என் மலர்
உத்தரப் பிரதேசம்
- மொபைல் போனில் பத்து ஆபாச வீடியோக்களைக் கண்டறிந்தனர்.
- கெஸ்ட் ஹவுஸை மூடிய போலீசார் சௌரப்-ஐ கைது செய்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த பெண் பக்தர் குளிக்கும்போது படம்பிடித்த கெஸ்ட் ஹவுஸ் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
நேற்று (ஏப்ரல் 11) லை 6:30 மணியளவில் அயோத்தி ராமர் கோயிலின் கேட் எண் 3 க்கு முன்னால் உள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் குளியறையில் 30 வயது பெண் பக்தர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த விடுதியின் சமையல்காரர் சௌரப் ரகசியமாக அவரை படம்பிடித்துக்கொண்டிருந்தபோது கையும் களவுமாக சிக்கினார்.
தொடர்ந்து தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் அவரின் மொபைல் போனில் பத்து ஆபாச வீடியோக்களைக் கண்டறிந்தனர்.
அந்த கெஸ்ட் ஹவுசில் தங்கும் பெண்களை ஆபாசமாக படம் பிடிப்பதை அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார். மேலும் அந்த கெஸ்ட் ஹவுஸ் முறையான பதிவு இன்றி செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து கெஸ்ட் ஹவுஸை மூடிய போலீசார் சௌரப்-ஐ கைது செய்தனர்.
முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜில் கடந்த முதல் பிப்ரவரி இறுதி வரை நடந்த மகா கும்பமேளாவின் போது பெண்கள் குளித்து உடை மாற்றும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- விஷாலின் சகோதரனுடன் உடல் உறவு கொள்ளும்படி தன்னை மாமியார் வீட்டார் வற்புறுத்தினர்
- மாமியார் புஷ்பா தேவி ஹாபூர் நகராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதிக்கு ஆறு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் என ஒன்பது உடன்பிறப்புகள் உள்ளனர். சகோதரர்களில் ஒருவரான நரேஷ் உடைய மகள் ஆலிஸ். ஆலிஸ் கடந்த 2023 இல் விஷால் என்பவரை மணந்து ஹராப்பூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் ஆலிஸ் அவரது மாமியாரும் ஹாபூர் நகராட்சி மன்றத் தலைவருவமான புஷ்பா தேவி, கணவன் விஷால், மாமனார் ஸ்ரீபால் சிங் உட்பட ஏழு பேர் மீது வரதட்சணை கொடுமை புகார் கொடுத்துள்ளார்.
தனது மாமியார் இந்திராபுரத்தில் ரூ.50 லட்சமும், ஒரு பிளாட்டும் கேட்டு மிரட்டியதாக ஆலிஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது மட்டுமல்லாமல், திருமணத்திற்கு முன்பு, கணவர் விஷால் உடலை கட்டமைக்க ஸ்டீராய்டு ஊசிகளை எடுத்துக்கொண்டதாகவும், அதன் காரணமாக அவர் ஆண்மைக் குறைவு அடைந்ததாகவும் ஆலிஸ் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு கணவன் தன்னை விட்டுப் பிரிந்து வாழத் தொடங்கியதாகவும், குழந்தை பெறுவதற்காக, தன்னை விஷாலின் சகோதரனுடன் உடல் உறவு கொள்ளும்படி தன்னை மாமியார் வீட்டார் வற்புறுத்தினர் என்றும் ஆலிஸ் தெரிவித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியில் உறுப்பினர்களாக இருந்த ஆலிஸ் உடைய மாமியார் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அரசியல் களத்திலும் விவாதப் பொருளாக உள்ளது.
- உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார்.
- தேசத்திற்கு சேவை செய்யும் உணர்வோடு, ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திற்காகவும் நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம்.
வாரணாசி:
பிரதமா் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம், வாரணாசிக்கு இன்று சென்றாா். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.3,880 கோடி மதிப்பீட்டிலான 44 நலத் திட்டங்களை பிரதமா் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
பிரதமா் தொடங்கி வைத்த திட்டங்களில் பெரும்பாலானாவை கிராமப்புற மேம்பாடு சாா்ந்தவையாகும். இதில் 130 குடிநீா் திட்டங்கள், 100 புதிய அங்கன்வாடி மையங்கள், 356 நூலகங்கள், பிண்ட்ரா பகுதியில் புதிய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசுக் கலை கல்லூரி ஆகியவை அடங்கும்.
ராம் நகரில் உள்ள காவல்துறை வளாகத்தில் ஒரு விடுதியையும் பிரதமா் மோடி திறந்து வைத்தாா். நகா்ப்புற வளா்ச்சித் திட்டமாக, ரெயில்வே மற்றும் வாரணாசி மேம்பாட்டு ஆணையம் இணைந்து சாஸ்திரி மற்றும் சாம்னே படித்துறையில் மேற்கொண்ட மறுசீரமைப்புத் திட்டங்களை அவா் தொடங்கி வைத்தார்.
வாரணாசியில் புதிதாக 15 துணை மின்நிலையங்கள், புதிய மின்மாற்றிகள், 1500 கி.மீ. தொலைவுக்கு புதிய மின்பாதை அமைப்பு உள்பட ரூ.2,250 கோடி மதிப்பீட்டிலான 25 திட்டங் களுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார்.
வாரணாசி விமான நிலையத்தின் விரிவாக்கமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம், நகரில் 3 புதிய மேம்பாலங்கள் மற்றும் பல்வேறு சாலைகளின் விரிவாக்கத் திட்டங்கள், ஷிவ்பூா், உ.பி. கல்லூரி ஆகிய இடங்களில் 2 புதிய விளையாட்டு மைதானங்கள், பள்ளி புனரமைப்புப் பணிகள் ஆகிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார்.
ரோஹனியா பகுதியில் உள்ள மெந்திகஞ்சில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் இருந்து பிரதமா் மோடி திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காசி இனி பழங்காலத்தின் சின்னம் மட்டுமல்ல, அது முன்னேற்றத்தின் மாதிரியாக கூடவும் இருக்கிறது. 10 ஆண்டுகளில் வாரணாசி மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. வளர்ச்சியில் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது.
வரும் மாதங்களில், அனைத்து வளர்ச்சிப் பணிகளும் நிறைவடையும் போது, வாரணாசிக்குச் செல்வதும், அங்கிருந்து திரும்புவதும் எளிதாகிவிடும். வேலை, வணிகங்களில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டுத் துறையில் காசி இளைஞர்களுக்கு வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த பாடுபடுகிறோம்.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அதற்கு ஒரு புதிய ஆற்றலை வழங்குவதற்கும் செயல்பட்டு வருகிறோம். தேசத்திற்கு சேவை செய்யும் உணர்வோடு, ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திற்காகவும் நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். இதற்கு நேர்மாறாக, அதிகார வெறி கொண்டவர்கள் இரவும் பகலும் அரசியல் விளையாட்டுகளை விளையாடுகிறார்கள்.
இது தேசிய நலனுக்காக அல்ல. அவர்களின் குடும்பத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் ஒருமித்த கவனம் செலுத்துகிறார்கள்.
சிலர் வாரிசு அரசியலை நம்புகிறார்கள். அதிகாரத்தைப் பெறுவதற்காக விளையாடுபவர்கள் தங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்தில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பிரதமர் மோடியை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சால்வை அணிவித்து வரவேற்று நினைவுப் பரிசு வழங்கினார்.
வாரணாசி தொகுதிக்கு பிரதமர் மோடி 50-வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பிரதமர் மோடி வாரணாசிக்கு சென்றதும் அங்கு 19 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.
அவரிடம் போலீஸ் கமிஷனர், மாவட்ட நீதிபதி உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர். அப்போது குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
- சம்பவம் நடந்து அன்று காலை அவளை வீட்டிற்கு அழைத்தார்கள்.
- முழு குடும்பமும் ஒரு அறையில் அடைத்து வைத்து அவளைத் தாக்கினர்.
உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் 23 வயது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
தனது வீட்டின் கண்ணாடியில் "I QUIT" என்ற வாசகத்தை லிப்ஸ்டிக்கில் எழுதி வைத்துவிட்டு அவர் தற்கொலை செய்திருக்கிறார்.
ஜான்சியில் உள்ள காதியா படக், இமாம்வாடாவைச் சேர்ந்த அந்தப் பெண், ஏப்ரல் 9 ஆம் தேதி காலை தனது அறையில் இறந்து கிடந்தார்.
அவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி, அவர் நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு முன்பு சிகிச்சையின் போது சந்தித்த ஆசாத் என்ற பல் மருத்துவருடன் உறவில் இருந்தார். இந்த உறவு திருமண வாக்குறுதியாக வளர்ந்தது. இருப்பினும், ஆசாத் சமீபத்தில் வேறொருவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இதனால் இருவரிடையேயும் பிரச்சனை வளர்ந்தது.
பெண்ணின் தாயுடைய கூற்றுப்படி, சம்பவம் நடந்து அன்று காலை அவளை டாக்டரின் குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்தார்கள். அங்கு அவரின் முழு குடும்பமும் ஒரு அறையில் அடைத்து வைத்து அவளைத் தாக்கினர். இதனால் மனமுடைந்த மகள் வீட்டுக்கு வந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார்.
மேலும் அந்த டாக்டர் தனது மகளை போன்று பல பெண்களை ஏமாற்றியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். டாக்டரின் நிச்சயதார்த்தமன்று அங்கு சென்று மற்றொரு பெண் தனக்கு நியாயம் கேட்டு பிரச்சனை செய்ததாக தற்கொலை செய்த மாணவியின் தாய் தெரிவித்துள்ளார். இதற்கிடையே பெண்ணின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]
- ஜாமீன் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங் விசாரித்தார்.
- அதற்கு அவளும் பொறுப்பு என்றும் முடிவு செய்யலாம் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் "அவரே பிரச்சனையை வரவழைத்துக் கொண்டார்" என்றும், இந்த சம்பவத்திற்கு அவரும்தான் பொறுப்பு என்றும் கூறி குற்றவாளிக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலை பயின்று வந்த மாணவி கடந்த 2024 செப்டெம்பரில் தோழிகளுடன் டெல்லியில் உள்ள ஒரு பாருக்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனேவே தெரிந்த சில ஆண் நண்பர்களை அவர்கள் சந்தித்துள்ளனர்.
நள்ளிரவானதால், அதில் ஒருவர் தன்னை அவன் வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தியதாகவும், ஆனால் வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், குர்கானில் உள்ள ஒரு உறவினரின் பிளாட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்திருந்தார்.
இதில் குற்றம்சாட்டப்பட்டவர் கடந்த டிசம்பர் 2024 இல் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது ஜாமீன் கேட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது ஜாமீன் மனுவில், அந்தப் பெண் ஓய்வெடுக்க விரும்பியதால் தன்னுடன் விருப்பத்துடன் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் அவளை உறவினரின் குடியிருப்புக்கு அழைத்துச் செல்லவில்லை அல்லது பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும், சம்மதத்துடன் உடலுறவு கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஜாமீன் மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங், " பாதிக்கப்பட்ட பெண், முதுகலைப் பட்டதாரி மாணவி என்பதால், அவரது செயல்களின் ஒழுக்கத்தையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தவராகவும் திறமையானவராகவும் இருந்தார் என்பதை காவல்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.
பாதிக்கப்பட்டவரின் குற்றச்சாட்டு உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவரே பிரச்சனையை வரவழைத்துக் கொண்டார். அதற்கு அவரும் பொறுப்பு என்று முடிவு செய்யலாம் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது" என்று கூறி குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
- உ.பியின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதுடன் மழை பெய்தது.
- இதன் காரணமாக பதேபூர், அசம்கர்க் பகுதியில் தலா 3 பேர் பலியாகினர்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசியதுடன் மழை பெய்தது.
இதன் காரணமாக பதேபூர், அசம்கர்க் பகுதியில் தலா 3 பேர் பலியாகினர்.
பெரோசாபாத், கான்பூர் தேஹட், சீதாப்பூர் மாவட்டங்களில் தலா 2 பேரும், காஜிப்பூர், கோண்டா, அமேதி, சந்த் கபிர் நகர், சித்தார்த்நகர், பாலியா, கன்னோஜ், பாராபங்கியில் தலா ஒருவரும் பலியாகினர்.
ஏராளமான கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால், விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இடி, மின்னலுடன் பெய்த மழையில் சிக்கி 22 பேர் பலியானதற்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார். மேலும், பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
- பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தருமாறு வாக்குவாதம்.
- வாக்குவாதம் அதிகரிக்க மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டனர்.
பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப மறுப்பு தெரிவித்த பெட்ரோல் பங்க் மானேஜரை இருவர் சுட்டுக்கொலை செய்த கொடூர சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சிகந்த்ராபாத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் பெட்ரோல் நிரப்ப சொல்லியுள்ளனர். ஊழியர் பெட்ரோல் நிரப்பியுள்ளார். பின்னர் கையில் உள்ள பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப கூறியுள்ளனர்.
இதற்கு ஊழியர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், மானேஜர் கூறினால் நிரப்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதனால் மானேஜரிடம் சென்று பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல நிரப்ப கூறியுள்ளனர். அவர் மறுப்பு தெரிவிக்க மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கும், பெட்ரோல் பங்க் மானேஜருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் அதிகரிக்க கோபம் அடைந்த இருவரும், பெட்ரோல் பங்க் மானேஜரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் மானேஜர் படுகாயம் அடைந்து கீழே சரிந்தார். உடனே இருவரும் தப்பி ஓடிவிட்டனர். மானேஜரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மானேஜர் உயிரிழந்தார்.
போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மரங்களைப் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பு விண்ணப்பதாரர்களிடமே உள்ளது.
- இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதை ஊக்குவிக்கிறது.
லக்னோ:
பல்வேறு தேவைகளுக்காகவும், வசதிகளுக்காகவும் மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் வெப்பநிலை 45 முதல் 50 டிகிரி செல்சியசை தொட்டு சுட்டெரித்து வருகிறது.
இந்நிலையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, மரங்கள் நடுவதை ஊக்குவிக்க உத்தர பிரதேச மாநிலத்தின் மதுரா கலெக்டர் வித்தியாசமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். துப்பாக்கி லைசென்ஸ் வேணும் என்றால் 10 மரத்தை நடவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
விண்ணப்பதாரர்கள் மாவட்டத்திற்குள் எங்கும் தனியார் நிலத்திலோ அல்லது பொது நிலத்திலோ 10 மரங்களை நடவேண்டும். விண்ணப்பத்தை தோட்டத்திற்கான புவி-குறியிடப்பட்ட சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆயுத உரிமங்களைப் பெறுவதற்கு முன்னர் இருந்த அனைத்து நிபந்தனைகளுக்கும் கூடுதலாக புதிய நிபந்தனை பொருந்தும்.
இந்த நடவடிக்கை குடிமக்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மரங்களைப் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பு விண்ணப்பதாரர்களிடமே உள்ளது. நடப்பட்ட மரக்கன்றுகளின் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கு பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இது ஒரு முக்கியமான படியாகும். இந்த முயற்சி நிர்வாகப் பொறுப்புகளுடன் ஒத்துப்போவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பேணுவதில் குடிமக்களின் கூட்டுக் கடமையையும் வலுப்படுத்துகிறது என தெரிவித்தார். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் இந்த உத்தரவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- ஷப்னம் இந்து மதத்திற்கு மாறி ஷிவானி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார்.
- உ.பி., மதமாற்றத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள ஒரு மாநிலம்.
உத்தரப் பிரதேசத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் தனது 2வது கணவனை உதறிவிட்டு 12 ஆம் வகுப்பு படிக்கும் காதலனை மதம்மாறி மூன்றாவதாக திருமணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) நடந்த ஒரு கோவில் விழாவில், மூன்று குழந்தைகளைக் கொண்ட 30 வயது பெண் ஒருவர் இந்து மதத்திற்கு மாறி 12 ஆம் வகுப்பு மாணவனை மணந்தார் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹசன்பூர் வட்ட அதிகாரி தீப் குமார் பந்த் கூறுகையில், அந்தப் பெண்ணின் பெயர் ஷப்னம். ஏற்கனவே இரண்டு முறை அவர் திருமணம் செய்து கொண்டார்.
ஷப்னம் முதலில் மீரட்டில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பின்னர் அவர் சைதன்வாலி கிராமத்தைச் சேர்ந்த தௌஃபிக்கை மணந்தார். தௌஃபிக் சில வருடங்களுக்கு முன் ஒரு சாலை விபத்துக்குப் பிறகு ஊனமுற்றார்.
சமீபத்தில், 12 ஆம் வகுப்பு படிக்கும் 18 வயதுடைய பையனுடன் ஷப்னம்க்கு காதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஷப்னம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தௌஃபிக்கிடம் விவாகரத்து பெற்றார். பின்னர், ஷப்னம் இந்து மதத்திற்கு மாறி ஷிவானி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு 18 வயது காதலனை இன்று மணந்து கொண்டார்.
