழகத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் படியூர் ரோஸ்கார்டன் பகுதியை சேர்ந்த ராகுல் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    கொல்கத்தாவில் சக ஓட்டுநர்கள் உடனான வாக்குவாதத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

    ராகுல் கழுத்தில் கொல்கத்தாவை சேர்ந்த நபர் கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

    இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வௌியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாற்றுத்திறனாளி போல ரெயிலில் இருந்து கீழே இறங்கி வரும் நபர் பின்பு சாதாரணமாக நடந்து செல்கிறார்.
    • இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

    இலவச ரெயில் பயணத்துக்காக, மாற்றுத்திறனாளி போல நடித்த ஒரு நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    இணையத்தில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில், ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி போல ரெயிலில் இருந்து கீழே இறங்கி வரும் நபர் ஒருவர் பின்பு சாதாரணமாக நடந்து செல்கிறார்.

    ரெயில்வே ஊழியர்களை முட்டாளாகிய இந்த நபருக்கு ஆஸ்கர் விருதே தரலாம் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். 

    • ஏர் இந்தியா விமானத்தின் ஒரு எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது
    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மும்பைக்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

    சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் ஒரு எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது

    கொல்கத்தா விமான நிலையத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு தரையிறங்கிய விமானம் எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பைக்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

    பின்னர் எஞ்சினின் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படத்தால் அதிகாலை 5 மணியளவில் பயணிகள் கொல்கத்தாவில் இறக்கிவிடப்பட்டனர்.

    முன்னதாக அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2026 ஏப்ரலுக்கு பின் முதல் மந்திரி பதவியில் மம்தா பானர்ஜி இருக்க மாட்டார்.
    • வாக்கு வங்கிக்காக அனைத்து தாழ்ந்த நிலைப்பாடுகளையும் மம்தா பானர்ஜி தாண்டிவிட்டார்.

    கொல்கத்தா:

    பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா இருநாள் பயணமாக மேற்கு வங்கம் வந்துள்ளார்.

    கொல்கத்தாவில் நேற்று நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:

    அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், ஆட்சி அதிகாரத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரசை விரட்டியடிக்க வேண்டும்.

    முதல் மந்திரி மம்தா பானர்ஜியை வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

    முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்தவே நமது ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மம்தா பானர்ஜி எதிர்த்தார். இதன்மூலம் நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரியரை அவர் அவமதித்துள்ளார்.

    வரும் சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜிக்கு தக்க பாடம் புகட்ட மேற்கு வங்க தாய்மார்கள் மற்றும் சகோதரியர் தயாராகி விட்டனர். 2026 ஏப்ரலுக்கு பின் முதல் மந்திரி பதவியில் மம்தா பானர்ஜி இருக்க மாட்டார். தன் ஓட்டு வங்கிக்காக, அனைத்து தாழ்ந்த நிலைப்பாடுகளையும் மம்தா பானர்ஜி தாண்டி விட்டார் என தெரிவித்தார்.

    மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உன்னாவ் முதல் ஹத்ராஸ் வரை. பாஜக-வின் கடந்த கால சாதனைகள் மவுனத்திலும், அவமானத்திலும் மூழ்கியுள்ளன.
    • வினாத்தாள் கசிவு, நீட் முறைகேடு, 45 சதவிதம் வேலைவாய்ப்பின்மை. இவைகள் மாணவர்களுக்கு பாஜக-வின் தேசிய பரிசு.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் சென்றிருந்தார். அலிபூர்துவாரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது "இன்று, மேற்கு வங்கம் தொடர்ச்சியான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மக்கள் கொடூரமான அரசை (Nirmam sarkar) விரும்பவில்லை. அவர்கள் மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகிறார்கள். அதனால்தான் முழு வங்காளமும் இனி கொடுமையையும் ஊழலையும் விரும்பவில்லை என்று கூறுகிறது" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் ஐந்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி ஐந்து சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார். அதன் உண்மை குறித்து பேசுவோம்.

    பெண்களுடைய பாதுகாப்பு?

    உன்னாவ் முதல் ஹத்ராஸ் வரை. பாஜக-வின் கடந்த கால சாதனைகள் மவுனத்திலும், அவமானத்திலும் மூழ்கியுள்ளன.

    இளைஞர்கள் நம்பிக்கையின்மை?

    வினாத்தாள் கசிவு, நீட் முறைகேடு, 45 சதவிதம் வேலைவாய்ப்பின்மை. இவைகள் மாணவர்களுக்கு பாஜக-வின் தேசிய பரிசு.

    ஊழல்?

    உங்கயுடைய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜாமினில் உள்ளனர். நீதி மெல்ல மெல்லி செத்துக் கொண்டிருக்கிறது.

    அரசியல் கால்ப்புணர்ச்சியால் உங்களுடைய அரசாங்கம் மேற்கு வங்க அரசுக்கு 100 நாள் வேலைக்கான ஊதியம், அவாஸ் யோஜனா நிதிகளை தர மறுக்கிறது.

    கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக சட்டம் ஒழுங்கு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குழப்பத்தை முதலில் சரி செய்யுங்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், மோடி தலைமையிலான மத்திய அரசின் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை பிரதமர் மோடி திசை திருப்புகிறார் எனக் குற்றம்சாட்டியுள்ளது.

    • பயங்கரவாதத்திற்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கும்போது, ​மோடி எங்கள் அரசை விமர்சிக்கிறார்.
    • பிரித்தாளும் கொள்கையை பிரதமர் கொள்கையாக கொண்டுள்ளார்.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் சென்றிருந்தார். இரண்டு இடங்களில் 1,010 கோடி ரூபாய் அளவிலான கியாஸ் வினியோய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அலிபூர்துவாரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பேசினார். மேலும் மம்தா தலைமையில் நடைபெறும் மேற்க வங்க அரசை கடுமையாக விமர்சித்தார்.

    பிரதமர் மோடி பேரணியில் பேசும்போது கூறியதாவது:-

    இன்று, மேற்கு வங்கம் தொடர்ச்சியான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மக்கள் கொடூரமான அரசை (Nirmam sarkar) விரும்பவில்லை. அவர்கள் மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகிறார்கள். அதனால்தான் முழு வங்காளமும் இனி கொடுமையையும் ஊழலையும் விரும்பவில்லை என்று கூறுகிறது.

    பயங்கரவாதிகள் நமது சகோதரிகளின் குங்குமத்தை (Sindoor) துடைக்க துணிந்தார்கள், ஆனால் நமது படைகள் அவர்களுக்கு குங்குமத்தின் வலிமையை உணர்த்தின. பாகிஸ்தான் ஒருபோதும் நினைத்துப் பார்க்காத எல்லை தாண்டிய பயங்கரவாத உள்கட்டமைப்பை நாங்கள் அழித்தோம்.

    பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானால் உலகிற்கு வழங்குவதற்கு சாதகமானது எதுவும் இல்லை. பயங்கரவாதம், படுகொலைகள் பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப்பெரிய நிபுணத்துவம்; போர் நடக்கும் போதெல்லாம் அவர்கள் தோல்வியை எதிர்கொள்கிறார்கள்.

    கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அட்டூழியங்களையும், அங்கு அது கட்டவிழ்த்து விட்ட பயங்கரவாதத்தையும் யாராலும் மறக்க முடியாது. இந்த வங்காள மண்ணிலிருந்து, 140 கோடி இந்தியர்களின் சார்பாக, ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்று நான் அறிவிக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில் கொடுத்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்க பல்வேறு நாடுகளுக்கு அனைத்துக் கட்சிக் குழுக்கள் சென்றுள்ளபோது, பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்தை விமர்சித்திருப்பது வருத்தம் அளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கும்போது, மோடி எங்கள் அரசை விமர்சிக்கிறார்.

    பிரித்தாளும் கொள்கையை பிரதமர் கொள்கையாக கொண்டுள்ளார். அரசியல் கவனத்தை ஈர்ப்பதற்காக மத்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிட்டுள்ளது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • தேஜஸ்வி யாதவ்க்கு ராஜ்ஸ்ரீ என்பவருடன் கடந்த 2021 இல் திருமணம் நடந்தது.
    • தந்தை மற்றும் தாயை போன்றே ராஜ்ஸ்ரீயின் குழந்தை மிகவும் அழகாக உள்ளது என்றார்.

    பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தளம் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆண் குழந்தைக்குத் தந்தை ஆனார்.

    ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடைய இளைய மகனான தேஜஸ்வி யாதவ்க்கு ராஜ்ஸ்ரீ என்பவருடன் கடந்த 2021 இல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு காத்யாயினி என்ற பெண் குழந்தை உள்ளது.

    இதனிடையே, ராஜ்ஸ்ரீ 2வது முறை கர்ப்பமடைந்த நிலையில் அவர் மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். அதன்படி ராஜ்ஸ்ரீக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில், தேஜஸ்வி - ராஜ்ஸ்ரீ தம்பதிக்கு பிறந்த குழந்தையை பார்க்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு வந்தார்.

    குழந்தையை பார்த்தப்பின் தேஜஸ்வி - ராஜ்ஸ்ரீ தம்பதியை சந்தித்து மம்தா வாழ்த்து கூறினார். ராஜ்ஸ்ரீ மற்றும் தேஜஸ்வியை சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தந்தை மற்றும் தாயை போன்றே ராஜ்ஸ்ரீயின் குழந்தை மிகவும் அழகாக உள்ளது' என்றார்.

    • சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த சிறுவனின் தாயாரும் சிறுவனை திட்டி, அடித்தார்.
    • அம்மா, நான் திருடன் இல்லை. நான் எதையும் திருடவில்லை. நான் சென்றபோது மாமா (கடைக்காரர்) அங்கு இல்லை.

