என் மலர்tooltip icon

    இந்தியா

    அனைத்து கட்சி பிரதிநிதிகள் வெளிநாடுகள் சென்றுள்ள நிலையில் பிரதமர் மோடியின் விமர்சனம் வருத்தம் அளிக்கிறது: மம்தா பானர்ஜி
    X

    அனைத்து கட்சி பிரதிநிதிகள் வெளிநாடுகள் சென்றுள்ள நிலையில் பிரதமர் மோடியின் விமர்சனம் வருத்தம் அளிக்கிறது: மம்தா பானர்ஜி

    • பயங்கரவாதத்திற்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கும்போது, ​மோடி எங்கள் அரசை விமர்சிக்கிறார்.
    • பிரித்தாளும் கொள்கையை பிரதமர் கொள்கையாக கொண்டுள்ளார்.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் சென்றிருந்தார். இரண்டு இடங்களில் 1,010 கோடி ரூபாய் அளவிலான கியாஸ் வினியோய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அலிபூர்துவாரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பேசினார். மேலும் மம்தா தலைமையில் நடைபெறும் மேற்க வங்க அரசை கடுமையாக விமர்சித்தார்.

    பிரதமர் மோடி பேரணியில் பேசும்போது கூறியதாவது:-

    இன்று, மேற்கு வங்கம் தொடர்ச்சியான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மக்கள் கொடூரமான அரசை (Nirmam sarkar) விரும்பவில்லை. அவர்கள் மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகிறார்கள். அதனால்தான் முழு வங்காளமும் இனி கொடுமையையும் ஊழலையும் விரும்பவில்லை என்று கூறுகிறது.

    பயங்கரவாதிகள் நமது சகோதரிகளின் குங்குமத்தை (Sindoor) துடைக்க துணிந்தார்கள், ஆனால் நமது படைகள் அவர்களுக்கு குங்குமத்தின் வலிமையை உணர்த்தின. பாகிஸ்தான் ஒருபோதும் நினைத்துப் பார்க்காத எல்லை தாண்டிய பயங்கரவாத உள்கட்டமைப்பை நாங்கள் அழித்தோம்.

    பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானால் உலகிற்கு வழங்குவதற்கு சாதகமானது எதுவும் இல்லை. பயங்கரவாதம், படுகொலைகள் பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப்பெரிய நிபுணத்துவம்; போர் நடக்கும் போதெல்லாம் அவர்கள் தோல்வியை எதிர்கொள்கிறார்கள்.

    கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அட்டூழியங்களையும், அங்கு அது கட்டவிழ்த்து விட்ட பயங்கரவாதத்தையும் யாராலும் மறக்க முடியாது. இந்த வங்காள மண்ணிலிருந்து, 140 கோடி இந்தியர்களின் சார்பாக, ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்று நான் அறிவிக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில் கொடுத்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்க பல்வேறு நாடுகளுக்கு அனைத்துக் கட்சிக் குழுக்கள் சென்றுள்ளபோது, பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்தை விமர்சித்திருப்பது வருத்தம் அளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கும்போது, மோடி எங்கள் அரசை விமர்சிக்கிறார்.

    பிரித்தாளும் கொள்கையை பிரதமர் கொள்கையாக கொண்டுள்ளார். அரசியல் கவனத்தை ஈர்ப்பதற்காக மத்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிட்டுள்ளது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×