என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • உன்னாவோவின் ஹசன்கஞ்சில் வசிப்பவர் ரஞ்சித் சௌராசியா.
    • வீடியோ வைரலானதால் ரெயில்வே போலீசின் கவனத்தையும் ஈர்த்தது.

    இன்ஸ்டாகிராம் ரீலிஸ் எடுப்பது சிலருக்கு வெறியாக மாறி வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ்வில் ஒரு நபர் ரெயில் தண்டவாளத்தில் படுத்து ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

    உன்னாவோவின் ஹசன்கஞ்சில் வசிக்கும் ரஞ்சித் சௌராசியா தனது ரீலிஸ்-இல், ரெயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்துக் கொள்கிறார். அவர் படுத்திருக்க, ரெயில் அவரை கடந்து செல்கிறது. சற்று பிசகியிருந்தாலும் அவர் ரெயிலில் மாட்டி இழுபட்டு அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

    இந்த வீடியோ வைரலானதால் ரெயில்வே போலீசின் கவனத்தையும் ஈர்த்தது. இது ரஞ்சித் சௌராசியா கைதுக்கு வழிவகுத்தது.

    • தொடர்ந்து மறுநாள் 3 பேர் ஓட்டலுக்கு வந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
    • பின்னர் வேறு சிலர் அந்த பெண்ணுக்கு போதைப்பொருள் கலந்த நூடுல்சை கொடுத்துள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் வடக்கு வாரணாசியில் உள்ள லால்பூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் 29-ந் தேதி தனது தோழியை பார்க்க செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

    அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் இளம்பெண் கிடைக்கவில்லை. இதுகுறித்து கடந்த 4-ந் தேதி போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் அன்றைய தினம் அந்த இளம்பெண் பாண்டேபூர் பகுதியில் போதையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    பின்னர் அவர் வீட்டுக்கு சென்ற நிலையில் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அவர் சம்பவத்தன்று தனது தோழியை பார்க்க சென்ற போது தமக்கு அறிமுகமான நண்பர் ஒருவரை சந்தித்துள்ளார். அவர் அந்த பெண்ணை மோட்டார்சைக்கிளில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    பின்னர் அவரை நடேசர் பகுதியில் விட்டு சென்றுள்ளார். அங்கு 5 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்று போதைப்பொருள் கொடுத்து கூட்டுபலாத்காரம் செய்துள்ளனர்.

    தொடர்ந்து மறுநாள் 3 பேர் ஓட்டலுக்கு வந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் வேறு சிலர் அந்த பெண்ணுக்கு போதைப்பொருள் கலந்த நூடுல்சை கொடுத்துள்ளனர். இதில் அவர் மயங்கியதும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அப்பகுதியில் உள்ள காட்டில் விட்டு சென்றுள்ளனர்.

    மறுநாள் போதை தெளிந்து அந்த பெண் தனது தோழி வீட்டுக்கு சென்றுள்ளார். போதைப்பொருள் தாக்கத்தால் தூங்கிய அவர் மறுநாள் தான் வீட்டுக்கு சென்று, தன்னை 7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். கூட்டு பாலியல் வன்கொடுயைில் ஈடுபட்டவர்களில்  6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என கூறப்படுகிறது. அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • மெதுவாக நடந்து சென்று மின்கம்பியில் படர்ந்து இருந்த தழையை சாப்பிட்டது.
    • சூப்பர் மேன் தங்கை என சமூக வலைதளத்தில் வைரல்.

    திருப்பதி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மின் கம்பியில் தாவரம் ஒன்று படர்ந்து வளர்ந்திருந்தது. இதனை கண்ட ஆடு ஒன்று அதனை சாப்பிட முடிவு செய்தது. அப்பகுதியில் உள்ள கட்டிடத்தில் ஆடு ஏறியது. பின்னர் கட்டிடத்திலிருந்து மின்சார கம்பிக்கு சென்றது.

    2 மின்சார கம்பிகளில் தனது கால்களை வைத்து சாகசம் செய்தபடி மெதுவாக நடந்து சென்று மின்கம்பியில் படர்ந்து இருந்த தழையை சாப்பிட்டது.


    இதனைக் கண்ட பொதுமக்கள் ஆடு செய்யும் சாகசங்களை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோவை பார்த்தவர்கள் பல்வேறு பதிவுகளை செய்து வருகின்றனர்.

    இந்த ஆடு எப்படி மின்சார கம்பியில் ஏறியது மற்ற ஆடுகளை போல் அல்லாமல் சூப்பர் மேன் தங்கை. இதனை பார்க்கும் போது எனது இதயம் நடுங்குகிறது. மின்சாரம் தாக்கி ஆடு கீழே விழுமோ என அதிர்ச்சி அடைந்தேன்.

    இந்த ஆடு சாதாரண ஆடு இல்லை ஸ்பைடர் மேன் ஆடு எனவும், இது குரங்கா அல்லது சர்க்கசில் இருந்து தப்பி வந்த விலங்கா, ஆடுகள் பொதுவாக தரையில் தான் புல் மேயும் இந்த ஆடு மின்சாரக் கம்பியில் உள்ளே தேடி சென்றுள்ளது என கிண்டலாக பதிவிட்டு உள்ளனர்.

    மின்சாரத்துறை அதிகாரிகள் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்

      மத்தியப் பிரதேசத்தில் ஒரு போலி மருத்துவர் நோயாளிகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

      மத்தியப் பிரதேசத்தின் டாமோ நகரில் உள்ள ஒரு தனியார் மிஷனரி மருத்துவமனையில், பிரட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணரான என்.ஜான் கெம் எனக் கூறி ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் மருத்துவராக சேர்ந்துள்ளார். பொறுப்பேற்ற பின் ஒரு மாதத்திலேயே இவர் இதய அறுவை சிகிச்சை செய்த 7 பேர் குறுகிய காலத்தில் உயிரிழந்தனர்.

      மாவட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர் போலி மருத்துவர் என்பதும், இவரின் உண்மை பெயர் நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பது தெரியவந்தது.

      இதனையடுத்து தலைமறைவாக இருந்த போலி டாக்டரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜில் இருந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். 

      • செக் குடியரசைச் சேர்ந்த 28 வயது பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
      • நடந்து செல்லும்போது மர்ம நபரால் தகாத முறையில் தொட்டு துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

      உத்தரப் பிரதேசத்தில்  தாஜ்மகாலைப் பார்வையிட வந்த செக் குடியரசைச் சேர்ந்த 28 வயது பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

      பாதிக்கப்பட்ட செக் நாடு பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் தாஜ்மகாலை பார்வையிட ஷாம்ஷான் காட் சாலையில் நடந்து செல்லும்போது மர்ம நபரால் தகாத முறையில் தொட்டு துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

      இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சி.சி.டி.வி கேமரா பதிவை ஆராய்ந்ததில் அந்த நபர் ஆக்ராவை சேர்ந்த கரண் ரத்தோர் என்று தெரியவந்தது.

      இதைத்தொடர்ந்து அவரை தேட பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டதாக துணை கமிஷ்னர் சையத் அரீப் அகமது தெரிவித்தார்.

      • ராமநாமியை முன்னிட்டு காவிக்கொடிகளுடன் அங்கு பைக் பேரணி நடத்தினர்.
      • பின்னணியில் உரத்த இசைக்கு மத்தியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடுவதும் இடம்பெற்றுள்ளன.

      உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராம நவமியைக் கொண்டாடும் போது, இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர், காவி கொடிகளை ஏந்தியவாறு மசூதியின் மீது ஏறி அட்டகாசம் செய்தனர்.

      ராமநாமியை முன்னிட்டு காவிக்கொடிகளுடன் அங்கு பைக் பேரணி சென்ற இந்துத்துவாவினர் அங்குள்ள சையத் சலார் ஹாஜி தர்காவில் கபளீகரம் செய்துள்ளனர்.

      சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காட்சிகளில், இந்துத்துவாவினர், சையத் சலார் காஜி தர்காவில் ஏறி காவி கொடிகளை அசைப்பதும், பின்னணியில் உரத்த இசைக்கு மத்தியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடுவதும் இடம்பெற்றுள்ளன.

      முன்னதாக கடந்த மார்ச் 26 அன்று மகாராஷ்டிராவின் ரஹுரி மாவட்டத்தில் இந்துத்துவா கும்பல் ஹஸ்ரத் அகமது சிஷ்டி தர்காவுக்குள் நுழைந்து மேலே ஏறி பச்சைக் கொடியை அகற்றி, காவி கொடியை ஏற்றிய காட்சிகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

      • ஒரு ஜூஸ் கடை வியாபரிக்கும் அதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
      • வருமான வரி செலுத்தும் அளவிற்கு கூட தான் சம்பாதிக்கவில்லை என வேதனை தெரிவித்தார்.