உ.பி., மதமாற்றத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள ஒரு மாநிலம். வலுக்கட்டாயமாக, ஏமாற்றி அல்லது வேறு எந்த மோசடி வழிகளிலும் மத மாற்றத்தைத் தடை செய்கிறது. ஆனால் இந்த இவர்களின் விஷயத்தில் இதுவரை எந்த கட்டாயப்படுத்தலும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
- வீட்டிற்குள் 40 வயது ஷபினா மற்றும் அவரது 9 வயது மகள் இனயா ஆகியோரின் சிதைந்த உடல்கள் கிடந்தன.
- ஷபினா இவரின் இரண்டாவது மனைவி.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் பெண், அவரது 9 வயது மகள் ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆக்ராவின் ஜகதீஷ்புராவில் பூட்டிய வீட்டிற்குள் 40 வயது ஷபினா மற்றும் அவரது 9 வயது மகள் இனயா ஆகியோரின் சிதைந்த உடல்கள் ஒரு போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக இன்று போலீசார் தெரிவித்தனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் முன்னர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் குழு கதவை உடைத்து பார்த்தபோது, அறைக்குள் ஷபினா மற்றும் அவரது மகள் இனயாவின் உடல்கள் இருப்பதைக் கண்டனர்.
அவை மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. மேலும் ஷபினாவின் கணவர் ரஷீத்தை காணவில்லை. ஷபினா இவரின் இரண்டாவது மனைவி.
ரஷீத் தனது மனைவியையும் வளர்ப்பு மகளையும் கொன்றுவிட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குற்றவாளியைக் கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
- மாப்பிள்ளை தனது வருங்கால மாமியாருக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார்.
- இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம், அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுக்கு வரன் தேடி வந்தார்.
இதனை தொடர்ந்து அவரது மகளுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைத்தது. இரு வீட்டாரும் திருமணத்திற்கு பேசி முடிவு செய்தனர்.
வருகிற 16-ந்தேதி அவரது மகளுக்கு, வாலிபருடன் திருமணம் செய்ய நிச்சம் செய்தார். திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர். மணப்பெண்ணின் வருங்கால கணவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்தார்.
அப்போது மணமகளின் தாய்க்கும் மாப்பிள்ளைக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது. மணமகளை விட அவரது தாய் அழகாக இருந்தார்.
இதனால் மயங்கிய மாப்பிள்ளை தனது வருங்கால மாமியாருக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார். மருமகன் - மாமியார் இருவரும் செல்போனில் நீண்ட நேரம் பேசி அரட்டை அடித்தனர். அவர்களது நட்பு காதலாக மாறியது.
மணப்பெண்ணின் தாய் வருங்கால மருமகனுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்ததால் வீட்டில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
திருமண ஏற்பாடுகள் சம்பந்தமாக பேசி வருவதாக அந்தப் பெண் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்.
இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மாமியார் தனது மகளுக்கு துரோகம் செய்துவிட்டு வருங்கால மருமகனுடன் வீட்டை விட்டு ஓடி போக முடிவு செய்தார்.
திருமணத்திற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் நேற்று முன்தினம் மருமகனுடன் ஓட்டம் பிடித்தார்.
தனது மகளுக்காக வாங்கி வைத்திருந்த நகைகள், பணத்தையும் எடுத்து சென்று விட்டார்.
வீட்டில் இருந்து வெளியேறிய மணப்பெண்ணின் தாய் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த மணப்பெண்ணின் உறவினர்கள் பீரோவை திறந்து பார்த்தனர். அதிலிருந்த நகை, பணம் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தனர்.
மணமகனின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரும் வீட்டில் இல்லை. இருவரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தன.
இதுகுறித்து உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போனவர்களின் செல்போன் சிக்னல்களை வைத்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சமீபத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரூ.19 லட்சம் கோடியை இழந்தனர்.
- எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது என அகிலேஷ் தெரிவித்தார்.
லக்னோ:
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
முத்ரா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவடைந்த நிலையில், பா.ஜ.க. அரசாங்கத்தின் கீழ் ரூ.33 லட்சம் கோடி மதிப்புள்ள மோசடிகள் மற்றும் முறைகேடுகளை முரண்பாடான தரவுகள் அம்பலப்படுத்தியுள்ளன.
சமீபத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரூ.19 லட்சம் கோடியை இழந்தனர். எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 அதிகரித்துள்ளது.
நாட்டின் மிக முக்கியமான பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
கான்பூரில் பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் வதந்திகளைப் பரப்புவதன் மூலம் அமைதியைக் குலைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.






