என் மலர்tooltip icon

    இந்தியா

    கொலை வழக்கில்  43 ஆண்டுகள் சிறையில் இருந்த 104 வயது முதியவரை நிரபராதி என விடுவித்த உயர்நீதிமன்றம்
    X

    கொலை வழக்கில் 43 ஆண்டுகள் சிறையில் இருந்த 104 வயது முதியவரை நிரபராதி என விடுவித்த உயர்நீதிமன்றம்

    • 1982 ஆம் ஆண்டில், பிரயாக்ராஜ் பிரிவு நீதிமன்றத்தால் லக்கானும் மேலும் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
    • மேல்முறையீட்டு செயல்முறை நடந்து கொண்டிருக்கும்போதே, சக குற்றவாளிகள் மூவர் இறந்துவிட்டனர்.

    கொலைக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட 104 வயது முதியவர், 43 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

    விடுவிக்கப்பட்டவர் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கவுரே கிராமத்தைச் சேர்ந்த லகான்.

    சிறைச்சாலை பதிவுகளின்படி, லகான் 1921 இல் பிறந்தார். 1977 ஆம் ஆண்டு இரு குழுக்கள் இடையே நடந்த மோதலின் போது பிரபு சரோஜ் என்ற நபரைக் கொன்ற வழக்கில் மேலும் மூவருடன் லகான் கைது செய்யப்பட்டார்.

    1982 ஆம் ஆண்டில், பிரயாக்ராஜ் பிரிவு நீதிமன்றத்தால் லக்கானும் மேலும் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, நான்கு குற்றவாளிகளும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

    இருப்பினும், மேல்முறையீட்டு செயல்முறை நடந்து கொண்டிருக்கும்போதே, சக குற்றவாளிகளில் மூவர் இறந்துவிட்டனர்.

    நீண்ட சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு, அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணையை முடித்து, மே 2 அன்று லகான் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கி அவரை விடுவித்தது.

    குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட லகான், கடந்த செவ்வாய்க்கிழமை சிறையில் இருந்து விடுதலையாகி தனது மகள் வீட்டிற்குச் சென்றார்.

    Next Story
    ×