      சமீப காலமாக சாமானியர்களுக்கு கொடிக்கணக்கில் ஜிஎஸ்டி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

      கடந்த வாரம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தள்ளுவண்டி முட்டை கடைக்காரருக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்தக்கோரி வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வந்தது.

      உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஜூஸ் கடை வியாபரிக்கும் அதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களின் பெயரில் நடந்த பணப்பரிமாற்றங்களை மேற்கோள் காட்டி இந்த நோட்டீஸ்கள் வந்திருந்தன.

      இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் மாதம் ரூ.5,000 ஊதியம் பெறும் ராஜ்குமார் சிங் என்ற வாட்ச்மேனுக்கு ரூ.2.2 கோடி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

      இந்த நோட்டீஸை பார்த்து அதிர்ந்துபோன ராஜ்குமார், வருமான வரி செலுத்தும் அளவிற்கு கூட தான் சம்பாதிக்கவில்லை என வேதனை தெரிவித்தார். இவரின் பேன் கார்ட் மூலம் சட்டவிரோதமாக பரிமாற்றம் நடந்துள்ளதா என விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

      • இந்த தம்பதிக்கு மூன்றரை வயதில் ஜான்வி மற்றும் இரண்டரை வயதில் மான்வி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
      • நவராத்திரி பூஜைக்காக பழங்கள், இனிப்புகள், பூக்கள் ஆகியவற்றை வாங்கி வைத்து அவர் காத்திருந்தார்.

      9 நாட்கள் கொண்டாடப்படும் இந்துக்கள் பண்டிகையான நவராத்திரி கடந்த மார்ச் 30 ஆம் தேதி தொடங்கியது. வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மாதவிடாய் காரணமாக நவராத்திரி பூஜை செய்ய முடியைல்லையே என்ற வருத்தத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

      உத்தரப் மாநிலம் ஜான்சி மாவட்டத்தின் கோட்வாலி நகரத்தின் கீழ் உள்ள பன்னா லால் கோலா குவான் பகுதியில் கணவர் முகேஷ் சோனியுடன் மனைவி பிரியான்ஷா சோனி (36 வயது) வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு மூன்றரை வயதில் ஜான்வி மற்றும் இரண்டரை வயதில் மான்வி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

      மிகுந்த கடவுள் பக்தி உடைய பிரியான்ஷா சோனி இந்த வருட நவராத்திரியை கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் போல ஆர்வமாக காத்திருந்தார். நவராத்திரி பூஜைக்காக பழங்கள், இனிப்புகள், பூக்கள் ஆகியவற்றை வாங்கி வைத்து அவர் காத்திருந்தார்.

      நவராத்திரியின் முதல் நாளான கடந்த மாதம் 30ம் தேதி முகேஷ் சோனியின் மனைவி பிரியன்ஷா சோனிக்கு மாதவிடாய் ஏற்பட்டது. இதனால் அவர் பூஜையில் பங்கேற்கவில்லை.

      மாதவிடாய் காலத்தில் பூஜையில் பங்கேற்பது அசுத்தம் என்பது இந்து மதத்தில் நிலவும் பல்வேறு மூடநம்பிக்கைகளுள் ஒன்று. பிரியன்ஷா சோனியும் அதை நம்பினார். எனவே ஒரு வருடமாக நவராத்திரிக்காக காத்திருந்தும் தற்போது விரதம் இருக்கவோ, பூஜையில் பங்கேற்கவோ முடியாதது குறித்து அவர் மிகுந்த மன வருத்தத்துக்கு ஆளானார்.

      அடுத்த நாள் கணவர் கடைக்கு சென்றதும் மனைவி பிரியன்ஷா சோனி விஷம் அருந்தினார். வீட்டுக்கு வந்த கணவன் அவரை மீட்டு ஜான்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தார்.

      அங்கு சிகிச்சையில் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இதன்பின் வீட்டுக்கு அழைத்துவரப்பட்ட பின்னர் மீண்டும் அவரது நிலை மோசமடைந்தது. மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சையின் போது இறந்தார்.  

      • மனைவி வேலைக்கு செல்லும் நிலையில் கணவர் ஹைதர் வேலையில்லாமல் இருந்துள்ளார்.
      • அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்தார்.

      உத்தரப் பிரதேசத்தில் மனைவி தகாத உறவில் இருப்பதாக சந்தேகித்து அவரை கணவன் சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

      உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தவர் அஸ்மா கான் (44 வயது). நொய்டாவில் செக்டார் 15 இல் தனது கணவன் நூருல்லா ஹைதர் (55 வயது) மற்றும் ஒரு மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். கணவன்-மனைவி இருவரும் பொறியியல் பட்டதாரிகள். மனைவி வேலைக்கு செல்லும் நிலையில் கணவர் ஹைதர் வேலையில்லாமல் இருந்துள்ளார்.