    மேற்கு வங்கத்தில், சிப்ஸ் பாக்கெட்டை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு தோப்புக்கரணம் போட வைக்கப்பட்ட சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மேற்கு வங்கத்தின் மேற்கு மெடினிபூர் மாவட்டத்தில் பன்சுரா பகுதியில் உள்ள கோசாய் பியர் பஜாரில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இந்த சம்பவம் நடந்தது.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, ஏழாம் வகுப்பு மாணவரான கிருஷ்நேந்து தாஸ், சிப்ஸ் பாக்கெட் வாங்க உள்ளூர் கடைக்குச் சென்றான். கடை உரிமையாளர் சுபாங்கர் தீட்சித் அந்த நேரத்தில் அங்கு இல்லை.

    இறந்தவரின் தாய் கண்ணீருடன் போலீசாரிடம் கூறுகையில், "மாமா, நீங்கள் சிப்ஸ் எடுத்து தருகிறீர்களா?" என்று கிருஷ்ணேந்து கடைக்காரரை பலமுறை கூப்பிட்டதாக கூறினார். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை, அதனால் சிறுவன் சிப்ஸ் பாக்கெட்டுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

    சிறிது நேரத்தில் கடைக்குத் திரும்பிய உரிமையாளர் தீட்சித், சிறுவனைத் துரத்திச் சென்று பிடித்தார். அவன் எல்லோர் முன்னிலையிலும் கிருஷ்நேந்துவை கன்னத்தில் அறைந்து காலால் உதைத்தார். பின் அவனை அனைவர் முன்னிலையிலும் தோப்புக்கரணம் போட வைத்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த சிறுவனின் தாயாரும் சிறுவனை திட்டி, அடித்தார்.

    கடையின் முன் கிடந்த சிப்ஸ் பாக்கெட்டை மட்டும் தான் எடுத்துக் கொண்டதாகவும், அதற்கு பணம் செலுத்த இருந்ததாகும் சிறுவன் கூறினான். ஆனால் கடைக்காரர் அவரை நம்பவில்லை, அவன் பொய் சொன்னதாக குற்றம் சாட்டினார்.

    இந்த சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்து அவமானப்படுத்தப்பட்ட கிருஷ்நேந்து தனது தாயுடன் வீட்டிற்குச் சென்றான். அவன் தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டான். நீண்ட நேரமாகியும் கிருஷ்நேந்து வெளியே வராததால், அவரது தாயார் சந்தேகமடைந்து, உள்ளூர்வாசிகளின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு கிருஷ்நேந்து மயக்கத்தில் வாயில் நுரை தள்ளியபடி கிடப்பதைக் தாய் கண்டார்.

    சிறுவனுக்கு அருகில் பாதி காலியான பூச்சிக்கொல்லி டப்பாவும், அவன் வங்காள மொழியில் எழுதிய ஒரு கடிதமும் இருந்தன.

    "அம்மா, நான் திருடன் இல்லை. நான் எதையும் திருடவில்லை. நான் சென்றபோது மாமா (கடைக்காரர்) அங்கு இல்லை. திரும்பி வரும் வழியில் சாலையில் ஒரு குர்குரே பாக்கெட் இருப்பதைக் கண்டு அதை எடுத்துக்கொண்டேன்.

    எனக்கு குர்குரே மிகவும் பிடிக்கும். இவைதான் என் கடைசி வார்த்தைகள். என்னை மன்னியுங்கள்" என்று அந்தக் கடிதத்தில் சிறுவன் கிருஷ்ணேந்து எழுதியிருந்தான். கிருஷ்ணேந்து தம்லுக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டான்.

    ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும் கடை உரிமையாளர் தப்பி ஓடிவிட்டார்.  

    • கொல்கத்தாவில் முக்கிய இடங்களில் மீது 8 முதல் 10 டிரோன் போன்ற மர்ம பொருள் பறந்ததால் பரபரப்பு.
    • உளவு பார்க்க அனுப்பப்பட்டதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள முக்கியமான இடங்களில் 8 முதல் 10 டிரோன் போன்ற மர்ம பொருள் பறந்ததால், உளவு பார்ப்பதற்கான அனுப்பப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

    தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் மகேஷ்தலாவில் இருந்து டிரோன் போன்ற மர்மப் பொருட்கள் பறந்து வந்ததாக கூறப்படுகிறது. வித்யாசாகர் கடலில் உள்ள 2-ஆவது ஹூக்ளி பாலம், ராணுவத்தின் கிழக்கு கமாண்ட் தலைமையகம், ஹேஸ்டிங்ஸ் போன்ற இடங்களில் இந்த மர்மபொருள் பறந்துள்ளது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. உளவு பார்க்க அனுப்பப்பட்டதா? உள்ளிட்ட அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியபோது, இந்தியாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் உள்ளிட்ட பலர் பாகிஸ்தானுக்காக உளவு பணியில ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ×