என் மலர்
இந்தியா

தெருவில் நடந்து சென்றவரை கொம்பினால் முட்டி மிதித்துக் கொன்ற காளை மாடு - அதிர்ச்சியூட்டும் வீடியோ
- தெருவில் சுற்றித்திரிந்த காளை கொம்பால் சுசிலை முட்டி சுசில் தூக்கி வீசப்பட்டார்
- தடுக்க முயன்ற சுபத்தையும் தாக்கியது.
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் சர்தார் கொட்வாலி பகுதியை சேர்ந்தவர் சுசில் பாஜ்பாய் (42).
இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுவிட்டு உறவுக்கார இளைஞர் சுபம் உடன் தெருவில் நடத்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அந்த தெருவில் சுற்றித்திரிந்த காளை கொம்பால் சுசிலை முட்டி சுசில் தூக்கி வீசப்பட்டார். இளைஞர் சுபம் விரட்ட முயன்றும் மிரண்டு ஓடாத காளை சுசிலை மீண்டும் கொம்பால் முட்டி தாக்கியுள்ளது. தடுக்க முயன்ற சுபத்தையும் தாக்கியது.
காளை கொம்பால் முட்டி, காலினால் மிதித்ததில் சுசில் தலை மற்றும் வயிற்றில் படுகாயம் ஏற்பட்டது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் காளையை விரட்டிவிட்டு, இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருவருக்கும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுசில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுபத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