      இந்நிலையில் நேற்று வீட்டில் வைத்து மனைவியில் தலையில் சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டு, இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை மீட்டனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சுத்தியலையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

      அதிகாரிகளின் கூற்றுப்படி, அஸ்மாவுக்கு திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு இருப்பதாக ஹைதர் சந்தேகித்தார். இந்த சந்தேகத்தின் காரணமாக, அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்தார். மேலும் தம்பதியினரிடையே தொடர்ந்து சண்டைகள் நடந்து வந்தன.

      இதன் உச்சமாக நேற்று காலை 5 மணியளவில் அவர் மனைவியை கொலை செய்தார். தனது தாய் கொலை செய்யப்பட்டதாக மகன் உறவினர்களுக்கு போன் மூலம் கூறியுள்ளான். அவர்கள் அங்கு வருவதற்குள் கணவனே நேரடியாக போலீசில் சரணடைந்துள்ளார். 

      • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ராஷ்ட்ரிய லோக் தளம் ஆதரவு அளித்தது.
      • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தலைவரான ரிஸ்வி கட்சியில் இருந்து விலகினார்.

      லக்னோ:

      பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேறியது.

      இதையடுத்து, நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.

      இந்நிலையில், மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும் ஜெயந்த் சவுத்ரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் உ.பி. மாநில பொதுச்செயலாளரான ரிஸ்வி கட்சி மற்றும் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் ஆயிரக்கணக்கானோர் கட்சியில் இருந்து விலக உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

      • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்தது.
      • நான் ஒருபோதும் விக்கெட்டுகளைத் தேடுவதில்லை என்றார் பாண்ட்யா.

      லக்னோ:

      ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 16வது லீக் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது.

      இந்நிலையில், தோல்விக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:

      ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் தோல்வி அடைந்தோம். ஒரு அணியாக நாங்கள் வெற்றி பெறுகிறோம், ஒரு அணியாக நாங்கள் தோற்கிறோம். நான் முழு உரிமையையும் ஏற்றுக்கொள்கிறேன்.

      எங்களுக்கு சில ஷாட்கள் தேவைப்பட்டன. திலக் அவற்றைப் பெறவில்லை. கிரிக்கெட்டில் சில நாட்கள் வரும், நீங்கள் முயற்சிக்கும் போது ஆனால் ரன்கள் வருவதில்லை.

      நல்ல கிரிக்கெட்டை விளையாடுங்கள், நான் அதை எளிமையாக வைத்திருக்க விரும்புகிறேன். சிறந்த முடிவுகளை எடுங்கள், பந்துவீச்சில் புத்திசாலித்தனமாக இருங்கள், பேட்டிங்கில் வாய்ப்புகளை எடுங்கள்.

      நீங்கள் தோற்கும்போது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால் களத்தில், 10-12 ரன்கள் நாங்கள் அதிகமாகக் கொடுத்தோம். இறுதியில் நாங்கள் தோல்வி அடைந்தோம்.

      எப்போதும் என் பந்துவீச்சை ரசித்தேன். எனக்கு அதிக விருப்பங்கள் இல்லை. நான் ஒருபோதும் விக்கெட்டுகளைத் தேடுவதில்லை. ஆனால் பேட்ஸ்மேன்கள் தவறுகளைச் செய்ய வைக்க முயற்சிக்கிறேன். இன்று அந்த நாட்களில் ஒன்றாகும். மும்பை அணி மீண்டும் எழுச்சி பெறும் என தெரிவித்தார்.

      • டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
      • முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 203 ரன்கள் குவித்தது.

      லக்னோ:

      ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.

      அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் 60 ரன்னும், மார்க்ரம் 53 ரன்னும் அடித்தனர்.

      மும்பை அணி சார்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.

      இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. வில் ஜாக்ஸ் 5 ரன்னிலும், ரிக்கல்டன் 10 ரன்னிலும் அவுட்டாகினர்.

      நமன் தீர் அதிரடியாக ஆடி 24 பந்தில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 67 ரன்னில் வெளியேறினார். திலக் வர்மா 25 ரன்னில் அவுட்டானார்.

      இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா 28 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

      இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது. மும்பை அணி பெற்ற 3-வது தோல்வி இதுவாகும்.

      ×