என் மலர்
இந்தியா

சட்டம், ஒழுங்கை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்ட மத்திய மந்திரி
- மாநில சட்டம் ஒழுங்கு, சோனாகாச்சி போல இருக்கிறது என கூறியுள்ளார்.
- சுகந்தா மஜும்தார் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவரும், மத்திய மந்திரியுமான சுகந்தா மஜும்தார், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதாவது, மாநில சட்டம் ஒழுங்கு, சோனாகாச்சி போல இருப்பதாக கூறியுள்ளார். சோனாகாச்சி பகுதி, பாலியல் தொழிலுக்கு புகழ்பெற்ற இடமாகும். எனவே அவரது இந்தக் கருத்து மாநில அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, சோனாகாச்சியை சேர்ந்த பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் அங்குள்ள போலீசில் சுகந்தா மஜும்தாருக்கு எதிராக புகார் செய்துள்ளார். அதாவது, பாலியல் தொழிலாளர்களை இழிவுபடுத்தி இருப்பதாக அந்தப் புகாரில் அவர் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக சுகந்தா மஜும்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, மஜும்தாரின் கருத்துக்கு மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அவர் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தினர்.






